You are here
Home > 2018 > August

“வாயாடி” பாடல் மூலம் வலைதளங்களில் பிரபலமாகும் பாடலாசிரியர் ஜி.கே.பி

சூதுகவ்வும் படத்தில் இடம் பெற்ற "கம் னா கம்" பாடல் மூலம் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானவர் ஜி.கே.பி. அதன் பின் எனக்குள் ஒருவன், உரியடி, மரகதநாணயம், கதாநாயகன் உள்ளிட்ட பல படங்களில் பாடல்களை எழுதி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் உருவான கனா படத்தில் ஜி.கே.பி எழுதிய "வாயாடி பெத்த புள்ள" பாடல் வெளியானது. இப்பாடலை இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையில் நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன், வைகோம் விஜயலஷ்மி பாடியுள்ளனர். "வாயாடி பெத்த புள்ள" பாடல் வெளியான கனம் முதல் இப்பாடலின் வரிகளும் இசையும் அனைவரையும் கவர்ந்தது. சமுக வளைத்தலங்களில் பிரபலம் ஆனது. தான் எழுதிய பாடலை அனைவரும் கொண்டாடுவதை அறிந்த ஜி.கே.பி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார். "இப்படிபட்ட பாராட்டுகள் ஒரு கலைஞனை மேலும் மேலும் பல நல்ல படைப்புகளை படைக்க தூண்டும், எனவே இந்த பாராட்டுகள் என்னை நான் அடுத்த கட்டத்திற்கு இட்டு செல்ல தூண்டும் தூண்டுகோள்" என்றார் பாடலாசிரியர் ஜி.கே.பி.  

மேகதாட்டு அணைகட்ட முயற்சிப்பதா? கர்நாடகாவிற்கு பி.ஆர் பாண்டியன் கண்டனம்

காவிரியில் தமிழகத்திற்கு 310 டிஎம்சி நீரை விடுவித்து விட்டதாகவும் அதனை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள வில்லை. எனவே மேகதாட்டு அணைக் கட்டிக் கொள்ள தமிழகம் அனுமதிக்க வேண்டும் என கர்நாடக வேளான்துறை செயலாளர் சிங் பேசினார். இது குறித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது… ‘காவிரி நீர் பங்கிடுவது குறித்து அறிவிக்க ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ள நிலையில் கர்நாடக அரசு செயலாளர் அறிவிப்பது ஆணையத்தை அவமதிப்பதாகும். தமிழகத்தில் உபரிநீரை தடுத்து அணைக்கட்ட இயலாது. ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் கதவணைகள் மூலம் கசிவு நீரை தேக்கி வைக்க முடியும். எனவே தமிழகத்தில் நமக்குள் தண்ணீரை அணைகட்டி தேக்கவில்லை என்று எழும் விமர்சனங்களை கர்நாடகம் சாதகமாக பயன்படுத்த முயற்சிக்கிறது. எனவே தமிழகத்தில் ராசி மணல் அணைகட்டினால் மட்டுமே 100 டிஎம்சி வரை தண்ணீரை தேக்கி வைக்க இயலும் என்பதை உணர்ந்து உடன் தமிழக அரசு அணைகட்டும் பணி குறித்து கொள்கை பூர்வமாக அறிவிக்க வேண்டும். இது குறித்து விரைவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து வலியுறுத்த உள்ளேன். முக்கொம்பில் மணல் மூட்டை போட்டு தேக்குவது

தமிழக அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மிகவும் மோசமாக உள்ளன. பாமக நிறுவனர் ராமதாஸ் – அறிக்கை

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன், அப்பள்ளிகளை தத்தெடுக்கவும், நிதியுதவி வழங்கவும் முன்னாள் மாணவர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கேட்டுக் கொண்டிருக்கிறார். பள்ளிச்சூழலை மேம்படுத்த இது சிறப்பான ஏற்பாடு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பள்ளிக்கல்வி நிர்வாகத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்காமல் இத்தகைய உதவிகளைப் பெறுவதால் எந்த மாற்றமும் ஏற்படாது. தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மிகவும் மோசமாக உள்ளன. பல பள்ளிகளில் சுற்றுச்சுவர், கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வகங்களும், நூலகங்களும் மிகவும் பரிதாபமான நிலைமையில் உள்ளன. சில பள்ளிகளில் அவற்றின் தலைமை ஆசிரியரும், பிற ஆசிரியர்களும் தங்களின் சொந்த முயற்சியில் நிதி திரட்டி பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக மேம்படுத்தியுள்ளனர். அவர்களின் முயற்சி பாராட்டத்தக்கது. அதைப் பின்பற்றித் தான் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக தொழில் நிறுவனங்களும், முன்னாள் மாணவர்களும் நிதி உதவி வழங்க வேண்டும் என்று செங்கோட்டையன் கூறியிருக்கிறார். அமைச்சரின் நோக்கம் நல்லதாக இருக்கலாம்; முன்னாள் மாணவர்களின் உதவியுடன் கல்வி நிலையங்களை

“ இராஜாவின் பார்வை இராணியின் பக்கம் “ செப்டம்பர் 7 ம் தேதி வெளியாகிறது

விகாஷ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் விகாஷ் ரவிச்சந்திரன்  தயாரிக்கும் படம்  “ இராஜாவின் பார்வை இராணியின் பக்கம் “   இந்த படத்தில் ஆதவா கதாநாயகனாக அறிமுகமாகிறார் . இவர் 8 பேக் உடற்கட்டுடன் அதிரடி சண்டைக் காட்சியில் நடித்துள்ளார். நாயகியாக அவந்திகா நடித்திருக்கிறார். இவர் மலையாள படங்களில் நடித்தவர் . மற்றும் மதுமிதா, கானாஉலகநாதன், சிங்கப்பூர் தீபன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.    முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாக்கி இருக்கிறோம். தன்னை ஏமாற்றிய காதலியை பழிவாங்க ஒரு பெரிய டானின் உதவியை நாடிச்செல்கிறார் நாயகன். அந்த டான் நாயகனை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டார் என்பது காமெடி கலவையாக உருவாக்கி இருக்கிறோம். டானுடன் நாயகியை தேடி நாயகன் செல்கிறார். நாயகிக்கு வேறொருவருடன் திருமணம் நடக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இறுதில் நாயகியை கண்டுபிடித்தார்களா இல்லையா? நாயகிக்கு திருமணம் யாருடன் நடந்தது ? என்பதை படு காமெடியாக சொல்லுகிறோம். கிளைமாக்ஸ் காட்சி யாரும் யூகிக்க முடியாத ஒன்றாக இருக்கும். படம் வருகிற செப்டம்பர் 7 ம் தேதி உலகம் முழுவதும்  வெளியாக உள்ளது. இந்த படம்  நிச்சயம் ஒரு மறக்க முடியாத காமெடி

உருவாகிறது ‘தனி ஒருவன் 2’

ஒரு சில திரைப்படங்கள் காலங்கள் கடந்தும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும். படத்தின் கதையோ அல்லது அதை படமாக்கிய விதமோ அதற்கு முக்கியமான காரணமாக இருக்கும். ஆனால், தனி ஒருவன் அனைத்து வகைகளிலும் ரசிகர்களுக்கு  இத்தகைய அனுபவத்தை வழங்கியது. தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய அங்கீகாரத்தை பெற்று தந்த "தனி ஒருவன்"  இன்று 3வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. மைக்ரோ-பிளாக்கிங் மற்றும் சமூக ஊடகங்களில் ஹாஷ் டேக் ட்ரெண்டிங்குடன் ரசிகர்கள் விமரிசையாக தனி ஒருவனை கொண்டாடி வருகிறார்கள். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இயக்குனர் மோகன்ராஜா மற்றும் நடிகர் ஜெயம் ரவி ரசிகர்களுக்கு எதிர்பாராத ஒரு இன்ப அதிர்ச்சியை அளித்திருக்கிறார்கள். ஆம், ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த தனி ஒருவன் 2 படம் மிகப்பெரிய கூட்டணியுடன் மிக விரைவில் ஆரம்பமாகிறது. இந்த உற்சாகமான தருணத்தை பற்றி இயக்குனர் மோகன் ராஜா கூறும்போது, "தனி ஒருவன் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த அன்பும், அதற்கு கொடுத்த மிகப்பெரிய வெற்றியும் அலாதியானது. அவர்களின் எதிர்பார்ப்புக்கும் அதிகமான ஒரு விஷயத்தை இந்த தனி ஒருவன் 2 மூலம் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி இருக்கிறேன். நாங்கள் ஏற்கனவே முன்னணி தொழில்நுட்ப

படிப்படியாக உயர்ந்து பரிமாணம் பெற்றவர் தலைவர் மு.க. ஸ்டாலின்- எம்.எல்.ஏ., கருணாஸ் வாழ்த்து

திராவிட முன்னேற்றக் கழகம் இன்று புதிதாய் பிறக்கிறது! பெரும் மதிப்பிற்குரிய அன்புச்சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இன்று தலைவராய் பிறக்கிறார்! “ ஒரு நாயகன் உதயமாகிறான்.. ஊரார்களின் இதயமாகிறான்” என்று காவியக் கவிஞர் வாலி எழுதிய வரிகளுக்கு ஏற்ப.. புதிய சூரியனாய் மு.க. ஸ்டாலின் உதயமாகிறார். முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் அகம் மகிழ்ந்து வாழ்த்துகிறேன்! மாணவர் கழகப் பொறுப்பாளராக, இளைஞரணிச் செயலாளராக, மாநிலப் பொருளாளராக, சென்னை மேயராக, துணை முதல்வராக, செயல்தலைவராக, சட்டப்பேரவை உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக படிப்படியாக உயர்ந்து பரிமாணம் பெற்றவர் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள். 14 வயது முதல் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெறும் இயக்கத்தின் பாதையில் பயணம் செய்கிறவர். போராட்டக் களம், சிறைவாழ்க்கை, தியாகத் தழும்புகள் என இவரது தன்வரலாறு நீளும். அதுதான் இவரை இன்று தலைவர் சிம்மாசனத்தில் அமர்த்தியிருக்கிறது. கலைஞர் எனும் கதிரவனின் கரம்பிடித்து நடந்து, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற சொற்றொடரை நெஞ்சில் எழுதி கழகத்தின் வளர்ச்சிக்கு அயராது உழைத்த தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள். எம் பெருமதிப்பிற்குரிய கலைஞர் அவர்கள் செயல்முடியாத நிலை வந்த போது செயல்படும் தலைவராய் செயலாற்றி மக்கள் மனதில் இரண்டு ஆண்டுகளுக்கு

Top
error: Content is protected !!