You are here
Home > 2018 > November

2.0 Movie Review

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்தியாவின் ஜாக்கிச்சான் என பெயர் பெற்ற அக்‌ஷய்குமார்  இருவரும் இணைந்து நடித்துள்ள படம் 2.0.  முழுவதும் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் லைக்கா புரடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். இயக்குனர் ஷங்கர் தன்னுடைய அனைத்து படங்களிலுமே அதிரடியான சமூக கருத்துக்களை கூறி வருபவர். இந்தப்படத்தில் அவர் என்ன கூறியிருக்கிறார்? சென்னையில் ஒரு நாள் பரபரப்பான நேரத்தில் செல்போன்கள் அனைத்தும் வானத்தை நோக்கி பறிக்கப்பட்டு மறைகிறது. மக்கள் கடும் குழப்பத்தில் இருக்கும் நிலையில் சிலர் கொடூரமாக கொல்லப்படுகின்றனர். இந்தக்கொலைகளுக்கான காரணத்தையும், செல்போன்கள் மாயமானதை கண்டுப்பிடிக்கும் வேலையும் விஞ்ஞானி ரஜினியிடம் கொடுக்கப்படுகிறது. அவர் தன்னுடைய ரோபோ ‘சிட்டி’யுடன் களமிறங்குகிறார். இந்த மர்மங்களின் காரணம் தெரிய வந்ததா இல்லையா? என்பதை இயக்குனர் ஷங்கர் தன்னுடைய வழக்கமான பிரமாண்டத்துடன் சொல்லியிருக்கிறார். பறவைகளை நேசித்து, பாதுகாத்து வரும் பறவையியல் (Ornithology) ஆய்வாளர், அக்‌ஷய்குமார்.  தற்கொலை செய்து கொள்ளும் முதல் காட்சியே பரபரப்பை ஏற்படுத்துகிறது. சிறப்பாக நடித்து மனதில் இடம் பிடிக்கிறார். கம்பீரமாக காட்சியளிக்கிறார். அவர் வில்லனா, இல்லை ஹீரோவா என்பதை படம் பார்ப்பவர்களின் விருப்பத்திற்கே விட்டுள்ளார் ஷங்கர். ரசிகர்களுக்கு இங்கே தான் ஒரு ஜெர்க்!!! வசீகரன் கெட்டப்பில் வரும்

டிசம்பரில் ‘கனா’

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் 'கனா' திரைப்படம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள ஒரு தனித்துவமான திரைப்படம். இதற்கு முன்பு திரையில் பார்த்திராத சிறப்பு அம்சத்துடன் வெளியாக இருக்கிறது. இயக்குனர் அருண்ராஜா காமராஜ், வெற்றியை நோக்கிய ஒரு பெண்ணின் கனவுகள் மற்றும் போராட்டங்களை மிகச்சிறப்பாக வடிவமைத்துள்ளார். கூடுதலாக, ஒரு தந்தை தன் மகளின் கனவுகளை நிறைவேற்றுவதில் அவளுக்கு பக்க பலமாக இருப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறார். இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட இந்த படத்தின் டிரெய்லர் 37 மணி நேரத்தில் 3 மில்லியன் பார்வையாளர்களை பெற்று மிகப்பெரிய அளவில் சென்று சேர்ந்துள்ளது. இது குறித்து இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கூறும்போது, "எங்கள் எதிர்பார்ப்புகளை தாண்டி இந்த டிரெய்லர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மொத்த குழுவுக்கும் மகிழ்ச்சி. ட்ரெயிலரை வெளியிட்ட திரு ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்களுக்கு நன்றி" என்றார். அவர் மேலும் கூறும்போது, "பெண்களின் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, பொறுமை மற்றும் கடின உழைப்பு ஆகியவை எப்போதுமே நமக்கு உற்சாகம் அளிப்பதாகும். குறிப்பாக, அவர்கள் தடைகளை உடைத்து கிரிக்கெட்டில் சாதிப்பது. இது என் எண்ணம் மற்றும் நம்பிக்கை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசமும் சமீபத்திய ஐ.சி.சி.

கஜா புயல் நிவாரணம் ராகவா லாரன்ஸ் அறிக்கை

கஜா புயல் நிவாரணமாக 50 விடுகளை கட்டித் தருவதாக அறிவித்திருந்தேன்.. அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளுக்காக திருவாரூர் குன்னனூருக்கு வந்து பார்த்தேன்... நாம் சென்னையில் கேள்விப் பட்டது போல் இல்லாமல் ஒரு தெருவில் 50 வீடுகளுக்கு மேல் பாதிக்கப் பட்டிருப்பதை பார்த்து அந்த பகுதி மக்களின் வலியையும் வேதனையையும் உணர்ந்தேன்.. நாம் கேள்வி பட்டதை விட அதிக பாதிப்பு டெல்டா மக்களுக்கு.... அந்த பகுதி மக்களை மீட்டெடுக்க நாம் எல்லோரும் ஒன்றினைய வேண்டும்.. அவர்களுக்கு உதவ எல்லோரும் முன் வர வேண்டும் ...இது தான் என் தாழ்மையான வேண்டுகோள்... இவ்வாறு ராகவா லாரன்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்..  

மலேசியாவில் சிக்கி தவித்த 49 தமிழர்களை மீட்டெடுத்த கருணாஸ் எம்.எல்.ஏ

திருநெல்வேலி மாவட்டம் தலைவன் கோட்டை, மளடிக்குறிச்சி, அரியூர்,பாரப்பட்டி,சங்கரன் கோவில் மற்றும் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஆகிய ஊர்களில் இருந்து சுமார் 49 க்கும் மேற்ப்பட்டவர்கள் (பெரும்பாலானோர் முக்குலத்தோர்) மலேசியாவில் உள்ள தனியார் டவர் நிறுவனத்திற்கு பணிக்கு சென்றனர். அங்கு நிர்வாகத்திற்கும் பணியாற்றும் தமிழர்களுக்கும் இடையே ஏற்ப்பட்ட  பிரச்சனையின் காரணமாக இவர்களுக்கு சம்பளம் மற்றும் அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டது. சம்பள நிலுவையின் காரணமாக தகராறு ஏற்பட இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அங்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் தலைமறைவானார்கள்.  கிட்டதட்ட பலநாட்கள் உண்ண உணவும் உறைவிடமும் இல்லாமல் காட்டிலேயே தங்கினர்.  இந்த தகவல் முக்குலத்தோர் புலிப்படையின் நெல்லை மாவட்ட செயலாளர் திரு.ராஜகுணசேகர பாண்டியன் மூலமாக மனிதநேயர் சேது கருணாஸ் தேவர் எம்.எல்.ஏ அவர்களுக்கு தெரியவந்தது.     இந்த தகவலை மலேசியாவில் உள்ள மரியாதைக்குரிய குமார் மூலமாக       சம்மந்தபட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்ட *கருணாஸ் தேவர் எம்.எல்.ஏ* அவர்கள் மலேசியாவில் உள்ள பாத்தி கேம்ப் முருகன் கோவிலுக்கு பாதிக்க பட்டவர்களை  அழைத்து வந்து அதிகாரிகள் மூலமாக பேச்சு வார்த்தை நடத்தினார். இது சம்மந்தமாக பாராளுமன்ற அதிகாரிகளை சந்தித்தது மட்டுமல்லாமல் மலேசிய

நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச விழாக்களில் கவனம் ஈர்த்த ‘டூ லெட்’..!

தான் இயக்கிய ‘டூ லெட்’ படம் மூலமாக உலக அரங்கில் நமது தமிழ் சினிமாவை மீண்டும் ஒருமுறை தலைநிமிர செய்துள்ளார். ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன். ஆம்.. இங்கே தேசிய விருது பெற்ற ‘டூ லெட்’ படம் ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. 26 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது. குறிப்பாக ஆஸ்கர் விருது பெற்ற ஈரான் நாட்டு இயக்குநரே எப்படி இந்த மாதிரி ஒரு கதைக்களத்தில் உங்களால் ஒரு படத்தை உருவாக்க முயன்றது எனக் கூறி இயக்குநர் செழியனை வானளாவப் புகழ்ந்துள்ளார். கல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த செழியன், தான் இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலேயே நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச விழாக்களை கடந்து வந்திருப்பது இந்திய சினிமாவிலேயே யாரும் இதுவரை தொடாத சாதனை.. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் 2007 முதல் மென்பொருள் துறை வளர்ச்சியடைந்ததும் வீடு வாடகைக்குக் கிடைப்பது எவ்வளவு பிரச்சினைக்குரியதாக மாறியுள்ளது, நடுத்தர மக்கள் எவ்வாறு இதில் பாதிக்கப்படுகின்றனர் என்பதை இந்தப் படத்தில் யதாரத்தமாக காட்சிப்படுத்தியுள்ளார் செழியன். இந்தப்படத்தில் சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார்

Top
error: Content is protected !!