You are here
Home > 2018 > December

‘கனா’ – விமர்சனம்

சிவகார்த்திகேயன் புரடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள படம் ‘கனா’. அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன்,சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். நடிகர்கள் பொதுவா படத்தயாரிப்புக்கு அவ்வளவு சீக்கிரமா வரமாட்டாங்க. அப்படியே வந்தாலும் ஏதாவது ஒரு விதத்தில் அந்தக்கதை அவர்களது மனதுக்கு நெருக்கமானதாக இருக்க வேண்டும். அப்படி சிவகார்த்திகேயன் மனதுக்கு நெருக்கமான படம் தான் இந்த ‘கனா’ படம். விளையாட்டை மைய்யப்படுத்தி வந்த பல படங்கள் ரசிகர்களிடம் வெற்றி பெற்ற படங்களாகவே இருந்திருக்கின்றன. அந்த வகையில் மகளிர் விளையாட்டை மைய்யப்படுத்தி வந்திருக்கும் இந்த ‘கனா’ படம் வெற்றி பெருமா பார்ப்போம். வானத்தையும், காவிரியையும் எதிர்பார்த்து தினம் தினம் ஏமாறும் ஏழை டெல்ட்டா விவசாயி சத்யராஜ். தன்னுடைய மனைவி ரமா, மகள் ஐஸ்வர்யாவுடன் சந்தோஷமாக இருந்து வருகிறார். இவருக்கு பிடித்த பொழுதுபோக்கு கிரிக்கெட். அதுவும் இந்தியா டீம் விளையாடினால் அவ்வளவு தான். டிவி முன்னாடியே தான் அன்றைய பொழுது. சத்யராஜின் மகள் ஐஸ்வர்யாவுக்கு அவரது அப்பாவின் மேல் மிகப்பெரிய பாசம் வைத்திருப்பவர். இந்நிலையில் கிரிக்கெட் போட்டி ஒன்றில் இந்தியா தோல்வியடைகிறது. கடும் அதிர்ச்சியடையும் சத்யராஜ் கண்களில் நீர் வருகிறது. எப்பவுமே தன்னோட அப்பாவை சந்தோஷமாக பார்த்து

சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்  – விமர்சனம்

அரசியல்வாதி ஒருவரின் சிபாரிசில் சிலுக்குவார்ப்பட்டி போலீஸ் ஸ்டேசனில் சாதாரண  கான்ஸ்டபிளாக பணியாற்றுகிறார் கதையின் நாயகனான விஷ்ணு விஷால். இவருடைய கேரக்டரை அறிமுக இயக்குநரான செல்லா அய்யாவு, சிறிது உதார் போலீஸாகவும், சிறிது கெத்து போலீஸாகவும், சிறிது சிரிப்பு போலீஸாகவும் என கலந்து உருவாக்கியிருக்கிறார். இவர் ஆக்சனில் இறங்கவேண்டும் என்றால் அதற்கு ஒரு சிறப்பான பின்னணியை இயக்குநர் வடிவமைத்திருக்கிறார். அது முழுக்க முழுக்க காமெடியாக இருக்கிறது. அதாவது ஹீரோ விஷ்ணு விஷால் ஓசியில் ஆஃப் பாயிலை விரும்பி ரசித்து சாப்பிடுவார். அதை யாராவது தடுத்து தட்டிவிட்டால்....அவ்வளவுதான்.அவருக்கு கோபம் தலைகேறும். அதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் ஆக்சனில் இறங்கி துவம்சம் விடுவார். அவரின் இந்த பழக்கம் அவரை ஒரு சிக்கலில் மாட்டிவிடுகிறது. அதிலிருந்து தப்பித்தாரா?இல்லையா? என்பதை முடிந்த அளவிற்கு காமெடியாக கொடுக்க முயன்றிருக்கிறார்கள். படத்தின் நாயகி ரெஜினா, நாயகன் விஷ்ணு விஷாலுக்கு முறைபொண்ணு. சிறிய வயதிலேயே இருவரும் காதலிக்கிறார்கள். இதனால் ரெஜினாவின் தந்தையார் அவரை வேறு ஊருக்கு சென்று படிக்க வைக்கிறார். அவரும் படித்து முடித்துவிட்டு ஆசிரியையாக சிலுக்குவார்ப்பட்டிக்கு அருகேயுள்ள ஒரு பள்ளிகூடத்தில் ஆசிரியையாக பணியில் சேர்கிறார்.இதனால் மீண்டும் முறைமாமனான விஷ்ணு விஷாலைச் சந்தித்து காதலை

அடங்க மறு – விமர்சனம்

இயக்குனர் சரண், மிஷ்கின், அமீர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கார்த்திக் தங்கவேல் இயக்கியிருக்கும் படம் ‘அடங்க மறு’. ஜெயம் ரவி, ராஷிகண்ணா இணைந்து நடித்துள்ளனர். ஜெயம் ரவி போலீஸ் வேடமேற்று நடிக்கும் 3 வது படம். எப்படியிருக்கிறது? துடிப்பான, திறமையான, நவீன ‘சைபர் க்ரைம்’ சமாச்சாரங்களை கரைத்து குடித்த இளைஞர். இந்த நேர்மை தவறாத போலீஸ் எஸ் ஐ. அழகான குடும்பத்துடன் வாழ்ந்து வருபவர். தன்னுடன் பணிபுரியும் சக மேலதிகாரிகளால் அவரது குடும்பம் சின்னா பின்னமாகிறது. நிலைகுழைந்து நிற்கும் ஜெயம் ரவி என்ன முடிவு எடுத்தார் என்பது தான் இந்த அடங்க மறு. எத்தனையோ படங்களில் பார்த்த அதே திருடன், போலீஸ் கதை தான். இருந்தாலும் அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் வித்தியாசமாக கொடுக்க முயன்றுள்ளதை பாராட்டியே ஆகவேண்டும். திறமையான பல நேர்மையான போலீஸ் அதிகாரிகளுக்கு ‘OBEY THE ORDER’ என்ற இந்த ஒற்றை வார்த்தை தான் கடிவாளம். இந்த கடிவாளத்தால் போலீஸால் பாதுகாக்கப் பட வேண்டிய சமுதாயம் எப்படி சீரழிக்கப்படுகிறது என்பதை அறிமுக இயக்குனர் அருமையாக சொல்லியிருக்கிறார். டிராஃபிக்கை மதிக்காமல் செல்லும் மந்திரி மகனை விரட்டி செல்லும் போது வேகமெடுக்கும் திரைக்கதை, அதன்

Maari 2 – Movie Review

‘மாரி’ படத்திற்கு பிறகு தனுஷ், பாலாஜி மோகன் மீண்டும் இணைந்துள்ள படம் ‘மாரி 2’. தனுஷின் ‘வுண்டர்பார்’ நிறுவனம் தயாரித்துள்ளது. வட சென்னயிலுள்ள 2 தாதாக்களிடையே நடக்கும் கேங்க் வார் தான் இந்தப் படத்தோட கதை. தாதா தனுஷ் ஹார்பரில் இறங்கும் சரக்குகளை சட்டவிரோதமாக பல இடங்களுக்கு சப்ளை செய்யும் ஏஜன்ட். இவருக்கு ரைட், லெஃப்ட்டாக ரோபோ ஷங்கர் மற்றும் வினோத். இந்த மூவரும் ஒன்றாகவே சுற்றி வருபவர்கள். இந்நிலையில் ஆட்டோ ஓட்டிவரும் சாய் பல்லவி, தனுஷை தாறுமாறாக லவ் பண்ணுகிறார். தனுஷூக்கு ஒரே ஃப்ரென்ட், பெஸ்ட் ஃப்ரென்ட் ‘கழுகு’ கிருஷ்ணா. திடீரென தனுஷூக்கும், ‘கழுகு’ கிருஷ்ணாவுக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. ‘கழுகு’ கிருஷ்ணாவுடன் டொவினோ தாமஸும் சேர்ந்துகொண்டு தனுஷை கொல்லத் துடிக்கிறார். இவர்களுக்குள் என்ன நடந்தது என்பது தான் மாரி 2 படத்தின் க்ளைமாக்ஸ். பல படங்களில் பார்த்து சலித்துப்போன கதை தான் என்றாலும் ஒரு சில காட்சிகள் ரசிக்கும் படியாகவே இருக்கிறது. குறிப்பாக சாய் பல்லவி வரும் இடங்களெல்லாமே ரசிக்க முடிகிறது. சாய் பல்லவியின் குறும்பான நடிப்பை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது. இந்த பொண்ணுக்குள்ள இப்படி ஒரு அசாத்திய திறமையா என

சீதக்காதி – விமர்சனம்

பொதுவாக பெரும்பாலன படங்களின் தலைப்பு ரசிகர்களை கவரும் வகையில் மட்டுமே இருக்கும். ஒரு சில படங்களின் தலைப்புகள் மட்டுமே கதைக்கும் அந்த கதைக்குள் வரும் கதாபாத்திரத்திற்கும் பொருந்தும் வகையில் இருக்கும். அந்த வகையில் விஜய் சேதுபதி படத்தின் தலைப்பு ‘சீதக்காதி’ மிகச் சரியாக பொருந்துகிறது. விஜய் சேதுபதியின் ‘25’ வது படமான ‘சீதக்காதி’ ரசிகர்களின் எதிர்பார்ப்பு மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ் சினிமாவின் பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகியிருக்கிறது. இந்தப்படத்தை பாலாஜி தரணிதரன் எழுதி, இயக்கியிருக்கிறார். ‘பாசன் ஸ்டுடியோ’ சார்பில் சுதன் சுந்தரம், உமேஷ் ஜி ஜெயராம் தயாரித்துள்ளனர். ‘ட்ரைடண்ட் ஆர்ட்ஸ்’ ரவீந்திரன் வெளியிட்டுள்ளார். அனைவரின் எதிர்பார்ப்பையும் இந்தப்படம் பூர்த்தி செய்துள்ளதா? பார்ப்போம். பால்ய பருவத்திலிருந்தே மேடை நாடகங்களில் நடித்துவரும் ஐயா ஆதிமூலம் (விஜய்சேதுபதி) க்கு நடிப்பு மேல் தீராத காதல். இவரது நாடகங்களுக்கு மக்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். நாடக உலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் அவர், நாடக அரங்கிலேயே தன்னுடைய வாழ் நாளின் பெரும் பகுதியை கழிக்கிறார். கால மாற்றத்தின் காரணமாக சினிமாவின் ஆதிக்கத்தினால் நாடகத்திற்கு வரும் ரசிகர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைகிறது. இதனால் பொருளாதார ரீதியாக அவரது நாடக்குழு கடுமையாக

டிசம்பர் 29, 30, 31-ல் வானம் கலைத்திருவிழா!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், சமூக மாற்றத்திற்கான தேடலோடு கலைத்தளத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. கடந்தவருடம் நீலம் பண்பாட்டு மையத்தால் உருவாக்கப்பட்ட “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” கலைக்குழுவின் இசை நிகழ்ச்சி பெருமளவில் விவாதங்களை ஏற்படுத்தியது. இந்த வருடம் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னையில் டிசம்பர் 29, 30, 31 ஆகிய 3 நாட்களில் “வானம் கலைத்திருவிழா” நடக்க இருக்கிறது. வானம் கலைத்திருவிழா பற்றிய அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” கலைக்குழுவினரின் பாடல்களுடன் தொடங்கிய பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பா.இரஞ்சித் பேசியதாவது, கலை மக்களுக்கானது என்று மாவோ சொல்வார், அப்படியானால் யார் மக்கள் என்ற ஒரு கேள்வி எழுகிறது. சிறுவயதில் நான் பார்த்த எத்தனையோ கலைகள் இன்று கிட்டத்தட்ட அழிந்துவிட்டன. மேடை ஏற்றப்படாத பல கலைகளைப்பற்றி நான் யோசிக்கும்போது அதெல்லாம் கலைகள் இல்லையா… என்ற ஒரு கேள்வி எனக்குள் எழுந்துகொண்டே இருந்தது. அப்படி நிராகரிக்கப்பட்ட, தவிர்க்கப்பட்ட, மேடை ஏற்றப்படாத கலைகளை மேடையேற்ற ஒரு விழா நடத்தவேண்டும் என்று நினைத்தோம். அதன் தொடர்ச்சியாக நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் இந்த கலைவிழாவை ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த கலைவிழா யாருக்கும்

‘அடங்க மறு’ படம் விறுவிறுப்பாக இருக்கும் – எடிட்டர் ரூபன்

ஒரு ஒளிப்பதிவாளர் தான் ஒரு திரைப்படத்தின் முதல் பார்வையாளர்  என்று பொதுவாக கூறப்படுவதுபோல், ஒரு எடிட்டர் தான் முழுமையான விமர்சகர் ஆவார். 'எடிட்டிங்' புகழ் வெளிச்சத்தில் இருந்து விலகி, தொலைதூரத்தில் இருந்த ஒரு துறையாக இருந்த போதிலும், அந்த இடைவெளியை இவர் மறைத்து விட்டார். ஆம், ரூபன் வெறுமனே எடிட்டிங் ட்ரான்சிஸன்ஸ் மட்டும் கவனம் செலுத்துவதற்கு மாறாக, ரசிகர்களின் துடிப்புகளை அறிந்து வைத்திருக்கிறார். ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில் டிசம்பர் 21ஆம் தேதி வெளியிட  திட்டமிடப்பட்டுள்ள அடங்க மறு படத்தில் ஈடுபாட்டுடன் இருக்கிறார். படத்தை பற்றி அவர் கூறும்போது, "அடங்க மறு' படத்தின் ரேஸினஸ் நம் நரம்புகளில் உணரப்படும். வழக்கமாக, ஒரு படத்தின் படம் பிடிக்கப்பட்ட காட்சிகள், எடிட்டிங் டேபிளை அடையும் போது, காட்சியிம் உண்மையான உணர்வை கொடுக்க, பல கட்ட செயல்கள் தேவைப்படும். ஆனால், அடங்க மறு படத்தில் எடிட்டிங்கின் ஆரம்ப கட்டத்திலேயே அதன் முழு உணர்வையும் கொடுத்தது. என் மனதில் தோன்றிய  முதல் மற்றும் முன்னணி விஷயம், இந்த படத்தை தீவிர அக்கறையோடு எடிட் செய்ய வேண்டும் என்பது தான். ஒட்டு மொத்த குழுவுக்கும் நன்றி, குறிப்பாக,

விஜய் சேதுபதி, சீனு ராமசாமி மீண்டும் இணையும் படம்!

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கலைஞர்கள் தற்போது மீண்டும் கைகோர்த்திருக்கிறார்கள், அதனால் சினிமா ரசிகர்கள் மிகவும்  உற்சாகமடைந்திருக்கிறார்கள். ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் சீனு ராமசாமி ஆகியோர் இணைந்திருக்கும் இந்த புதிய படத்தின் படப்படப்பிடிப்பு டிசம்பர் 14, 2018 காலை தேனியில் துவங்கியது. YSR Films சார்பில் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இர்ஃபான் மாலிக் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்த படத்துக்கு 'தயாரிப்பு எண் 2' என்ற தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. மேஸ்ட்ரோ, இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் முதன்முறையாக இணைந்து இந்த படத்துக்கு இசையமைப்பது மிக முக்கியமான சிறப்பம்சம் ஆகும். "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதையும் தாண்டி, மொத்த படமும் எப்படி இருக்கும் என்பது எனக்கு இப்போதே என்  கண்முன்னால் தெரிவதால், மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். பத்மவிபூசன் இசைஞானி இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் ஒரே படத்தில் இணைந்து இசையமைப்பது இதுவே முதல் முறை, அதுவும் அது என் படத்தில் நடப்பது  எனக்கு கிடைத்த பாக்கியம். மேலும் விஜய் சேதுபதி மற்றும் சீனு ராமசாமி கூட்டணி நான்காவது முறையாக

ரஜினியின் ‘பேட்ட’ உலக உரிமையை கைப்பற்றிய ’மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்’!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘பேட்ட’. இத்திரைப்படத்தினை இந்தியா தவிர்த்து உலக நாடுகளில் வெளியிடும் உரிமையை  பிரபல நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் பெற்றுள்ளது. இதற்கு முன் இந்நிறுவனம் ’கபாலி’, ’தெறி’, ‘பிச்சைக்காரன்’, ‘திமிரு பிடிச்சவன்’,  ’மொட்ட சிவா கெட்ட சிவா’, ’வி ஐ பி 2’, ’துப்பாக்கிமுனை’ உள்ளிட்ட படங்களையும் இந்நிறுவனம் உலக நாடுகளில் வெளியிட்டது. மேலும், விரைவில் திரைக்கு வரவுள்ள ’அடங்கமறு’ படத்தினையும் இந்நிறுவனமே வெளியிடவுள்ளது. வெளிநாடு வெளியீடு உரிமையை பெற்ற மலேசிய மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் வரும் 2019 ஜனவரி பொங்கல் திருநாளில் ரஜினியின் ‘பேட்ட’ திரைப்படத்தின் உரிமையை (இந்தியா தவிர்த்து) பெற்றுள்ளதாக அந்நிறுவன உரிமையாளர் ’டத்தோ’மாலிக் தெரிவித்துள்ளார்.  

Top
error: Content is protected !!