You are here
Home > 2019 > January

அகோரியாக நடிக்கும் அனுபவம் ஜாக்கிஷெராப் பேட்டி

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கும் பாண்டி முனி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.படப்பிடிப்பில் அகோரி வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ஜாக்கி ஷெராப் .. சாதாரண நடிகர்கள் கூட தன்னை மிக உயர்ந்தவர்களாக காட்டிக் கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் மிக உயர்ந்த இடத்தில் மதிக்கக் கூடிய நிலையில் இருக்கும் ஜாக்கி சாதாரண மனிதனாக எல்லோருடனும் பழகிக் கொண்டிருந்தது ஆச்சர்யம் தான். எல்லோருடனும் செல்பி எடுத்துக் கொண்டிருந்த அவரை மடக்கி பேசினோம்..இந்த படம் பற்றிய உங்கள் கண்ணோட்டம் என்ன ? இதில் நான் அகோரியாக நடிக்கிறேன்..டைரக்டர் கஸ்தூரிராஜா கதையை சொன்னவுடன் இது எனக்கு புது மாதிரியான காரக்டராக இருக்கும் என்று நினைத்து ஓ.கே.சொன்னேன்.. ஆரண்ய காண்டம் மாயவன் மாதிரி இது வேறு ஒரு கதைக்களம்...என் உருவத்தை மட்டும் அல்ல..என் நடை உடை பாவனை எல்லாவற்றையுமே இது மாற்றும் படமாக இருக்கும்..டைரக்டர் என்ன சொன்னாரோ அதை அப்படியே நான் பிரதிபலிக்கிறேன்..நானாவது இந்த கதையில் ஆறு மாதங்கள் தான் ஊறி இருக்கிறேன்..ஆனால் இயக்குனர் ஆறு ஆண்டுகளாக இதை டிரீம் சப்ஜெக்டாக சுமந்து கொண்டிருக்கிறார்... சிவபக்த அகோரியாக நடிக்கிறேன்...நல்லது செய்யும் முனீஸ்வரன் என்ற அகோரிக்கும் எல்லோரையும்

இளம்பிறை மணிமாறன் கணவர் மணிமாறன் காலமானார் .நடிகர் சிவகுமார் இரங்கல் !!

பிரபல மேடை பேச்சாளர் இளம்பிறை மணிமாறனின் கணவர் மணிமாறன் நேற்று காலமானார் .சுமார் ஓராண்டு காலம் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவர் நேற்று பகல் 12 மணிக்கு மறைந்து விட்டார். இந்த இழப்பு இளம்பிறை ஈடு செய்ய முடியாதது. மதுரையில் நேற்று மாலை 6 மணியளவில் மதுரையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. மணிமாறன் பற்றி நடிகர் சிவகுமார் கூறியது :- தூத்துக்குடியில் உள்ள APC மஹாலக்ஷ்மி கல்லூரியில் ஆங்கில பேராசிரியையாக இருந்து, பிறகு அதே கல்லூரியில் தாளாளராக ஓய்வு பெற்றவர் இளம்பிறை மணிமாறன் அவர்கள். இவர் தமிழ் இலக்கியங்களில் இராமாயணம், மகாபாரதம், பாகவதம், கந்தபுராணம், நாலாயிர திவ்ய பிரபந்தம், திருக்குறள் என்று அனைவற்றையும் கரைத்து குடித்தவர். கிட்டத்தட்ட 5000 மேடைகளில் இலக்கியங்கள் பற்றி உரையாற்றியிருக்கிறார். 2009-ல் என்னுடைய வீட்டிற்கு வந்தார். நான் முழு கம்பராமாயணத்தையும் 2 மணி நேரம் 10 நிமிடத்தில் கூறினேன். அதைக் கேட்ட அவர் இதைப் பயிற்சி செய்ய எவ்வளவு நாள் ஆனது என்று கேட்டார்கள். ஒரு வருடம் என்றேன். நீங்கள் செய்தது அசுர சாதனை என்று பாராட்டினார். அதேபோல், மஹாபாரதம் பேசும்போதும் மேடையில் அமர்ந்து எனக்கு ஊக்கமளித்தார்.

பிரபல அரங்கில் வெளியடப்பட்ட “மே 22 – ஒரு சம்பவம்” படத்தின் போஸ்டர்

அஹிம்சா புரோடக்ஷ்ன்ஸ் தங்களது தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது படத்திற்கு "மே 22 - ஒரு சம்பவம்" எனப் பெயர் சூட்டியுள்ளனர். "மே 22 - ஒரு சம்பவம்" படத்தின் முதல் பார்வை போஸ்டர் 24 ஜனவரி அன்று ஸ்விட்சர்லாந்து, டாவோஸ்ஸில் உள்ள புகழ்பெற்ற உலக பொருளாதார மன்றத்தில் (World Economic Forum - WEF) வெளியிடப்பட்டது. உலக பொருளாதார மன்றம் (WEF) உலகளாவிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட சுயாதீனமற்ற பொது நல அமைப்பு ஆகும். தமிழ்நாட்டில் பல சமுதாய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், "மே 22 - ஒரு சம்பவம்" படத்தின் முதல் பார்வை போஸ்டர் உலக பொருளாதார மன்றத்தில் வெளியிடப்பட்டது முக்கியதுவம் வாய்ந்தது. இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் சந்தோஷ் கோபால் மற்றும் தயாரிப்பாளர் நிருபமா சந்தோஷ் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். சந்தோஷ் கோபால் இயக்குனராக அறிமுகமான ஜல்லிகட்டு 5 -23 Jan 2017 விரைவில் வெளியாகவிருப்பது குறிப்படத்தக்கது. "மே 22 - ஒரு சம்பவம்" சமீப காலங்களில் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் சார்ந்த் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படம். மே 22 - ஒரு சம்பவம் திரைப்படம் ஒரு முன்று

“ராஜாவுக்கு செக்’ வைக்க சேரன் தான் தேவைப்பட்டார்”

இயக்குநர்  சேரன் மீண்டும் நடிப்பு, இயக்கம் என சுறுசுறுவென தனது  அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். ஒரு பக்கம் ‘திருமணம்’ படத்தை இயக்கி நடித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் ‘ராஜாவுக்கு செக்’ படத்திலும் நடித்து முடித்துவிட்டார்.   இதில் ராஜாவுக்கு செக் படம் எமோஷனல் திரில்லராக புதுவிதமான சேரனை நமக்கு காட்டும் படமாகத் தயாராகியுள்ளது இந்த படத்தை இயக்கியுள்ளார் சாய் ராஜ்குமார். பெயர் புதிது போல் தோன்றினாலும், ஏற்கனவே ’ஜெயம்’ ரவியை வைத்து தமிழில் ’மழை’ என்கிற படத்தை இயக்கிய அதே ராஜ்குமார் தான் இவர். கொஞ்ச காலம் தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்றுவிட்டு தற்போது சாய் ராஜ்குமார் ஆக மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். இந்த படம் குறித்த சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்  இயக்குநர் சாய் ராஜ்குமார். “ ‘ராஜாவுக்கு செக்’    படத்தின் கதையை உருவாக்கி முடித்ததுமே இதில் யார் நடித்தால் சரியாக இருக்கும் என்கிற கேள்வி எழுந்தபோது முதல் ஆளாக என் மனதில் தோன்றியவர் சேரன் தான்.. காரணம் சில விஷயங்களை சிலர் சொன்னால்தான் அது சேரவேண்டிய இடத்திற்கு சரியாக சென்று சேரும். இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு முக்கிய பிரச்சனையை  மத்திம வயதில் உள்ள அதேசமயம் மக்களுக்கு நன்கு அறிமுகமான சேரன் போன்ற ஒரு  நடிகர்

Sarvam-thaalamayam – Review

மின்சாரக்கனவு, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் ஆகிய படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் இயக்கியுள்ள படம் 'சர்வம் தாள மயம்.' ஜி.வி.பிரகாஷ், நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு இசயமைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். மிருதங்கம் தயாரிப்பதை தொழிலாக செய்து வருபவர் குமரவேல். அவருடைய மகன் ஜி.வி.பிரகாஷ், விஜய்யின் தீவிர ரசிகன். மிருதங்க இசை உலகின் ஜாம்பவனாக திகழ்ந்து வருபவர் நெடுமுடி வேணு. அவருடைய மிருதங்க இசையால் ஈர்க்கப்படும் ஜி.வி.பிரகாஷ் சிஷ்யனாக சேர்த்துக்கொள்ள அவரிடம் கேட்கிறார். முதலில் மறுப்பு தெரிவிக்கும் அவர் பின்னர் சேர்த்துகொள்கிறார். இதனால் நெடுமுடி வேணுவிடம் முதலிடத்தில் இருக்கும் சிஷ்யன் வினீத் - ஜி.வி.பிரகாஷ் இடையே மோதல் ஏற்பட்டு ஜி.வி.பிரகாஷ் வெளியேற்றப்படுகிறார். அதன் பின்னர் நடக்கும் சம்பவங்களே. சர்வம் தாளமயம்! இயக்குனர் ராஜீவ் மேனனின் துணிச்சலான பாத்திரப்படைப்பு பாராட்டப்படவேண்டிய ஒன்று. குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு மட்டுமே இசை சொந்தமானது இல்லை என சொன்ன விதம் அருமை நேர்மையான பதிவு. 'வேம்பு ஐயர்' நெடுமுடி வேணு, 'தலித் கிருஸ்துவ இளைஞன்' ஜி.வி.பிரகாஷ் இவர்களுக்கிடையே நடக்கும் உணர்ச்சி பூர்வமான வசனங்கள் ரசிக்க வைக்கிறது. பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் தொலைத்த தொலைக்காட்சிகளின் 'ரியாலிட்டி ஷோவின்' தில்லு முல்லுவை

விரைவில் வெளியாகவுள்ளது நாடோடிகள் 2

2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது . இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் "நாடோடிகள் – 2 " உருவாகி வருகிறது. இதில் சசிகுமார் - அஞ்சலி காதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். மற்றும் பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார். இசை - ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு - ஏகாம்பரம், கலை - ஜாக்கி, எடிட்டிங் - ரமேஷ், பாடலாசிரியர் – யுகபாரதி, சண்டை பயிற்சி - திலீப் சுப்புராயன், நடனம் - திணேஷ், ஜான், தயாரிப்பு மேற்பார்வை - சிவசந்திரன். தயாரிப்பு - எஸ்.நந்தகோபால் . எழுதி இயக்குகிறார் - சமுத்திரகனி. விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. படமும் விரைவில் வெளிவர இருக்கிறது.

ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தைக் கொடுக்கும் ‘ஒற்றைப் பனை மரம்’

நல்ல திரைப்படங்களை வெளியிட வேண்டும்; தயாரிக்கவும் வேண்டும் என்ற எண்ணத்தில் திரையுலகுக்கு வந்திருப்பவர் ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல். இவர், நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டார். தற்போது இவர் ஒற்றைப் பனை மரம் என்ற புதிய படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறார். 'போர் முடிவுறும் இறுதிநாட்களில் ஆரம்பிக்கும் இப்படம், சமகால சூழலில் முன்னாள் போராளிகளும் மக்களும் முகம் கொடுக்கும் சொல்லத் துணியாத கருவை தெள்ளத் தெளிவாக உருவாக்கி இருக்கிறார்கள். யதார்த்த நடிப்பு, இயல்பான காட்சியமைப்பு, இதயத்தை கனத்துப்போக வைக்கும் திருப்பங்கள் என கதைக்குள் உங்களை அழைத்துச் சென்று, ஈழத்தில் கிளிநொச்சியிலுள்ள கிராமத்தில் வாழ வைத்து வதைத்து விடும் அளவிற்கு இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இப்படத்தை தயாரித்தது குறித்து எஸ்.தணிகைவேல் கூறும்போது, ‘ஒற்றைப் பனை மரம்’ திரைப்படத்தை தயாரித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை இப்படம் கண்டிப்பாக கொடுக்கும். நான் தயாரித்ததில் கிடைத்த மகிழ்ச்சி, நீங்கள் பார்க்கும் போது உங்களுக்கு புரியும்' என்றார். இப்படம் 37 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 12 விருதுகளையும்

தோழர் என்பதன் பொருள் மாறிவிட்டது -இயக்குநர் ராஜு முருகன் ஆதங்கம்

ஒலிம்பியா மூவில் சார்பில் எஸ் அம்பேத்குமார் தயாரித்திருக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியிட்டு விழா இன்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்அம்பேத்குமார், ஒளிப்பதிவாளர் எஸ் கே செல்வகுமார், படத்தொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்டா, பாடலாசிரியர் யுகபாரதி, இயக்குநர் ராஜுமுருகன், படத்தின் நாயகன் நடிகர் ஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த படத்தில் ஜீவா, நடாசா சிங், ஸன்னி வைய்ன், லால் ஜோஸ், பாடகி சுசீலா ராமன், விக்ராம் சிங், கருணா பிரசாத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.இந்த படத்தில் ‘சே ’என்ற பெயரில் குதிரை ஒன்றும் நடித்திருக்கிறது. பாடலாசிரியர் யுகபாரதி பேசுகையில்,“இயக்குநர் ராஜு முருகனை நான் நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சிக்கிறேன். ஆனால் அவரோ என்னை ‘உள்ளே’வைக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அது இந்த படத்தில் நடைபெறுகிறதா? அல்லது அடுத்து வரும்படங்களில் நடைபெறவிருக்கிறதா?என்று தெரியவில்லை. இந்த பாடலில் சொல்லப்பட்டிருக்கும் விசயம் தான் படம் முழுவதும் சொல்லப்பட்டிருக்கும். அதையும் கடந்து இயக்குநர் ராஜு முருகனின் முந்தைய இரண்டு படங்களில்லாத காட்சிபடிமத்தை இந்த படத்தில் பார்க்கமுடியும். இந்த படத்தின் கதை, ஏறக்குறைய தமிழ் திரையுலகில்

Top
error: Content is protected !!