You are here
Home > 2018 > June

டிக் டிக் டிக் – வெற்றி விழா

நேமிசந்த் ஜபக், வி ஹிதேஷ் ஜபக் தயாரிப்பில், சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள படம் டிக் டிக் டிக். இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படமான இந்த படத்தில் ஜெயம் ரவியின் மகனாக அவரது சொந்த மகன் ஆரவ் ரவி நடித்திருந்தார். கடந்த வாரம் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் ஆரவ் ரவி பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கேக் வெட்டி தன் பிறந்த நாளையும் கொண்டாடினார். என் குடும்பமே நிறைய கஷ்டப்படுற குடும்பம். உன் உழைப்பை கொடு, வெற்றி வரும்போது வரும் என்பது தான் என் குடும்பம் கற்றுக் கொடுத்த தாரக மந்திரம். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் ரசிகர்கள் தான். நாம் என்ன கொடுத்தாலும் அதை அவர்கள் ஏற்றுக் கொண்டால் தான் வெற்றி. ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக வந்து பார்க்க காரணம் இயக்குனர் சக்தி. இந்த படத்தில் உங்களுக்கு ஜோடி இல்லை, ஒரு மகன் இருக்கிறான். உங்க மகன் நடிச்சா நல்லா இருக்கும் என்றார்.

3D அனிமேஷன் திரைப்படம் “அனுமனும் மயில்ராவணனும்”.

முதல்முறையாக இந்தியாவில் தயாராகும் இதிகாசக் கதையம்சம் உள்ள் 3D அனிமேஷன் முழுநீளத் திரைப்படம் “அனுமனும் மயில்ராவணனும்”. திருவிளையாடல், கர்ணன் போன்ற கடவுள், அசுரர் என அசத்தலான பாத்திரங்கள் திரையில் தோன்றி பல வருடங்களுக்குப்பின் மெய் சிலிர்ப்பூட்டும் பிரம்மாண்டங்கள் நிறைந்த படமாக உருப்பெற்றிருக்கிறது “அனுமனும் மயில்ராவணனும்”. உலகெங்கிலுமிருந்து 7 அனிமேஷன் கம்பெனிகள் பங்கு பெற்று பெரும் பொருள் செலவில் உருவாகி இருக்கும் எல்லா வயதினரும் பெரிதும் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது இந்த திரைப்படம். வெளி நாட்டவரது உதவி இருப்பினும், இப்படம் சென்னையில் தான் பெரும்பான்மையாக உருவானது என்பது குறிப்படத்தக்கது. இப்படத்தின் இயக்குனர் டாக்டர் எழில்வேந்தன் ஒரு பல் மருத்துவர், அனிமேஷன் துறையில் உள்ள ஆர்வத்தால் அதை பயின்று பின் இங்கிலாந்து சென்று வார்னர் பிரதர்ஸ் உள்ளிட்ட பெரும் அமைப்புகளில் பணியாற்றி, அந்த அனுபவங்களைக் கொண்டு இப்படத்தின் காட்சிகளை அமைத்துள்ளனர். சுற்றுப்புற சூழல் காட்சி வடிவமைப்பிலும் இதிகாசங்களில் காணப்படும் பிரமாண்ட கோட்டைகள், பாதாள உலகம் போன்ற மாயாஜால அரங்குகளை ஆங்கிலப்பட பாணியில் வடிவமைத்து இருக்கின்றனர். ஸ்டார் வார்ஸ், லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் போன்ற படங்கள் மனதில் எழுப்பும் பாதிப்பை நம் இதிகாசக் கதைகள் கொண்டு கண்டிப்பாக

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த கலைஞரும், கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன், செவாலியே, தாதாசாகேப் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்று கலைத்துறைக்கு பெருமையை ஈட்டித்தந்த நடிகர் திலகம் திரு.சிவாஜிகணேசன் அவர்களின் பிறந்தநாளான அக்.1 ம் தேதியை இனி ஒவ்வொறு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் மதிப்பிற்குரிய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்திருக்கிறார். இந்திய அளவிலும், உலகெங்கும் வாழும் தமிழர்களாலும் கொண்டாடப்படும் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களது கலைச் சேவையை பாராட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக அரசுக்கு நடிகர் சங்கம்வ் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட சங்கங்களும், அவர்களது ரசிகர்களும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

போதை பொருள் விற்கும் பெண்ணாக நயந்தாரா

நயந்தாரா நடித்து விரைவில் வெளியாகவுள்ள படம் ‘கோலமாவு கோகிலா’. யோகி பாபு, அறந்தாங்கி நிஷா, ஜாக்குலின் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அன்மையில் வெளியான கல்யாண வயசு பாடலுக்கு ரசிகர்கள் கொடுத்த உற்சாகத்தில் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியிலிருக்கின்றனர். குடும்ப சூழ்நிலை காரணமாக போதை பொருள் விற்கும் அபலை பெண்ணாக நடித்துள்ள நயந்தாராவிற்கு இந்தப்படம் முக்கியமான படமாக அமையும் என்கின்றனர் படக்குழுவினர். சென்சார் அதிகாரிகளின் பாராட்டையும் பெற்ற நயந்தாரா உற்சாகத்திலிருக்கிறாராம். படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படம் ஜூலை இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்திலோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 13 ஆம் தேதி கடைக்குட்டி சிங்கம் ரிலீஸ்

‘பசங்க’ பாண்டிராஜ் இயக்கி கார்த்தி, சாயீஷா, சத்யராஜ், பானுப்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘கடைக்குட்டி சிங்கம்.’ விவசாய பின்னணியில் ஒரு குடும்பக்கதையாக உருவாகியுள்ள இப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் எந்தக் காட்சிகளையும் நீக்காமல் ‘’U’’ சான்றிதழ் அளித்துள்ளனர். இதனால் படத்தை தயாரித்த 2D Entertainment நிறுவனமும், திரையிடும் Sakthi Film Factory நிறுவனமும் மகிழ்ச்சியிலிருக்கின்றனர். வரும் ஜூலை மாதம் 13 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.

யோகிபாபுவிடம் ஒட்டிக்கொண்ட ‘காங்க்’ சிம்பன்ஸி

ஆல் இன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் கொரில்லா. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் குறித்து இயக்குனர் டான் சான்டி கூறியதாவது.. ‘ஜீவா, சதீஷ், விவேக் பிரசன்னா மூன்று பேரும் நண்பர்கள். இவர்களுக்கு பணத் தேவை ஏற்படுகிறது. அதற்காக வங்கி ஒன்றை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்கள். அவர்கள் தங்களுடன் ஒரு சிம்பன்ஸி குரங்கையும் இணைத்துக் கொள்கிறார்கள். இந்த கூட்டணி வங்கியை கொள்ளையடித்தார்களா? அல்லது போலீஸிடம் சிக்கினார்களா? என்பதே படத்தின் கதை. முழு திரைக்கதையையும் எழுதி முடித்துவிட்டு ஒரு நாள் யதேச்சையாக ஹேங் ஓவர் - 2 என்ற படத்தின் போஸ்டரைப் பார்த்தேன். அதில் மூன்று நண்பர்களும், ஒரு சிம்பன்ஸியும் ஜாலியாக இருப்பது போல் போஸ் கொடுத்திருப்பதைப் பார்த்தேன். உடனே நம்முடைய திரைக்கதையிலும் ஒரு குரங்கை கொண்டுவரலாமே? என எண்ணி, திரைக்கதையை சற்று மாற்றியமைத்தேன். கொரில்லா வகை குரங்குகள் மறைந்திருந்து எதிர்பாராமல் தாக்கும் குணம் கொண்டவை. அதை தான் ‘கொரில்லா தாக்குதல் ’ என்பார்கள். அதே போன்ற ஒரு

திரில்லராக உருவாகவிருக்கும் “ ரெடி டு சூட் “

சமீப காலமாக தமிழ் சினிமாவில் வித்தியாசமான பட தலைப்புகள் வந்தவண்ணம் உள்ளது அந்த வரிசையில் முற்றிலும் மாறுபட்ட தலைப்புடன் ஒரு திரில்லர் படம் உருவாகி வருகிறது. அது எஸ்.எஸ்.வி எண்டர்பிரைசஸ் எஸ்.ஆறுமுகம் தயாரிக்கும் “ ரெடி டு சூட் “ .இந்த படத்தின் பூஜை சென்னை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. மனோஜ்குமார் இதயராஜ் இயக்கவுள்ளார். நேரம், பிரேமம், வெற்றிவேல், போன்ற படங்களில் நடித்த ஆனந்த் நாக் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஜீவிதா நடிக்கவுள்ளார்.வில்லனாக மனோஜ் கே.பாரதிராஜா நடிக்கிறார். இவர்களுடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர். முழுக்க முழுக்க திரில்லராக உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

மும்பை விமான விபத்தில் 5 பேர் பலி!

மும்பை ஜுஹூ விமானத்தளத்தில் தரையிரங்க வேண்டிய சிறிய ரக விமானம் ஒன்று மும்பையின் காட்கோபர் பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் இன்று நண்பகல் நேரத்தில் விழுந்து நொறுங்கியது. இதில் விமான ஓட்டுனருடன் விமானத்தில் பயணம் செய்த விமானப் பராமரிப்பு பொறியாளர்களும், கட்டுமான வேலை செய்தவர்களும் உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களையும் விமானத்தில் பற்றி எரிந்த தீயை அனைத்து துரிதமாக செயல்பட்டனர். விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டு விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் அடுத்த பிரம்மாண்டப் படம்!

‘ரெமோ’ ,‘வேலைக்காரன்’ ஆகிய படங்களை தயாரித்த ஆர்.டி.ராஜா, 24AM ஸ்டுடியோ சார்பில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தையும் தயாரிக்கிறார். இந்த படத்தை குறித்து ஆர்.டி.ராஜா கூறும்போது, "எங்கள் முந்தைய படங்களான வெற்றியின் மகிழ்ச்சியை விட, இப்போது எங்களுக்கு அதிகப் பொறுப்புகள் உள்ளதாக உணர்கிறோம். ஒரு தயாரிப்பாளராக, ரவிக்குமாரின் மயக்கும் கதை சொல்லலை நான் உற்சாகமாக கேட்டேன். புதுமையான விஷயங்களை அசாதாரணமாக விவரிப்பதை கண்டு வியந்தேன். அதே சமயம், தயாரிப்பாளராக இந்த படத்தைப் பற்றி நான் எப்படி வடிவமைக்கப் போகிறேன் என்பதைப் பற்றியும் எனக்கு நிறைய கேள்விகள் எழுகின்றன. உலகளவில் புகழ் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் சார் இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொண்டது எங்களை மகிழ்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு சென்றது. மேலும், நிரவ்ஷாவின் ஒளிப்பதிவை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. ஒவ்வொரு படத்திலும் ஒளிப்பதிவில் அவரது மாய வித்தைகளை செய்ய தவறியதில்லை. ஒரு நிறுவனமாக எங்கள் வளர்ச்சிக்கு எப்போதும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் இயக்குனர் முத்துராஜ், படத்தில் பணிபுரியும் மற்ற புகழ்பெற்ற தொழில்நுட்ப வல்லுனர்களுடன் போட்டியிடும் சவாலுக்கு தயாராகி விட்டார். நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கும் இந்த ஃபேண்டஸி பொழுதுபோக்கு படத்தில் நகைச்சுவைக்கும் குறைவில்லை. கருணாகரன்,

‘கந்து வட்டி மாஃபியாக்களின் முகத்திரையை கிழித்திருக்கிறேன்.’-சீயோன்

அன்மையில் பாளையங்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கந்து வட்டிக் கொடுமையினால் இசக்கிமுத்து-சுப்புலட்சுமி குடும்பத்தினர் தீக்குளித்து உயிரை விட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இந்த சம்பவங்களைப் போல் கந்துவட்டியினால் நடக்கும் பல சம்பவங்களை தொகுத்து ‘பொதுநலன் கருதி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை புதுமுக இயக்குனர் சீயோன் இயக்கியிருக்கிறார். படத்தைப் பற்றி அவர் கூறும்போது… ‘கந்து வட்டி மாஃபியாக்களின் முகத்திரையை கிழித்திருக்கிறேன். இந்த கந்துவட்டிக் காரர்களின் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள். அவர்களது அதிகாரப் பலத்தின் எல்லை என்ன? அவர்களது குழு எப்படி இயங்குகிறது என அவர்களது அனைத்து நடவடிக்கைகளையும் தோலுரித்துக் காட்டியிருக்கிறேன். இந்தப் படத்தால் இப்போதே எனக்கு மிரட்டல்கள் வர ஆரம்பித்திருக்கிறது. வெளியானவுடன் இன்னும் அதிக மிரட்டல்கள் வரும்.’ என்கிறார் இயக்குனர் சீயோன். ‘சூதுகவ்வும்’ கருணாகரன்,சந்தோஷ், அருண் ஆதித், சுபிக்ஷா, அனுசித்ரா, லிசா ஆகியோர் நடித்துள்ளனர். AVR புரடக்ஷன் சார்பில் அன்புவேல் ராஜன் தயாரித்துள்ள ‘பொதுநலன் கருதி’ திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகவுள்ளது.

Top
error: Content is protected !!