You are here
Home > 2019 > February

அபி சரவணன் வெண்பா இணையும் ‘மாயநதி’

ராஜி நிலா முகில் பிலிம்ஸ் சார்பில் அஷோக் தியாகராஜன் தயாரித்து இயக்கி வரும் படம் ‘மாயநதி’. இதில் நாயகனாக ‘பட்டதாரி’, ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ ஆகிய படங்களில் நடித்த அபி சரவணன் நடிக்கிறார். காதல் கசக்குதய்யா, ‘பள்ளி பருவத்திலே’ ஆகிய படங்களில் நடித்த வெண்பா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இவர்களுடன் ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி, தமிழ் வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், எழுதி அஷோக் தியாகராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் குறித்து அவர் கூறும்போது, ‘மகள் மீது பாசமும், அதீத நம்பிக்கையும் கொண்ட ஒரு தந்தை, டாக்டராவதையே லட்சியமாகக் கொண்ட ஒரு பெண், இலக்குகள் எதுமின்றி காதலிப்பது ஒன்றையே குறிக்கோளாக கொண்ட ஒரு சராசரி இளைஞன். இவர்களைப் பற்றிய சுவாரசியமான நிகழ்வே ‘மாயநதி’ பதின்ம வயதில் இயல்பாக ஏற்படும் காதல் அல்லது இனக்கவர்ச்சியை கடந்து ஒரு பெண்ணால் தனது லட்சியத்தை அடைய முடிந்ததா? என்பதை யதார்த்தமாக கூறியுள்ளார் இயக்குனர். இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி இசையமைத்து ஒரு பாடலையும் பாடியுள்ளார். பாடல்களை கவிஞர் யுகபாரதி எழுத, ஸ்ரீநிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்ய, மயில் கிருஷ்ணன் கலை இயக்கத்தை கவனிக்க,

விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன்!

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் " தமிழரசன் " இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சோனு சூட் முக்கிய வில்லன் வேடம் ஏற்கிறார். பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 15 நாட்கள் சென்னையில் நடைபெற்றது. விஜய் ஆண்டனி - ரம்யா நம்பீசன் சம்மந்தப் பட்ட காட்சிகள் மற்றும் விஜய் ஆண்டனி வில்லன் சோனு சூட் மோதும் ஆக்‌ஷன் காட்சிகள் படமானது. அத்துடன் 1000 கல்லூரி மாணவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டக் காட்சிகளை 4 காமிராக்களை கொண்டு ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கினார். இந்த காட்சிகள் திரையில் மிகப் பெரிய பிரமிப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

சீனாவில் படமான பிரபுதேவா நடிக்கும் ‘எங் மங் சங்’

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன் கே.எஸ் .சிவராமன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் "எங் மங் சங் "இந்த படத்தில் பிரபுதேவா கதா நாயகனாக நடிக்கிறார்...கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மற்றும் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்ராலட்சுமனன், கும்கி அஸ்வின் காளிவெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா இவர்களுடன் பாகுபலி வில்லன் பிரபாகர் இந்த படத்திலும் வில்லன் வேடம் ஏற்கிறார். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். அர்ஜுன் .M.S.கும்பகோணம், பொள்ளாச்சி ஆகிய இடங்களைத் தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்தார்கள். அதைத் தொடர்ந்து சீனாவில் டெங் லெங் என்ற இடத்தில் ஏராளமான செலவில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தினார்கள். பிரபுதேவா வில்லன்லளுடன் மோதும் சண்டை காட்சிகளை சில்வா அமைக்க படமாக்கப் பட்டது. குங்பூ மற்றும் சைனீஸ் ஸ்டண்ட் பற்றிய காட்சிகள் கொண்ட படம் என்பதால் அதிக சிரத்தை எடுத்து படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்...1980 கால கட்டத்தில் நடப்பது மாதிரியான கதைக்களத்தைக் கொண்ட படமாக எங் மங் சங் உருவாகிக் கொண்டிருக்கிறது.

தற்கொலைக்கு தீர்வு காண ‘ரீச் தீஷா’வுடன் கைகோர்க்கும் விஷால்

பல குழந்தைகள் உளவியல் ரீதியான பிரச்னை காரணமாகவும், மனஅழுத்தத்தாலும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதிலும் குறிப்பாக இளவயதினர்கள் தான் அதிகமாகி வரும் மிகவும் வருத்தமான சூழ்நிலையே தற்போது நிலவுகிறது. இதற்கு முற்றிலும் தீர்வுகாண நாராயணா நிறுவனம் 'தி திஷா ஹெல்ப்லைன் ' உடன் கைகோர்த்துள்ளார். இதனால் அனைத்து மாணவர்களும் தங்களின் மனநல பாதிப்புகளுக்கு இலவச எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மேலும் நடிகர் விஷால், இதுபோன்ற பாதிக்கப்படும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது :- உங்களுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது, விளையாட முடியவில்லை, நடக்க முடியவில்லை, ஏன்? நிற்கக்கூட முடியவில்லை. என்ன முடிவெடுப்பீர்கள்? முதலில் நாம் செய்யும் விஷயம், மருத்துவரை அணுக வேண்டும் என்று தானே? ஆனால் உளவியல் பிரச்சனைக்கு நாம் மருத்துவரைப் பற்றி சிந்திப்பதில்லை. இந்தியாவில் ஒவ்வொரு 1 மணி நேரத்திற்கும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொள்கிறார். நம் வீட்டு குழந்தைகள், அண்டை வீட்டு குழந்தைகள், நாம் நேசிக்கும் குழந்தைகள் மற்றும் உதவி தேவைப்படும் குழந்தைகள் ஆகியோர்களுக்கு நம்மால் உதவ முடியும். மனநல குறைகளுக்கு சிகிச்சை உண்டு. மேலும் அவற்றை முற்றிலும்

ஹரிஷ் கல்யாண்ரூ.1 லட்சம் நிதியுதவி!

பல வெற்றிப் படங்களில் நடித்த நடிகர் ஹரிஷ் கல்யாண், பிக்பாஸ் மூலமாகவும், "பியார் பிரேமம் காதல்" படத்தின் மூலமாகவும் இளைஞர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றவர். நேற்று புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியை சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணியனின் இல்லத்திற்கு ஹரிஷ் கல்யாண் நேரில் சென்றார். சுப்பிரமணியனின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், அவரது மனைவி பிரியா மற்றும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார். அப்போது பேசிய அவர், “தீவிரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைய வேண்டுமென” ஹரிஷ் கல்யாண் கூறினார்.

கே.ஆர்.விஜயா இரட்டை வேடமேற்கும் ‘கோடீஸ்வரி’

ஸ்ரீ ஆண்டாள் அம்பிகை கிரியேசன் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு "கோடீஸ்வரி " என்று  பெயரிட்டுள்ளனர். இந்த குடும்பக்கதை படத்தில் கே.ஆர்.விஜயா இரட்டை வேடமேற்று நடிக்கிறார். நீண்ட வருடங்களுக்கு பிறகு இவர் இரட்டை வேடமேற்று இருக்கிறார். இளம் நாயகனாக A.மோகன் அறிமுகமாகிறார். இன்னொரு நாயகனாக காவல் துறை அதிகாரியாக ரிஸ்வான் அறிமுகமாகிறார். இவர் மாடர்ன் தியேட்டர்ஸில் பணி புரிந்த எஸ்.ஏ.மஸ்தான் வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகிகளாக் அஷ்மா , சுப்ரஜா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். கராத்தேராஜா, டி.பி கஜேந்திரன், நெல்லை சிவா, முத்து, அஞ்சலி, ஸ்டாலின், ரமேஷ், பரமசிவம் எல்.ஆர்.விஜய், கோடீஸ்வரன் மாணிக் ஆகியோர் நடிக்கிறார்கள். தர்மதுரை என்ற வித்தியாசமான வேடத்தில் சேலம் .கே.முருகன் மற்றும் துரை ஆனந்த், C.கருணாநிதி, ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கிறார்கள். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சாய் இளவரசன். இவர் ஆர்.கே.செல்வமணி, டி.பி.கஜேந்திரன், கலைமணி, E.ராம்தாஸ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர். மதுரை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, சேலம், ஏற்காடு போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.

“Shades of Saaho Chapter 2” to be released on 3rd March 2019

Further to the hit sneak preview video launched on 22nd October 2018, the makers of Saaho, Director Sujeet & team announced yet another video featuring the making of the movie on 3rd March 2019. On Prabhas's birthday (October 22) last year, the makers of Saaho released the first glimpse of the film - Shades of Saaho, which became an instant hit among the fans. The making video had scenes of a high-octane stunt sequence that were shot in and around Dubai. The second video is expected to have silhouette shots of Prabhas which were captured using the Dino-Uri 18 KW setting. Word has it that the Shades of Saaho 2 video is all set to stun everyone. Saaho features Prabhas, Shraddha Kapoor, Neil

காத்து வாக்குல ஒரு காதல்

இந்தப் பூமியில் எங்கும் நிறைந்திருப்பது காற்று மட்டுமல்ல காதலும் தான். இரண்டையுமே கறுப்பா சிவப்பா என்று பார்க்க முடியாது. இனிப்பா கசப்பா என்று சுவைக்க முடியாது. ஆனால் உணர மட்டுமே முடியும். காற்றில் கலந்து வரும் பூமணம் போலவும் துர் மணம் போலவும் காதலில் காமம் கலந்த கெட்ட காதலும் உண்டு.அன்பு செறிந்த தூய நல்ல காதலும் உண்டு. அப்படி ஒரு புனிதமான காதலை இரண்டு மயிலிறகு மனசுகளை இனம் பிரித்து ஒரு கதையாக இழை பிரித்து உருவாகும் படம் தான் 'காத்து வாக்குல ஒரு காதல்'. சீரடி சாய்பாபா வழங்கும்  எஸ்.பூபாலன் தயாரிப்பில் லைக் அண்ட் ஷேர் மீடியா இணை தயாரிப்பில்  இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி நாயகனாக நடித்து இயக்குகிறார் மாஸ் ரவி  .நாயகியாக லட்சுமிபிரியா நடிக்கிறார். மற்றும் தெறி வில்லன் சாய்தீனா ,கல்லூரி வினோத் ,ஆதித்யா கதிர் ,லொள்ளு சபா ஆண்டனி ஆகியோருடன் புதுமுகங்கள் சிலரும் நடிக்கின்றனர். இப்படத்துக்கு ஒளிப்பதிவு சுபாஷ் மணியன். எடிட்டிங் ஸ்ரீ ராஜ்குமார் இவர் ஏ.வெங்கடேஷ், எஸ்.எஸ்.குமரன் படங்களின் படத்தொகுப்பாளர். இசை ஜுபின் .இவர் பழைய 'வண்ணாரப்பேட்டை', 'விண்மீன்கள்' படங்களின் இசையமைப்பாளர்

‘டு லெட்’ மாதிரி பத்து படங்கள் வந்தால் நிலைமை மாறும் – இயக்குநர் செழியன் உறுதி!

கல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் என தரமான படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் இயக்குநர் செழியன்.. தற்போது தான் இயக்குநராக அறிமுகமாகியுள்ள முதல் படமான ‘ டு லெட் ’ படம் மூலமாக உலக அரங்கில் நமது தமிழ் சினிமாவை மீண்டும் ஒருமுறை தலைநிமிரச் செய்துள்ளார். ஆம்.. கடந்த வருடம் நவ-17ஆம் தேதி கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் தான் முதன்முதலாக கலந்துகொண்டது ‘ டு லெட் ’ படம். அந்த ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது.. 32 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது. இந்த படம் வரும் பிப்-21ஆம் தேதி வெளியாகிறது. சர்வதேச திரைப்பட விருதுகள் குவித்தால் மட்டும் போதுமா..? இந்த படம் வணிகரீதியாக வெற்றி பெற்றுவிடும் வாய்ப்புகள் உள்ளதா..? எதனால் படம் வெளியாக இவ்வளவு தாமதம் என்பது குறித்தெல்லாம் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் இயக்குநர் செழியன் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மென்பொருள் துறை வளர்ச்சியடைந்ததும் வீடு வாடகைக்குக் கிடைப்பது எவ்வளவு பிரச்சனைக்குரியதாக மாறியுள்ளது.. நடுத்தர மக்கள் தான் இதில் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் அப்படி வாடகைக்கு வீடு தேடி

“எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்”

"எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்" புரட்சி கலைஞர் விஜயகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்தவர், அவரது நெருங்கிய நண்பரும், தயாரிப்பாளருமான மறைந்த இப்ராஹிம் ராவுத்தர். இவரது நிறுவனமான 'ராவுத்தர் மூவிஸ்'. நீண்ட இடைவெளிக்கு பிறகு 'நெடுஞ்சாலை' புகழ் ஆரி நடிப்பில் உருவாகி வரும் "எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்" எனும் படத்தை இப்ராஹிம் ராவுத்தரின் மகனான முஹம்மது அபுபுக்கர் தயாரித்து வருகிறார். "எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்" திரைப்படத்தை அறிமுக இயக்குனர் கவிராஜ் இயக்குகிறார். கதாநாயகியாக சாஷ்வி பாலா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் 'நான் கடவுள்' ராஜேந்திரன், பகவதி பெருமாள் மற்றும் நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். கார்த்திக் ஆச்சாரியா இசையமைக்க, லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்ய, கௌதம் ரவிச்சந்திரன் படத்தொகுப்பாளராக பணிபுரிகிறார். விரைவில் "எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்" படம் வெளியாகவுள்ள நிலையில் இன்று இதன் முதல் பார்வை (FirstLook)போஸ்டரை நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டார்.

Top
error: Content is protected !!