You are here
Home > 2019 > August

எட்டு வருடமாக உருவான ஆர்யாவின் ‘மகாமுனி’ படம்!

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மகாமுனி. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாயகன் ஆர்யா, நாயகிகள் மஹிமா நம்பியார், இந்துஜா, தயாரிப்பாளர் KE ஞானவேல்ராஜா, இயக்குநர் சாந்தகுமார், இசையமைப்பாளர் S.தமன், மற்றும்தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது, “2010-ல் மெளனகுரு என்ற படம் வெளியானது. நான் அந்தப் படத்தை மூன்றாவது வாரத்தில்தான் பார்த்தேன். அதில் ஒரு விபத்து காட்சி இடம் பெறும். அதைக் கண்டு நான்பெரிதும் வியந்தேன். அதன் பின்பு நான் இயக்குநர் சாந்தகுமாரை சந்தித்தேன். இந்த மாதிரி ஒரு படத்தை எடுப்பதற்கான எண்ணம் எப்படி வந்தது என்று கேட்டேன். அவருடன் வேலை செய்யவிருப்ப்ப்பட்டு இருவரும் இணைந்தோம். இந்தக் கதையை எழுதுவதற்கு அவருக்கு எட்டு வருடங்களானது. ஆனால், அது மிகவும் அற்புதமாக வெளிவந்திருக்கிறது. நாங்கள் முதலில் வேலை செய்யத் துவங்கியபோதுஅவருடைய மகன் நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். இப்போது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறார். இந்தப் படத்தின் மொத்தக் குழுவினரும் கடின உழைப்பைவெளிப்படுத்தியுள்ளனர்..” என்றார். கவிஞர் முத்துலிங்கம் பேசும்போது, “நான் இந்தப்

மொட்ட ராஜேந்திரன் நடிக்கும் ‘நானும் சிங்கிள் தான்’

'நானும் சிங்கள் தான்' ரொமேண்டிக் ,காமெடி படம். இந்த  திரைப்படத்தை இயக்குகிறார், புது முக இயக்குனர்  ரா. கோபி. கதாநாயகனாக அட்டகத்தி தினேஷ், கதாநாயகியாக தீப்தி ஷெட்டி  நடித்துள்ளனர். இதில் மொட்ட ராஜேந்திரன் முக்கியமான காமடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் இதுவரைக்கும் வில்லனாக, காமிடியனாக நடித்து இருந்தாலும் , இதில் இவர்  ஒரு ரோமேண்டிக் காமெடியனாக வருகிறார்.  லண்டன் வாழ் தமிழனாக FM ஸ்டேஷ்சனில்  ஆர்.ஜே வாக தனது கதாபாத்திரத்தில் கலக்கி உள்ளாராம். MR. LOVE என்ற பெயரில்  காதலர்களுக்கு டிப்ஸ் கொடுத்து உதவும் லண்டன்  லவ் குரு. காதலை சேர்த்து வைப்பறக்கு , காதல் தோல்வியில் விரக்தி அடைந்தவர்களுக்கு , முக்கியமாக சிங்கிளாக இருப்பவர்களை மிங்கிளாக மாற்ற பல ஐடியாக்களை கொடுக்கும் MR.LOVE  வாக கலக்கி இருக்கிராறாம்.

பிரம்மாண்டமாக உருவாகும் சந்தானத்தின் ட்ரிப்பிள் ஆக்‌ஷன் படம்!

'அறம்',, 'குலேபகாவலி', 'ஐரா' ஆகிய படங்களை தயாரித்த கொட்டப்பாடி ஜே.ராஜேஷ் தன்னுடைய 'கே.ஜே ஆர் ஸ்டியோஸ்' மற்றும் 'சோல்ஜர் பேக்டரி' கே.எஸ். சினிஸும் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்கள். இந்தப்படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கவிருக்கிறார். சயின்ஸ் பிக்‌ஷன் பின்னணியில் முழுக்க முழுக்க காமெடிப்படமாக உருவாகவுள்ள இப்படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார். இப்படத்தின் பெயர், மற்ற விபரங்களை வரும் செப்டம்பர் 5-ம் தேதி மாலை 5 மணிக்கு  அறிவிக்கப்பட இருக்கிறது பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் 2020 ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.

‘மஞ்சுவாரியாரின் டேலண்ட் எனக்குப் பிடிக்கும்.’ – தனுஷ்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் 'அசுரன்' .இப்படத்தை 'வி கிரியேசன்ஸ்' சார்பில் கலைப்புலி S தாணு தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது . இவ்விழாவில் நடிகர் தனுஷ் பேசியதாவது,.. "அசுரன் படத்தைப் பொறுத்தவரைக்கும் நம்பிக்கை தான் முக்கியமா இருக்கு. வெற்றிமாறன் தான் இயக்குநர் என்று தாணு சாரிடம் சொன்னதும் அவர் கதையே கேட்காமல் ஓ.கே சொன்னார். அந்த நம்பிக்கை ரொம்ப முக்கியமானது. வெற்றிமாறன் நான் நடிப்பதற்கு நிறைய கண்டெண்ட் கொடுப்பார். இந்தக் கதாப்பாத்திரம் என் 36 வயதில் கிடைத்திருப்பது பெரிய கொடுப்பனை. வேற எந்த நடிகருக்கும் அது கிடைக்குமா என்று தெரியவில்லை. இந்தப்படம் ஒரு முக்கியமான படமாக கண்டிப்பாக  இருக்கும் மிகவும் மகிழ்ச்சியுடன் நான் நடித்த படம் இது . வெற்றிமாறனும் அவர் டீமும் எனக்கு நல்ல ப்ளாட்பார்ம் கொடுத்திருக்காங்க. மஞ்சுவாரியாரின் டேலண்ட் எனக்குப் பிடிக்கும். அவரோடு நடிக்க வேண்டும் என்று ரொம்ப ஆசையாக  இருந்தது. கென்னுக்கு கான்பிடண்ட் அதிகம். டி.ஜே பாடியே நம்மை கரெக்ட் பண்ணிருவான். இப்ப இருக்குற இளைஞர்களிடம் நிறைய திறமை இருக்கிறது. ஜிவி ,அவரோடு வொர்க் பண்றது ஜாலியா இருக்கும். மண்

குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டுவர அழைப்பு  விடுத்த திரிஷா !

யுனிசெப் நிறுவனத்தின் நல் எண்ண தூதுவர் மற்றும் பிரபல தென்னிந்திய திரைப்பட நட்சத்திரமான செல்வி .த்ரிஷா கிருஷ்ணன் , குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வன்முறையும் முடிவுக்கு கொண்டுவர 3000 இளைஞர்கள் இதுகுறித்து பேசவும் , செயல்படவும் முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார் . வன்முறையை முடிவுக்கு கொண்டுவருதல் குறித்து இளைஞர்கள் மத்தியில் த்ரிஷா பேசுகையில் , "2014 முதல் 2016  வரை போஸ்கோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை எடுத்துரைத்தார் .தேசிய குற்றப்பிரிவு பணியகத்தின் 2016 ஆம் ஆண்டு அறிக்கையின்படி , 2014 ஆம் ஆண்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகள் சுமார் 9000 , 2015 இல் இது 15000 வழக்குகள் , 2016 இல் 36000 வழக்குகளாக இருமடங்காகிவிட்டது ." குற்றங்கள் மற்றும் குழந்தை பாலியில் துன்புறுத்தல்கள் , நம்பிக்கைக்குரிய குழந்தைகளுக்கு தெரிந்த நபரால் செய்யப்படுகின்ற என அவர் தெரிவித்தார் . பாலியல் துன்புறுத்துதல் வழக்குகளில் குற்றவாளிகள் 95 % பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிந்தவர்கள் " இது நமது குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழலை எடுத்துக்காட்டுகிறது . சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் சிறுவர்

Top