You are here
Home > 2019 > April

இகோர் இயக்கும் ‘வகிபா’

பிலிம் பூஜா என்ற பட நிறுவனம் சார்பில் ஸ்சொப்பன் பிரதான் கதை எழுதி தயாரித்திருக்கும் படம் “ வகிபா “ இது வண்ணக்கிளி பாரதி எனும் பெயரின் சுருக்கமாகும். இந்த படத்தில் புதுமுகம் விஜய்கரண் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக மனிஷாஜித் நடிக்கிறார். மற்றும் நான் மகான் அல்ல மகேந்திரன், கஞ்சா கருப்பு, A.வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். படம் பற்றி இயக்குனர் இகோர் கூறியதாவது.. ஒரு தனி மனிதன் அவனோட ஜாதிய மறச்சு வாழும்போது ஈசியாக வாழ்ந்து விடுகிறான். ஆனால் அவன் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவன் எனத் தெரிய வரும்போது அது அவனது வாழ்கையை குழப்புகிறது அல்லது கஷ்டத்தில் ஆழ்த்துகிறது இதுதான் இந்த படத்தின் கதை. பாரதி என்னும் இளைஞன் வண்ணக்கிளி என்னும் பெண்ணை காதலிக்கிறான், அவன் காதலுக்கு வந்த எதிர்ப்புகள் அனைத்தையும் தாண்டி வாழ தொடங்கும்போது ஜாதி வெறி அந்த அப்பாவி காதலர்களை எப்படி விரட்டி விரட்டி கொள்கிறது என்பதுதான் இந்த படம் சமூக நியாயம் கிடைக்காத ஒரு தனி மனிதன் எப்படி தன்னை தானே மறைத்துக்கொண்டு வாழ வேண்டியிருக்கிறது. என்கிற அவலத்தையும் அழுத்தமாகச் சொல்ல முயல்கிறது. இந்த படத்தில் வரும் பாரதியைப் போல

திரு நங்கைகள் மற்றும் ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸின் வேண்டுகோள்

காஞ்சனா 3 படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு மிக்க நன்றி. .என் மீது அன்புள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள்... என்னை பற்றியும் எனது சேவைகளை பற்றியும் அவதூறு பேசுவர்களை பற்றி கவலை படாதீர்கள்... என் மீது அக்கறை உள்ள ஒரு சில மாற்றுத்திறனாளிகளும் திருநங்கைகளும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சம்மந்தப்பட்டவர் மீது புகார் அளிப்பதாக கேள்விப் பட்டேன்...அப்படி எதுவும் செய்யாதீர்கள்..பொறுமையை கடை பிடியுங்கள்... நாம் நமது வழியில் நல்லதை மட்டும் நினைப்போம்..நல்லதை யே செய்வோம்.. அவர்கள் அவர்கள் வழியில் போகட்டும்.. எனக்கு ஒரு சின்ன பிரச்சனை என்றால் உடனே ஓடி வருகிற உங்கள் ஒவ்வொருவருக்கும் என் குடும்பத்தார் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.. நான் மும்பையில் காஞ்சனா இந்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன்..படப்பிடிப்பு முடிந்து வந்தவுடன் ஒரு நல்ல முடிவு எடுப்போம்..அது வரை அமைதி காப்போம்... கடவுள் நமக்கான நல்லதை செய்வார்.. நமக்கு கெடுதல் நினைப்பவர்களுக்கும் நாம் நல்லது நடக்க ஆண்டவனை பிரார்த்திப்போம்...நம்மை பற்றி புரிந்து கொள்ள ஆண்டவன் அருள் அவர்களுக்கு கிடைக்கட்டும் . இவ்வாறு ராகவா லாரன்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்…

“தேவராட்டம் சாதிப்படம் அல்ல. அது எனக்குத் தெரியாது”- இயக்குநர் முத்தையா

"நான் படிப்பில் மிடில் கிளாஸ் தான். இந்தப்படத்தில் வேலை செய்த எல்லோருமே படித்தவர்கள். ஹீரோ, கேமரா மேன், இசை அமைப்பாளர் இவர்களோடு வேலை செய்வது மனைவியோடு லைப் நடத்துவது போல. சரியாக இல்லாவிட்டால் சிக்கல் தான். ஞானவேல்ராஜா சாரிடம் கொம்பன் படம் நேரத்திலே கவுதமை வைத்து படம் எடுக்கலாம் என்றேன். அவர் கார்த்தியைத் தாரேன் என்றார். ஆனால் இன்று ஞானவேல்ராஜா சார் படத்தில் கவுதம் கார்த்தி இருக்கிறார் இதுதான் அவரது வளர்ச்சி. கொம்பன் படம் எனக்கு நல்ல அடையாளம். தேவராட்டம் சாதிப்படம் கிடையாது. எனக்கு அகு தெரியவும் தெரியாது. குடும்ப உறவுகளைப் பற்றிய படம் தான் இது. ஏன் உன் படத்தில் அருவாள் இருக்கிறது என்கிறார்கள். கமர்சியல் படம் என்றால் அதை வைத்து தான் ஆகவேண்டிய இருக்கிறது. வெளியில் வந்தால் தான் பிரண்ட்ஷிப். வீட்டுக்குள் வந்தால் உறவு தான். உறவுகள் சரியாக இருந்தால் தவறுகள் நடக்காது. பொள்ளாச்சி சம்பவத்தில் அப்படி ஈடுபட்டவர்களை பலரும் வெட்டவேண்டும் கொல்ல வேண்டும் என்றார்கள். அதை நிஜத்தில் செய்ய முடியவில்லை. அதனால் தான் அதைப் படத்தில் வைக்கிறோம். கோவத்தின் வெளிப்பாடு தான் ஹீரோவின் கேரக்டர். பணம் என்பது

கஸ்தூரி போலிஸ் அதிகாரியாக நடிக்கும் ” இ.பி.கோ 302 “

செளத் இந்தியா புரொடக்‌ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு " இ.பி.கோ 30 " என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கஸ்தூரி கதா நாயகியாக நடிக்கிறார். துர்கா ஐ.பி.எஸ் என்கிற பவர்புல்லான போலிஸ் அதிகாரி வேடமேற்கிறார். ஒரு கதா நாயகனுக்கு உருவாக்கப் படும் கதாபாத்திரம் எப்படி வலுவுள்ளதாக இருக்குமோ அப்படி இந்த கதாபாத்திரம் உருவாக்கப் பட்டுள்ளது. இளம் காதலர்களாக நாக சக்தி, வர்ஷிதா ஆகியோர் அறிமுகமாகிறார்கள் மற்றும் வையாபுரி ராபின் பிரபு,போண்டாமணி வின்ஸ்குமார் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சலங்கை துரை.இவர் கரண் நடித்து வெற்றி பெற்ற காத்தவராயன் படத்தை இயக்கியவர்.படம் பற்றி இயக்குனரிடம் பேசிய போது... கஸ்தூரி அதிகாரியாக உள்ள பகுதியில் மூன்று வழக்குகள். முகமெல்லாம் சிதைக்கப்பட்டு யார் என்று அடையாளம் கண்டு பிடிக்க முடியாத படி படுகொலை செய்யப்பட்ட ஒரு உடல் கிடைக்கிறது...செத்தவன் யார் என்றும் தெரியவில்லை..கொலை செய்தவன் யார் என்றும் தெரியவில்லை காவல் நிலையத்துக்குள் அடைக்கலம் தேடி வந்த இளம் ஜோடிகள்...வெளியே போனால் ஜாதி கொலையாகக் கூடிய வாய்ப்புள்ள பிரச்சனை. இன்னொரு படு கொலை வழக்கு. இந்த மூன்று கதைகளும் ஓரிடத்தில் வந்து

Shruti Haasan teams up with Vijay Sethupathi in director S P Jananathan’s Laabam!

தமிழ்சினிமாவில் சில சமயம் சில படங்கள் அபூர்வங்களை நிகழ்த்தும். அது ஒரு ட்ரெண்ட் செட்டை உண்டு பண்ணும். சமுதாயத்தில் ஒரு விழிப்புணர்ச்சியையும் பெரு மலர்ச்சியையும் ஏற்படுத்தும். அப்படியான படங்கள் உருவாகும் தருணம் எல்லாமே உயரிய தருணம் தான். தற்போது அப்படியொரு தருணம் வாய்த்துள்ளது. ஆரஞ்சு மிட்டாய், ஜுங்கா, மேற்குத் தொடர்ச்சி மலை ஆகிய படங்களைத் தயாரித்த நடிகர் விஜய்சேதுபதியின் சொந்த நிறுவனமான விஜய்சே துபதி புரொடக்‌ஷனும், நாளு போலிஸும் நல்லா இருந்த ஊரும், ஒரு நல்லநாள் பார்த்துச் சொல்றேன் ஆகிய படங்களைத் தயாரித்த 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து ஒரு மிகப்பிரம்மாண்டமான படத்தை தயாரிக்கின்றன. படத்தின் பெயர் லாபம். இப்படத்தின் கதாநாயகனாக விஜய்சேதுபதி நடிக்கிறார். தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரும் நாயகனாக மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் தன் படங்கள் மூலமாக லாபம் தரும் நாயகனாக இருப்பவர் நடிகர் விஜய்சேதுபதி. அவர் லாபம் படத்தில் நடிக்க இருப்பதே முதல் லாபம். அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க இருக்கிறார். தான் தேர்ந்தெடுக்கும் படங்கள் வெறும் படங்களாக மட்டும் இல்லாமல் ஒரு நல்ல பதிவாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர் ஸ்ருதிஹாசன். அப்படியான படமாக அவருக்கு லாபம் அமைந்துள்ளது. லாபம் படத்தில் முதன்முதலாக

அரசியலை வெளுத்து வாங்க வருகிறது “ஒபாமா உங்களுக்காக”

அது வேற,இது வேற என்ற படத்தை தயாரித்த ஜே.பி.ஜே பிலிம்ஸ் s.ஜெயசீலன் அடுத்ததாக தயாரிக்கும் படத்திற்கு "ஒபாமா உங்களுக்காக " என்று பெயரிட்டுள்ளார். பலரிடம் கதை கேட்டு ,ஆராய்ந்து தேர்வு செய்த படம் தான் "ஒபாமா உங்களுக்காக "படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது . அரசியலை அடித்து துவைத்து காயப்போடுகிற படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் பிருத்வி நடிக்கிறார். ஜனகராஜ் இது வரை ஏற்றிராத புது அவதாரம் ஏற்கிறார். புதுமுகநாயகி பூர்ணிஷா அறிமுகமாகிறார்.இயக்குநர்களாகவே விக்ரமன் ,கே.எஸ். ரவிக்குமார் ரமேஷ்கண்ணா ,மற்றும் T சிவா ,நித்யா, ராம்ராஜ் ,தளபதி தினேஷ் ,செம்புலி ஜெகன் ,கயல் தேவராஜ், விஜய் tv புகழ் கோதண்டம் ,சரத் ஆகியோர் நடிக்கிறார்கள். "பாஸ்மார்க் "படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன் தனது பெயரை "நாநிபாலா என்று மாற்றிக் கொண்டு இப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்து ஒரு பாடலுக்கு நடனமாடியும் அசத்தியிருக்கிறார். 'தாமஸ் ஆல்வா எடிசன் போனை கண்டு பிடித்தது பேசுவதற்காகத் தான் ஆனால் ஆண்ட்ராய்ட் மொபைலில் பார்க்க முடியாததோ ,சாதிக்க முடியாததோ எதுவும் இல்லை என்றாகி விட்டது. "ஒபாமா உங்களுக்காக படத்தின் "கதையின் நாயகனாக செல்போன் ஒன்று முக்கியமாக இடம் பெறுகிறது.

தமிழ்-மலையாளத்தில் உருவாகும் ஹாரர் ‘ஆகாசகங்கா-2’

தமிழில் 'காசி' படம் மூலம் விக்ரமுக்குள் இருந்த இன்னும் அதிகப்படியான நடிப்புத்திறமையை வெளியே கொண்டுவந்தவர் மலையாள இயக்குநர் வினயன். கடந்த 3௦ வருடங்களாக மலையாளத்தில் பல சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த இவர், என் மன வானில், அற்புத தீவு உள்ளிட்ட படங்களையும் தமிழில் இயக்கியுள்ளார். மறைந்த பிரபல நடிகர் கலாபவன் மணியின் வாழ்க்கை வரலாறாக இயக்குநர் வினயன் இயக்கிய ‘சாலாக்குடிக்காரன் சங்காதி’ என்கிற படம் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டானது. இப்படத்தில் கலாபவன் மணியாக நடித்து அறிமுகமான ராஜாமணி என்பவர் தற்போது மலையாளத்தில் பிஸியான கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அதிரடியான ஒரு ஹாரர் படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் நுழைகிறார் இயக்குநர் வினயன். மலையாளம், தமிழ் என இருமொழிப்படமாக உருவாகிறது இந்தப்படம். 2௦௦௦ல் வினயன் இயக்கிய சூப்பர்ஹிட் ஹாரர் படமான ‘ஆகாசகங்கா’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக இருக்கிறது. ஆகாசகங்கா வெளியான சமயத்தில் அந்தப்படம் மலையாள சினிமாவில் மிகப்பெரிய ட்ரெண்ட் செட்டர் படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து காமெடி கலந்த பல ஹாரர் படங்கள் உருவாக அது பாதை அமைத்துக் கொடுத்தது. இதே ஹாரர் பின்னணியில் 2௦௦5ல்

கிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன்

இயக்குனர் பொன்ராம் & இயக்குனர் M.P.கோபி அவர்களின் சொந்த ஊரான உசிலம்பட்டியில் அவர்கள் படித்த அரசு மேல் நிலைப்பள்ளியில், உசிலம்பட்டி வட்டார இளைஞர்களையும் மாணவர்களையும் ஊக்கு விப்பதற்காக ஒரு மாபெரும் இரண்டு நாள் கிரிக்கெட் விழா நடத்தினர். அதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பதினாறு அணிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற அணிக்கு திரைப்பட நடிகர் தயாரிப்பாளர் திரு.சிவகார்த்திகேயன் அவர்கள் அணியினரை சென்னைக்கு வரவழைத்து STUDIO GREEN ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ்.M இயக்கத்தில் உருவாகி வரும் மிஸ்டர் லோக்கல் படப்பிடிப்பில் மதியம் விருந்தும் விருதும் கொடுத்து அவர்களை கௌரவப்படுத்தினார். கிராமத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த எங்களுக்கு சென்னையில் திரு.சிவகார்த்திகேயன் அவர்களின் கரங்களால் விருது வழங்கியதை நினைத்து பெரும் அகிழ்ச்சியடைகிறோம் என்று வெற்றி பெற்ற அணியினர் கூறினர். இதை பற்றி இயக்குநர்கள் பொன்ராம் & M.P கோபி அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றால் , 'நாங்கள் படித்த அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு விழா நடத்த வேண்டுமென்று ரொம்ப நாள் ஆசை.. அப்போதுதான் திரு.சிவகார்த்திகேயன் அவர்களின் தயாரிப்பில் வெளிவந்த கனா படம் எங்களுக்கு தூண்டுதலாக இருந்தது. அந்த ஸ்பார்க்கில் எங்கள் ஊரில்

Top
error: Content is protected !!