You are here
Home > 2019 > July

ஹீரோவான சூரி!

'விண்னைதாண்டி வருவாயா', 'கோ', 'நீதானே என் பொன்வசந்தம்', 'யாமிருக்க பயமே' உள்ளிட்ட பல வெற்றி படங்களை RS இன்போடெய்ன்மெண்ட் சார்பாக தயாரித்த தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தற்போது எதார்த்த இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றார். பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த நடிகர் சூரி இப்படத்தில் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கின்றார். குடும்பமாக அனைவரும் ரசித்து பார்க்கும்படி இப்படம் நகைச்சுவை விருந்தாக அமையுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.  

‘ஜோதிகாவிடம் இருந்து கற்றுக்கொண்டேன்” – சூர்யா

'2D எண்டெர்டெயின்மெண்ட்' நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் ரேவதி ஜோதிகா நடித்துள்ள படம் 'ஜாக்பாட்'. கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை 'சக்தி பிலிம் பேக்டரி' சார்பாக சக்திவேலன் உலகமெங்கும் வெளியிடுகிறார். ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது. இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர் பேசியதாவது, "2D எண்டெர்டெயின்மெண்ட்' சார்பில் என்னிடம் படத்திற்காக கேட்டதே சந்தோஷமாக இருந்தது. ஜோதிகா மேடம் 90's கிட்ஸ்களின் தேவதை. இந்தப்படத்தில் நிறைய விசயங்களைக் கத்துக்கொண்டேன். நிறைய இனிமையான நினைவுகள் எனக்கு இந்தப்படத்தில் இருக்கு. ரொம்ப ஜாலியான படம் இது. கல்யாண் சார் தூங்குவாரா என்றே தெரியாது" என்றார் நடிகை சச்சு பேசியதாவது "கல்யாண் என்னிடம் கெஸ்ட் ரோல் பண்ணனும் என்றார். நான் கெஸ்ட்ரோல் பண்ண மாட்டேன் என்றேன். பிறகு யோசித்தேன். சிவக்குமார் பேமிலி. அவரோடு நடித்துள்ளேன். சூர்யாவோடும் நடித்துள்ளேன். ஜோதிகாவோடு தான் நடிக்காமல் இருந்தேன். அதனால் இப்படத்தில் நடித்தேன். சூர்யா எங்கள் முதலாளி அவர் பெரிதாக ஜெயிக்க வேண்டும்" என்றார். நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாவது, " சிவக்குமார் அவர்களின் அர்ப்பணிப்புகளை உள்வாங்கி சூர்யா சிறந்த படங்களை கொண்டு

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி படுகொலை – மு.க.ஸ்டாலின் கண்டனம்

நெல்லையில் நேற்று மாலை தி.மு.கவின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண் என 3 பேர் கொடுரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். இந்தக்கொலை குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் எந்த துப்பும் கிடைக்காமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளதாக போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது..   நெல்லை தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் உள்ளிட்ட மூன்று பேர் பயங்கரமாக படுகொலை செய்யப்பட்டிருப்பது  தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  அவர்களின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்ட தி.மு.கவின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது..   'கழகம் பெண்ணுரிமைக்காக போராடிய இயக்கம் மட்டுமல்ல - ஆண்களுக்கு நிகராக, சமமாகப் பொறுப்புகளை வழங்கும் இயக்கும் என்பதற்கிணங்க, 1996ல் நெல்லை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட உமா மகேஸ்வரி கழக பணியிலும், பொதுமக்களுக்கான பணியிலும் அனைவரும் போற்றும் வகையில் சிறப்பாக பணியாற்றி தலைவர் கலைஞர் அவர்களின் பாராட்டைப் பெற்றவர். நெல்லை மாநகர முதல் பெண் மேயர் என்ற பெயரையும் பெற்ற அவர், எளிமைக்கு இலக்கணமானவர். மாற்றுக் கட்சியினரையும் அரவணைத்துக் கொண்டு மாநகராட்சி நிர்வாகத்தை யாரும் குறை சொல்ல முடியாத அளவிற்கு நடத்தியவர். 2011-ல் நடைபெற்ற கழக

“டாணா”படம் வைபவ் வை காப்பாற்றுமா?

திறமைகள் இருந்தும் கோலிவுட்டில் இன்னும் உயரத்தை தொட முடியாத இடத்தில் இருக்கும் நடிகர்களில் வைபவ்வும் ஒருவர். தொடர் முயற்சிகள் செய்தும் வெற்றியை பெறமுடியாமல் இருக்கிறார். யுவராஜ் சுப்ரமணி இயக்கி, வைபவ் நடித்து விரைவில் வெளிவரவுள்ள படம் “டாணா”. சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட “டாணா”படத்தின் டீசர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இது படக்குழுவினரிடையே உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதனால் இப்படத்தின் மூலம் வைபவ்விற்கு பெரிய வெற்றி கிடைக்கும் என படக்குழுவினர்கள் நம்புகிறாரார்களாம். முழுபடமும் மோதல், காதல், காமெடி என அனைவருக்கும் பிடிக்கும் வகையில் அதன் திரைக்கதை அமைக்கபட்டுள்ளதாம். வைபவ், யோகிபாபுவின் ஒன் லைன் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்குமாம். இப்படத்தில் நந்திதா ஸ்வேதா நாயகியாக நடிக்க, பாண்டியராஜன், உமா பத்மநாபன் மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பார்த்திபன் உதவியாளர் இயக்குனராக அறிமுகமாகும் ‘பிரம்மபுரி’ மர்மப் படம்!

இயக்குனர், நடிகரான பார்த்திபனிடம் உதவியாளராக பணிபுரிந்த கிரண் மோகன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகும் படம் 'பிரம்மபுரி. இந்தப்படத்தை எபின் கொட்ட நாடன் '369 பிலிம்ஸ்' சார்பில் தயாரித்துள்ளார். அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. விரைவில் திரைக்கு வரவிருக்கும் 'பிரம்மபுரி' படம் குறித்து' இயக்குனர் கிரண் மோகன் கூறியதாவது.. 'பல நூற்றாண்டுகளாக "பிரம்மபுரி" என்ற காணாமல் போன நகரை தேடி வந்த தகவல் இந்த நூற்றாண்டில் ஒரு குழுவிற்கு தெரிய வருகிறது. அந்த நகரில் மிகப் பெரிய வைரப் புதையல் இருப்பதாக கேள்விப்பட்ட அந்த குழுவினர் அந்த நகரையும், புதையலையும் தேடிப் புறப்படுகின்றனர். அந்த குழுவினர் சந்திக்கும் திடுக்கிடும் சம்பவங்களும், பல அமானுஷ்யமான நிகழ்வுகளும் அவர்களுக்கு மிகப் பெரிய ஆபத்தை உண்டாக்குகிறது. இதிலிருந்து அவர்கள் மீண்டார்களா? மாண்டார்களா? என்பதை திரில்லாகவும் விறுவிறுப்பாகவும் சொல்லி இருக்கிறேன். அமெரிக்காவில் பெரும் பகுதி படம் படமாக்கப்பட்டுள்ளதுடன் இந்தியாவில் தமிழ்நாடு - கேரளா-கர்நாடக வனப் பகுதிகளிலும் படம்பிடிக்கப்பட்டுள்ளது." என்றார்.' இயக்குனர் கிரண் மோகன். இதில், ஜெர்மனியை சேர்ந்த மாடல் அழகி மார்ஷா, மிதுனா, ராம்சுபீன் ஜோஸ், பவானி அம்மா, கௌதம், 'மலேசியாவை சேர்ந்த 'அஜித் ஆகியோருடன் மேலும் பலரும் நடித்துள்ளனர்.

வலைதளங்களில் வைரலாகும் தலைக்கவச விழிப்புணர்வு!

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும்படி காவல் நிலைய அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அருண்சக்தி குமார் இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டார். அதன் ஒரு பகுதியாக சிந்தாமணி பேருந்து நிலையம் அருகே வாசுதேவநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சண்முகவேல் அவர்கள்; பொதுமக்கள் தலைகவசம் அணியாததால் ஏற்படும் உயிர் இழப்புகள் பற்றியும்¸ தலைகவசத்தின் முக்கியத்துவதை பற்றியும்¸ சீட்பெல்ட் அணிதல்¸ மது அருந்தி வாகன ஒட்டுதல் கூடாது போன்ற அறிவுரைகளை வழங்கினார். https://youtu.be/SP4CFnASVQw இவ்விழிப்புணர்வு பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

100 ஆண்டுகளை கடந்த க.பரமத்தி காவல் நிலையம்!

கரூர் மாவட்டம் க.பரமத்தி காவல் நிலையம் கடந்த 01-01-1919 அன்று துவங்கப்பட்டது. இந்த ஆண்டுடன் அந்த காவல் நிலையம் நூறு ஆண்டுகளை கடந்ததை தொடர்ந்து அதனை பெருமைபடுத்தும் விதமாக 17.07.2019-ம் தேதியன்று காவல் துறை சார்பாக நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் க.பரமத்தி பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்¸ மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பள்ளி மாணவ – மாணவிகளுக்கு பாட உபகரணங்கள் மற்றும் விளையாட்டு போட்டிகள் காவல் துறை சார்பில் நடைப்பெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திருச்சி சரக காவல் துணை தலைவர் திரு. பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்கள் பரிசுகளை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. அன்பழகன் இ.ஆ.ப அவர்கள் மற்றும் கரூர் மாவட்ட காவல் கண்பாணிப்பாளர் திரு. பாண்டியராஜன் அவர்கள் கலந்து கொண்டனர்.

Top