You are here
Home > 2018 > July

‘கருணாநிதி நலமுடன் இருக்கிறார்’ – கருணாநிதியைச் சந்தித்த ராகுல்காந்ந்தி மகிழ்ச்சி! – VIDEO

சென்னை காவேரி மருத்துவமனையில்  கடந்த 4 நாட்களாக தொடர் சிகிச்சையில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதியை  அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மாலை 4 .15 மணியளவில் நேரில் சந்தித்தார். https://youtu.be/d11o2CS8m04 இன்று பிற்பகல் டெல்லியிலிருந்து விமானம் மூலம் வந்த அவர் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உடன் நேராக மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியைச் சந்தித்து அவருடைய உடல்நிலையை அங்கிருந்த மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். முன்னதாக  திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்தி அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி ஆகியோரைச் சந்தித்தார். அதன் பிறகு காவேரி மருத்துவமனையை விட்டு வெளியே வந்த ராகுல் காந்தி அங்கிருந்த பத்திரிகையாளர்களை சந்தித்த போது ‘கருணாநிதி நலமுடன் இருக்கிறார். தமிழ் மக்களைப் போல் அவர் உறுதியானவர். காங்கிரஸுடன் நீண்ட காலமாக  நல்ல நட்பில் இருப்பவர். தமிழக மக்களிடமிருந்து பிரித்துப்பார்க்க முடியாதவர். சோனியாகாந்தி , கருணாநிதி மீது மிகுந்த மதிப்பு கொண்டவர். விரைவில் நலம் பெற வாழ்த்தியுள்ளார்.’ என்றார். ராகுல் காந்தியின் உற்சாகமான மகிழ்ச்சியான பேச்சு அங்கிருந்த திமுக தொண்டர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Grand Finals of the Sixth Edition – Mrs.India 2018, 30th July 2018 at Chennai

‘Mrs. India Pageants Grand Finals 2018’, the only existing Pageant in India for married women has written a new chapter in history with the largest National Beauty Pageant ever with 72 Mrs.India 2018 finalists participating in one single Pageant. Ms.Avantika Srivastava, Ms.Ujala and Dr.Anupama Soni were chosen as the winners of Mrs.India 2018. Additionally Ms.Jyoti Dogra was awarded with the title ‘Super Classic Mrs.India 2018’. Ms.Radhika Tejpal and Ms.Kajol Bhatia were awarded with ‘Classic Mrs.India 2018’ title. The Grand Finals witnessed two rounds of ramp walk performances – the first round had all the models representing their own state and culture in beautiful traditional attires. They presented shimmering gowns in the second round. Out of the 72 contestants, 25 contestants were short-listed in

விஜய்சேதுபதி, திரிஷாவின் “காதலே காதலே” – Video

விஜய்சேதுபதி, திரிஷா நடித்து விரைவில் வெளியாகவுள்ள படம்  '96'. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "காதலே காதலே" பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியிருக்கிறது. '96' படத்தை இயக்கி வருபவர்`நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம்குமார். முற்றிலும் காதலை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் விஜய்சேதுபதி  16, 36, 96 வயதுடைய  மூன்று விதமான தோற்றங்களில் நடித்து வருகிறார். '96' படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில்  "காதலே காதலே"  பாடலின் லிரிக்கல் வீடியோவும் நல்ல வரவேற்பினை பெற்றுவருவதால்  படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். https://youtu.be/lkPI-45gxBw

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன வாழ்த்து!

சென்னை காவேரி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதி விரைவில் நலம்பெற இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்து கடிதம் கொடுத்துள்ளார். அந்தக் கடிதத்தை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான், இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட குழுவினர் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கி கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன எழுதியுள்ள கடிதத்தில்’ கருணாநிதியின் உடல்நிலை குறித்து மிகவும் வருத்தமடைந்துள்ளதாகவும், விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப பிரார்த்திபதாகவும்’ கூறப்பட்டுள்ளது.

‘கஜினிகாந்தை குடும்பத்துடன் பார்க்கலாம். ‘ இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார்

ஆர்யா, சயீஷா நடித்திருக்கும் கஜினிகாந்த் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம் என்று இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் பாடலாசிரியர்கள் கபிலன் வைரமுத்து, கு. கார்த்திக், இசையமைப்பாளர் பாலமுரளி பாலு, இயக்குநர் சந்தோஷ் ஜெயகுமார், படத்தொகுப்பாளர் ஜி. கே. பிரசன்னா,  நடன இயக்குநர் பாபா பாஸ்கர், ஒளிப்பதிவாளர் பல்லு, நடிகர்கள் ஆடுகளம் நரேன், நடிகை உமா பத்பநாபன், நாயகன் ஆர்யா, நாயகி சயீஷா, நடிகை நிலீமா ராணி, நடிகர் லிங்கேஸ்வரன்,  விநியோகஸ்தர் சக்திவேலன், தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர், பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து பேசுகையில், ‘இசையமைப்பாளர் பாலமுரளி பாலுவுடன் இணைந்து நான் மதியால் வெல் என்ற ‘விமன்ஸ் ஆந்தம் ’ என்ற பாடல் மற்றும் பணமதிப்பிழப்பு குறித்த ஆல்பம் ஒன்றை வெளியிட்டோம். அவருடன் இணைந்து இந்த படத்திலும் ஒரு பாடலை எழுதியிருக்கிறேன். ஆர்யாவின் ரசிகன் நான். அவரிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். தனியார் தொலைகாட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை சீசன்=2 நடத்தினால் அதில் கலந்து கொள்ளவேண்டாம். எங்க

Top
error: Content is protected !!