You are here
Home > 2019 > May

சிறுபான்மை மக்களுக்கு ஏற்பட்டுள்ள கற்பனை பயத்தை போக்க வேண்டும் – பிரதமர் மோடி

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி அநேக இடங்களில் வெற்றி பெற்றது. இதில் பாஜக 303 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மை வெற்றி பெற்று தனி வரலாறு படைத்தது. இதையடுத்து ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை பா.ஜ.க முன்னெடுத்தது. இதற்காக டெல்லியில் சனிக்கிழமை பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் அடங்கிய கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வாக்களித்தவர்களுக்கு மட்டுமின்றி வாக்கு அளிக்காதவர்களையும் சேர்த்துக் கொண்டே முன்னேற வேண்டும் என்று வலியுறுத்தினார். காங்கிரஸ் கட்சி சிறுபான்மை மக்களை வாக்கு வங்கி அரசியலுக்கு பயண்படுத்தி வருகிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக பாஜக செயல்படுவது போல் ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். அந்த எண்ணத்தை போக்க வேண்டும். நம்மை தேர்ந்தெடுத்த மக்களை ஒரு போதும் மறந்துவிடக்கூடாது. நடந்து முடிந்த தேர்தல் பிரிவினையை தகர்த்துள்ளது. மேலும் மக்களுடன் ஒன்று கலந்து பழகும் படி வலியுறுத்திப் பேசினார்.

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்துக்கு ‘யு’ சான்றிதழ்

தணிக்கை குழு உறுப்பினர்கள் 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா' படத்துக்கு 'யு' சான்றிதழ் கொடுத்திருப்பது ஒட்டுமொத்த குழுவுக்கும் மகிழ்ச்சியான ஒரு செய்தி. நடிகர்கள் ரியோ ராஜ், ஷிரின் காஞ்ச்வாலா, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், ராதாராவி மற்றும் நாஞ்சில் சம்பத் , அறிமுக இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் ஆகியோர் முற்றிலும் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவித்து வருகின்றனர். இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் கூறும்போது, "என்னைப் போன்ற ஒரு அறிமுக இயக்குனருக்கு, இது கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வது போல உள்ளது. குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் மிக்க மகிழ்ச்சி. இயற்கையாகவே, நாங்கள் கதை, திரைக்கதை எழுதும்போதே குடும்ப ரசிகர்களுக்கான படமாக நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜாவை கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இரும்தோம். இப்போது, சென்சாரில் நல்ல ஒரு சாதகமான முடிவு கிடைத்திருப்பது படத்தின் மீதான நம்பிக்கையை எங்களுக்கு மேலும் வலுவாக்குகிறது. படம் 90% நகைச்சுவை மற்றும் ரசிக்கக் கூடிய சுவாரசியமான தருணங்களை கொண்டிருக்கும், அதனுடன் நல்ல ஒரு செய்தியையும் கொண்டிருக்கும்" என்றார். ஒட்டுமொத்த படக்குழுவுடன் பணிபுரிந்த அனுபவத்தை பற்றி கூறும்போது, "இது ஒரு அமைதியான மற்றும் அழகான அனுபவம், எல்லோரும் அதனை

புதுமையான முறையில் ‘போதை ஏறி புத்தி மாறி’ டீசர்

இந்த நாட்களில், 'டீசர்' என்பது ஒரு படத்தின் பிரதான அடையாளமாக மாறி விட்டது. அதனால் அதை மிகச் சிறந்த முறையில் கொடுக்க கடின உழைப்பும், மிகப்பெரிய முயற்சிகளும் தேவைப்படுகின்றன. ஒரு நிமிடத்திற்கும் குறைவான கால அளவில் ஒரு படத்தின் கதையை பற்றி சொல்ல வேண்டி இருக்கிறது. சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப் பார்வையாளர்கள் என்ற முக்கிய காரணிகளும் தற்போது இருப்பதால், 'முதல் தோற்றத்திலேயே அனைவரையும் ஈர்க்க வேண்டும்" என்ற ஒரு கோட்பாடு உள்ளது. 45 நொடிகள் ஓடும் இந்த போதை ஏறி புத்தி மாறி படத்தின் டீசர் மிகச்சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டு, உடனடியாக நேர்மறையான வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குனர் கேஆர் சந்துரு கூறும்போது, "முதலில், எங்கள் டீசரை அறிமுகப்படுத்த முழு மனதுடன் ஒப்புக் கொண்ட சூர்யா சாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இது போன்ற ஒரு சிறிய படத்தை ஆதரிக்க அவர் ஆர்வம் காட்டுவாரா என்ற சந்தேகம் இருந்தது, ஆனால் அவர் எங்களை மிகப்பெரிய வியப்பில் ஆழ்த்தினார். இது சமூக ஊடகப் பக்கத்தில் சாதாரண வார்த்தைகளை பற்றியது அல்ல, இந்த டீசரை பார்த்து தனிப்பட்ட முறையில் மனதாரால் பாராட்டினார். https://youtu.be/jKmiPHNpdlg டீசரை தொகுத்து உருவாக்கிய

குழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை அனைவரையும் மகிழ்விக்கும் படம் கொரில்லா!!

குழந்தைகளை கவரும் வகையில் வெளிவரும் படைப்பு எதுவாக இருந்தாலும் நிச்சயம் அது குடும்பங்களையும் கவரும். அப்படி குழந்தைகள் முதல் குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரையும் திருப்தி படுத்தும் விதமாக உருவாகி இருக்கிறது ஜீவா நடித்து, டான் சாண்டி இயக்கியுள்ள கொரில்லா திரைப்படம். பேப்பரில் இருக்கும் கதையை அப்படியே ஸ்கிரீனில் கொண்டு வருவதற்கு அசாத்தியமான கலை விரும்பி ஒருவர் தயாரிப்பாளராக இருக்க வேண்டும். கொரில்லாவின் தயாரிப்பாளர் ஆல் இன் பிக்சர்ஸ் விஜய் ராகவேந்திரா அத்தகையவர் தான். அது படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில் தெரிந்தது. சென்னையில் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இவ்விழாவில் படக்குழு உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். இயக்குநர் ராஜேஷ்செல்வா பேசியாதாவது, "இந்தப்படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என் படத்திலும் வொர்க் பண்ணி இருக்கிறார்கள். அதனால் இந்தப்ப்படத்தைப் பற்றி எனக்குத் தெரியும். மிக நன்றாக வந்திருக்கிறது படம். ஜீவா சாரோடு படம் பண்ண வேண்டும் என்பது என் ஆசை. கொரில்லா டீமுக்கு வாழ்த்துகள்" என்றார் இயக்குநர் கண்ணன் பேசியதாவது, " இந்தப்படம் மீது எல்லோருக்குமே எதிர்பார்ப்பு இருக்கிறது. ஜீவா என் இயக்கத்தில் வந்தான் வென்றான் படத்தில் நடித்த போது சந்தானம் சாருக்கு நிறைய ஸ்கோப் கொடுத்திருந்தார். அந்த

‘கன்னி மாடம்’ படம் மெட்ராஸ் என்றால் என்ன என்பதை வரையறுக்கும் – போஸ் வெங்கட்

ஒரு இயக்குனர் அவரின் திரைக்கதை எழுதும் திறமை மற்றும் இயக்கும் திறமைகளால் மட்டும் "கேப்டன் ஆஃப் தி ஷிப்" என்று அழைக்கப்படுவதில்லை, அதையும் தாண்டி சிறப்பான திட்டமிடலையும் செய்பவராக இருப்பார். ஒரு திரைப்படம் முன் தயாரிப்பு கட்டத்தில் நன்றாக திட்டமிடப்பட்டிருக்கும் போது, அது படப்பிடிப்பு நேரத்தின்போது நிச்சயம் அதிக நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும், குறிப்பாக குறித்த நேரத்தில் முடிக்க முடியும். "கன்னி மாடம்" படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ள நடிகர் போஸ் வெங்கட் தனது முயற்சியால் குறித்த நேரத்தில் படத்தை முடித்திருக்கிறார். இயக்குனர் போஸ் வெங்கட் இது குறித்து கூறும்போது, "பிப்ரவரி 18ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கி, மே 16ஆம் தேதி முடித்தோம். இதில் மொத்த குழுவும் பங்கு பெற்ற 35 நாட்கள் மற்றும் கேமரா குழுவினர் மட்டும் பங்கு பெற்ற 7 நாட்களும் அடங்கும். தயாரிப்பாளர் ஹஷீர் அவர்களின் முழு ஆதரவு இல்லாவிட்டால், இது சாத்தியமல்ல. அவர் படைப்பு சுதந்திரத்தில் தலையிடவே இல்லை. ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை படத்துக்கு ஆதரவாக இருந்தார். எங்கள் குழுவுக்கு இப்படி ஒரு தயாரிப்பாளர் கிடைத்தது ஆசீர்வாதம். உண்மையில், கடைசி நாள் படப்பிடிப்பு

ஆர்யா- சாயிஷா ஜோடி சேரும் டெடி!

திரை வாழ்க்கையில் ஜொலித்த ஆர்யா சாயிஷா ஜோடி திருமணம் செய்து நிஜ வாழ்க்கையில் இணைந்த பின் மீண்டும் திரையில் ஜோடியாக தோன்ற இருக்கிறார்கள். ஸ்டுடியோ கிரீன் சார்பில் K.E ஞானவேல்ராஜா தயாரிக்கும் 'டெடி' படத்தில் ஹீரோ ஆர்யா. ஹீரோயின் சாயிஷா. ஆர்யாவின் அர்ப்பணிப்பு மிகுந்த நடிப்பிற்கு பெருந்தீனி கொடுக்கும் வகையில் புதியவகை ஆக்சன் திரில்லர் கதையோடு தயாராகி இருக்கிறார் இயக்குநர் சக்தி சவுந்தரராஜன். இவர் ஏற்கெனவே நாணயம், மிருதன், நாய்கள் ஜாக்கிரதை, டிக் டிக் டிக் ஆகிய படங்கள் மூலமாக ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வைத்திருக்கும் இயக்குநர். இந்த 'டெடி' படமும் அவரது டெடி கேஷனில் அசுரப்பாய்ச்சல் பாய இருக்கிறது இயக்குநரின் ஆளுமைக்கு ஏற்ற தொழில்நுட்ப அணி இருந்தால் தான் அந்தக் கூட்டணி பெரிய வெற்றியடையும். அந்த வகையில் மிகச்சிறப்பான கூட்டணி இது. கேமரா மேனாக ராஜா ரங்கூஸ்கி, பர்மா, ஜாக்சன் துரை ஆகிய படங்களில் கெத்து காட்டிய யுவா. இசை அமைப்பாளராக டி. இமான். இதயங்களை அசைக்கும் ஓசையை கை வசம் வைத்திருக்கும் இசைஞர் அவர். திமிரு பிடித்தவன், காளி படங்களில் சிறப்பான சண்டைக்காட்சிகளை அமைத்த சக்தி சரவணன் ஸ்டண்ட்

ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் சாஹோ

ரெபல் ஸ்டார் பிரபாஸ் பாரம்பரிய நடைமுறை மற்றும் எது முடியும், எது முடியாது என்ற எண்ணங்களை எல்லாம் உடைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். பாகுபலி படத்துக்காக முழுமையாக ஐந்து ஆண்டுகளை அர்ப்பணித்த ஒரே நடிகராக திகழ்ந்தார் பிரபாஸ். அவரது கடின உழைப்புக்கு பலனாக உலகம் முழுக்க பல்வேறு சாதனைகளை புரிந்தது பாகுபலி. பிரபாஸ் ரசிகர்கள் அவரது அடுத்த படமான "சாஹோ"வுக்காக பொறுமையாக காத்திருக்கிறார்கள், அவர்கள் காத்திருப்பு தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. பிரபாஸ் Instagramல் சுட்டிக் காட்டியது போல காத்திருப்பு முடிந்து விட்டது. பிரபாஸ் மிகவும் தீவிரமாக இருக்கும் சாஹோவின் சமீபத்திய போஸ்டர் ஒன்றை அவரது Instagramல் வெளியிட்டார். அதில் படத்தின் வெளியீட்டு தேதி 15 ஆகஸ்ட் 2019 என குறிப்பிடப்பட்டிருக்கிறது. சரித்திர சாதனை படைத்த பாகுபலி படத்துக்கு பிறகு ரெபல் ஸ்டார் பிரபாஸின் நடிப்பில் வெளியாகும் முதல் திரைப்படம் என்பதால் வானளாவிய ஒரு எதிர்பார்ப்பு நிலவுகிறது. கதையை பற்றிய ஒரு துணுக்கு கூட வெளியாகாமலேயே இத்தகைய இமாலய எதிர்பார்ப்புகளை ஒரு திரைப்படம் உருவாக்கியிருப்பது இதுவே முதல் முறை. 'ஷேட்ஸ் ஆஃப் சாஹோ' பாகம் 1 மற்றும் பாகம் 2 மேக்கிங் வீடியோக்கள் பிரபாஸ் மற்றும் ஷ்ரத்தா கபூரின்

வேட்டை சமூகத்தை பிரதிபலிக்கும் ‘கள்ளன்’ படம்

யதார்த்த சினிமாவிற்கு எப்பொழுதுமே ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கும். அப்படியானதொரு யதார்த்த படமாக உருவாகி வருகிறது எழுத்தாளர் சந்திராவின் ‘கள்ளன்’. கதாபாத்திரத்துடன் தன்னை முழுமையாகப் பொருத்திக் கொண்டு சினிமாவை சுவாசிக்கும் ஒரு புகழ்பெற்ற ஆளுமை நடிக்கும்போது, அந்த படைப்பு மேலும் புகழ் பெறுகிறது. அத்தகைய குணங்களைக் கொண்டிருக்கும் கரு பழனியப்பன், எழுத்தாளர் சந்திரா இயக்கும் 'கள்ளன்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இயக்குநர்கள் அமீர் மற்றும் ராம் ஆகியோரிடம் சினிமா கற்ற இயக்குனர் சந்திரா ‘கள்ளன்’ பற்றிக் கூறும்போது, "கதை மற்றும் கதாபாத்திர வடிவமைப்பை எழுதி முடித்த போதே இந்த கதையின் மீது பெரிய நம்பிக்கை ஏற்பட்டது.அதை அப்படியே உள்வாங்கியதுடன், இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து தன்னைத் தயார் படுத்திக்கொண்டார் இயக்குனர் கரு.பழனியப்பன் சார். படத்தின் சூழ்நிலை மற்றும் பருவநிலைக்கு ஏற்ப தன்னை தயார் செய்து கொள்ள கதைக்காக நான் செய்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து அவரும் கூடுதல் முயற்சிகள் எடுத்தார். ரொம்பவும் உணர்வுபூர்வமான இந்தப் படத்தை இயக்கியிருக்கிறேன். ‘கள்ளன்’ இருவேறு காலங்களின் பின்னணியில் அமைந்த ஒரு கதையாகும். 1988-89ல் ஒன்றும், 1975 ஆம் ஆண்டில் இன்னொரு கதையும் நடக்கும். வேட்டையாடும்

Top
error: Content is protected !!