You are here
Home > 2019 > June

திருமண விழாக்களில் சர்ப்ரைஸ் கச்சேரி நடத்தும் அந்தோனிதாசன்

சிட்டி முதல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் பாடகர் அந்தோனி தாசன். அவரின் சினிமாப் பாடல்களும் நாட்டுப்புறப்பாடல்களும் எல்லாத்தரப்பு மக்களாலும் கொண்டாடப் பட்டு வருகின்றன. சொடக்குப் போடும் நேரத்தில் தன் கிராமியக் குரலால் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்தக் கூடிய அந்தோனி தாசன் சோனி மியூசிக் நிறுவனத்தில் ஆர்ட்டிஸ்டாக ஒப்பந்தம் செய்திருக்கிறார். அந்தோனி தாசனின் நாட்டுப்புறப் பாடல்களை சோனி நிறுவனம் தரமான முறையில் மக்களிடம் கொண்டுசேர்த்து வருகிறது. மேலும் தற்போது ஒரு புது முயற்சியை மக்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக சோனி மியூசிக் நிறுவனமும் அந்தோனி தாசனும் எடுத்திருக்கிறார்கள். திருமணவிழா, மற்றும் குடும்ப விழாக்களில் யாரும் எதிர்பாராத விதமாக அந்தோனிதாசன் மற்றும் அவரது டீம் உள்ளே சென்று ஒரு மினி கச்சேரியையே நடத்தும் சுவாரஸ்யமான முயற்சி அது. திருமணவிழா மற்றும் குடும்ப விழாக்களில் யாருக்கும் தெரியாமல் யாரிடமும் தகவல் சொல்லாமல் எதார்த்தமாகச் சென்று அந்தோனி தாசன் பாட்டுப் பாடுவார் கூடவே அவரது வாத்தியக்குழுவும் நாதஸ்வரம் மேளம் போன்றவற்றை இசைக்கும். இதை முதல்முறையாக சென்னையில் திருமணவிழாக்கள் மற்றும் குடும்ப விழாக்களில் அரேங்கேற்றினார்கள். அந்தோனி தாசன் மற்றும் அவரது வாத்தியக் குழு எதார்த்தமாக செல்வது போல சென்று

பாராட்டு மழையில் சிறகு படப் பாடல்கள்..

பர்ஸ்ட் காபி புரொடக்சன் சார்பாக மாலா மணியன் தயாரிப்பில் கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் படம் சிறகு. ஹரி கிருஷ்ணன் கதையின் நாயகனாகவும், அக்ஷிதா நாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் நிவாஸ் ஆதித்தன் பேசியதாவது "என்னுடைய பிலிம் கரியரில் இது எனக்கு ரொம்ப முக்கியமான படம். இதற்கு மேல் இப்படியொரு படம் அமையுமான்னு தெரியல. இந்தப்படம் வெளிவந்த பின் எனக்கு ஒரு பெரிய வாழ்க்கை காத்திருக்கிறது. வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மாலா மணியன் அவர்களுக்கும் இயக்குநர் குட்டி ரேவதி அவர்களுக்கும் நன்றி" என்றார். நடிகை டாக்டர் வித்யா பேசியதாவது, "23 வருசமா நான் மருத்துவரா இருக்கிறேன். ஆக்டிங் எனக்கு பெரிய பேஷன். எதாவது செஞ்சாகணும்னு உறுத்திக்கிட்டே இருந்தது. இந்தப்படத்துல ரொம்ப நல்ல கேரக்டர் பண்ணி இருக்கிறேன். தயாரிப்பாளர் மாலா மணியன் மேடம் எங்களை தன் பேமிலி மாதிரி பார்த்துக்கிட்டாங்க. அதே மாதிரி தான் குட்டி ரேவதி மேடமும். இந்தப்படத்துல நடிச்சிருக்கோம் என்பதை விட எங்கள் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தி இருக்கோம். சிறகு உயரப்பறக்கும்" என்றார். நாயகி அக்ஷிதா பேசியதாவது, "நான் இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். எனக்கு என்ன பேசுறதுன்னே

ஆதியின் “கிளாப் – தி சவுண்ட் ஆஃப் சக்சஸ்”

சினிமா மற்றும் விளையாட்டு ஆகியவை மட்டுமே வேற்றுமை கடந்து அனைவரையும் ஒரே புள்ளியில் இணைக்கும் விஷயங்கள். இவற்றில் மட்டும் தான் மக்கள் வேறுபாடுகள் மற்றும் பிரிவினை மறந்து, சிறப்பான தருணங்களை கொண்டாட ஒன்றாக இணைந்து வருகிறார்கள். விளையாட்டை மையப்படுத்திய படங்கள் ஏன, மொழி மற்றும் பிராந்திய எல்லைகளுக்கு அப்பாற்பட்டு மக்களை உச்சகட்ட உற்சாகத்தில் ஆழ்த்துகிறது என்பதற்கு இது ஒரு சரியான காரணம். இந்த சீசனில் தொடர்ச்சியாக விளையாட்டை மையப்படுத்திய திரைப்படங்கள் வெளிவருகின்றன. இந்த வரிசையில் பல விதிவிலக்குகளுடன் ஒரு திரைப்படம் இணைந்திருக்கிறது. அது ஆதி நடிப்பில் 'க்ளாப் - தி சவுண்ட் ஆஃப் சக்சஸ்' என்ற தலைப்பில் உருவாகும் படம். இந்த படத்தின் படப்பிடிப்பு 12-06-2019 காலை பூஜையுடன் துவங்கியது. இது குறித்து இயக்குனர் பிரித்வி ஆதித்யா கூறும்போது, "ஆம், விளையாட்டை மையப்படுத்திய படங்கள் நிறைய வருகின்றன, சமகாலத்திய இயக்குனர்கள் இந்த வகையிலான படங்களில் உள்ள ஒரே மாதிரியான கூறுகளை உடைத்து, புதிய மற்றும் வேறுபட்ட பரிமாணங்களை கொண்ட படங்களை கொடுப்பதை பார்க்க மிகவும் நன்றாக இருக்கிறது. அந்த வகையில், "CLAP" சில விதிவிலக்கான விஷயங்களை கொண்டுள்ளது. ஆதி சார் ஒரு

எந்த குழந்தையும் சிறு வயதில் வேலைக்கு செல்ல கூடாது – விஜய் ஆண்டனி

தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறை சார்பாக இன்று ஜூன் 12 குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர். நிலோபர் கபில் மற்றும் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய்அண்டனி, முன்னாள் பெப்சி தலைவரும், திரைப்பட தயாரிப்பாளருமான பெப்ஸி சிவா ஆகியோர் கலந்துகொண்டு " மெட்ரோ தொடர்வண்டி விழிப்புணர்வு பயணத்தில் பள்ளிக் குழந்தைகளுடன் டி.எம்.எஸ்சிலிருந்து ,ஏர்போர்ட் வரை மெட்ரோ ரயிலில் பயணித்தனர். விழாவில் விஜய் ஆண்டனி பேசியது.. எந்த குழந்தையும் சிறு வயதில் வேலைக்கு செல்ல கூடாது. நல்லா படிக்கணும் சந்தோஷமா வாழனும். குழந்தைகள் உருவாக்குவதுதான் வருங்கால இந்தியா அதனால் குழந்தைகளை படிக்க வைக்கவேண்டும். குழந்தை தொழிலாலர் இல்லாத நிலை வரவேண்டும் என்றா

விஜய்சேதுபதியுடன் அவரது மகன் நடித்துள்ள ‘சிந்துபாத்’

கே.புரொடக்ஷன்ஸ் எஸ்.என்.ராஜராஜன் மற்றும் வான்சன் மூவீஸ் ஷான் சுதர்ஷன் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ சிந்துபாத் “ இந்த படத்தில் விஜய்சேதுபதி நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக அஞ்சலி நடித்துள்ளார். மற்றும் விவேக்பிரசன்னா, லிங்கா, விஜய்சேதுபதியின் மகன் சூர்யா, ஜார்ஜ், அருள்தாஸ், கணேஷ், சுபத்ரா ஆகியயோர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் S U.அருண் குமார். சிந்துபாத் படம் குறித்து இயக்குனர் S U.அருண் குமார் கூறியதாவது.. நானும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து பணியாற்றும் மூன்றாவது இது. இதற்கு முன் இணைந்து பணியாற்றிய பண்ணையாரும் பத்மினியும், சேதுபதியும் மக்களால் பாராட்டப்பட்டது குறிப்படத்தக்கது. முதல் முறையாக , இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தன் தந்தையுடன் இணைந்து நடித்துள்ளார். அவர் நடிப்பு பெரும் அளவிற்கு ரசிகர்களை கவரும். சூரியாவும், விஜய் சேதுபதியும் இப்படத்தில் தந்தை மகனாக நடிக்க வில்லை என்றாலும் அவர்களுக்கு இடையே உள்ள உறவினில் ஒரு தனித்துவமான உணர்வு ரசிகர்களுக்கு ஏற்படும். விஜய் சேதுபதி முழு காது கேட்கும் திறன் இல்லாத திருடன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அஞ்சலி இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இன்னும் சொல்ல போனால்,

வியப்பில் ஆழ்த்தும் ‘அருவம்’ டீசர்!

சுட்டெரிக்கும் வெயில் நம்மை வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் நம்மை குளிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது சில விஷயங்கள். இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்ட, சித்தார்த், கேதரின் தெரஸாவின் "அருவம்" படத்தின் டீசருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது. திகில் மற்றும் பேய் படங்களின் சீசன் இது. ஆனால் இந்த படத்தின் குறுகிய மற்றும் சிறப்பான டீசர் அனைத்து அம்சங்களிலும் இது மிகவும் தனித்துவமான ஒரு படம் என்பதை உறுதிபடுத்துகிறது. உண்மையில், இந்த படம் எதை பற்றியது என்பதை அறிந்து கொள்ளும் ஒரு உடனடி உற்சாகத்தை உருவாக்கியிருக்கிறது. இயக்குனர் சாய்சேகர் இது பற்றி கூறும்போது, "இப்போதைக்கு எதை பற்றியும் பேசாமல் இருப்பது தான் ஒரே ஒரு வாய்ப்பு. எதை பற்றி சொன்னாலும் அது ஸ்பாய்லராக மாறிவிடும். திகில் படங்கள் என்பவை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டன, ஆனால் 'அருவம்' இந்த வகை படங்களில் இதுவரை பார்க்காத ஒரு வித்தியாசமான களத்தில் அதன் முக்கியத்துவத்தை நிரூபிக்கும். இது ஆக்‌ஷன், காதல் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை கொண்டிருக்கும் ஒரு திகில் படம், கிராமம் மற்றும் நகரம் என அனைத்து தரப்பினரையும் கவரும் என்று நம்புகிறோம். இந்த படத்தின்

ஜூன் 14ஆம் தேதி வெளிவரும் சுட்டுப்பிடிக்க உத்தரவு

"சுட்டு பிடிக்க உத்தரவு" படத்தின் டிரெய்லர் மற்றும் காட்சி விளம்பரங்கள் ரசிகர்களிடையே படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. கூடுதலாக, படத்தின் தலைப்பு இது நிக் ஆஃப் டைம் த்ரில்லர் வகையை அடிப்படையாக கொண்டது என்பதை குறிக்கிறது. இந்த படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் ஆகியோருடன் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ஜூன் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளன. இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா, முன்னணி இயக்குனர்களான மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் ஆகியோரை இந்த படத்தில் ஏன் நடிக்க வைத்தார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இது குறித்து ராம்பிரகாஷ் ராயப்பா கூறும்போது, "அவர்கள் வெறும் இயக்குனர்கள் என்பதையும் தாண்டி, தமிழ் சினிமாவில் எல்லாவற்றையும் அறிந்த மேதைகள். படப்பிடிப்பில் பல நேரங்களில், நானே அவர்களின் நுணுக்கமான நடிப்பை கண்டு வியந்திருக்கிறேன். ஸ்கிரிப்ட்டில் நான் எழுதிய கதாபாத்திரங்களுக்கு அவர்களின் நடிப்பு மூலம் உயிர் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய இயக்குனர்கள், அவர்களை இயக்கும்போது தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது. இருப்பினும், அத்தகைய

சசிகுமார், சரத்குமார் நடிக்கும் புதிய படம்

கல்பதரு பிக்சர்ஸ் தயாரிப்பாளர் பி.கே.ராம் மோகன் தனது அடுத்த தயாரிப்பான "தயாரிப்பு எண் 3" உருவாகி வரும் விதத்தால் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார். இந்த படத்தை 'சலீம்' வெற்றிப்படத்தை இயக்கி, தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்த என்.வி.நிர்மல்குமார் இயக்க, சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன் சாகச பொழுதுபோக்கு படமான இந்த படத்தின் ஒவ்வொரு அம்சமும், படத்தை முற்றிலும் வேறுபட்ட தளத்திற்கு கொண்டு செல்வதோடு, சசிகுமார் நடித்த முந்தைய படங்களில் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறது. குறிப்பாக, அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆடம்பரமான மும்பை மாநகரத்தில் தொடங்குகிறது, மேலும் சரத்குமார் இதில் கலந்து கொண்டு நடிப்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் பி.கே.ராம் மோகன் கூறும்போது, "நாங்கள் திட்டமிட்டபடியே, எல்லா வேலைகளும் மிகவும் சுறுசுறுப்பாகவும், நிலையான வேகத்திலும் தொடர்ந்து நடக்கின்றன. நிர்மல்குமாரின் சரியான திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதல் இல்லை என்றால், இது நிச்சயம் சாத்தியமல்ல. முக்கிய நடிகர்கள் நடிக்கும் படத்தை எந்த கால தாமதமின்றி குறித்த நேரத்தில் நிறைவு செய்யும் ஒரு இயக்குனர் அமைவது எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் பேரின்பம். எங்கள் படம் உருவாகி வரும் விதம்

மலேசியாவில் துவங்கும் சிம்புவின் ‘மாநாடு’

அமைதிப்படை-2, கங்காரு ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ், தற்போது மிக மிக அவசரம் என்கிற படத்தை தயாரித்துள்ளது. விரைவில் இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில், இதையடுத்து வெங்கட் பிரபு டைரக்சனில் சிம்பு நடிக்க, ‘மாநாடு’ என்கிற படத்தை மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்த நிறுவனம் தயாரிக்கிறது. கதாநாயகியாக பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருக்கிறார்.. இவர்கள் தவிர இன்னும் சில முன்னணி நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் இடம்பெறுகின்றனர்.. யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் அதிரடி அரசியல் படமாக இந்தப்படம் உருவாகிறது. சிம்பு இதுவரை நடித்த படங்களிலேயே படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக இருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் அறிவிக்கப்பட்டு பல நாட்கள் ஆனதால் படம் அவ்வளவுதான் டைட்டில் அறிவிப்போடு கைவிடப்பட்டது என்றெல்லாம் சில செய்திகளை பரப்பி வந்தனர் ஆனால் படப்பிடிப்பை துவங்குவதற்கான பக்காவான முன்கட்ட தயாரிப்பு பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுவந்ததை அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை. அவர்களின் நினைப்பை எல்லாம் தவிடு பொடியாக்கும் விதமாக, வரும் ஜூன்-25ஆம் தேதி மலேசியாவில் பாடல் காட்சியுடன் முதல்கட்ட படப்பிடிப்பு துவங்க

Top