You are here
Home > 2019 > October

டார்ச்சர் தாங்காமல் படப்பிடிப்பை விட்டு ஓடிய ஹீரோயின்!

ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் பாப்பிலோன். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு   ராஜா. பாப்பிலோன் என்றால் தமிழில் வண்ணத்துப்பூச்சி என அர்த்தமாம். அப்பா இல்லாத தனது குடும்பத்தை அன்பாகக் கவனித்து வருகிறார் ஹீரோ. எதிர்பாராமல் அவரது தங்கையின் வீடியோ ஒன்று கயவர்களின் கையில் சிக்குகிறது.. அவர்கள் அதன்மூலம் தங்கையை பிளாக்மெயில் செய்து பணம் பறிப்பதுடன், ஒரு கட்டத்தில் அவரைக் கடத்தவும் முயற்சிக்கின்றனர்.. இதில் விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் செல்கிறார் தங்கை.. கதாநாயகி மூலம் இந்த விபரம் அண்ணனுக்குத் தெரியவர, இதன் பின்னணியில் உள்ள கும்பலை நாயகன் எப்படி வேரறுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. கதாநாயகியாக ஸ்வேதா ஜோயல் என்பவர் நடித்துள்ளார். தங்கையாக சௌமியா மற்றும் அம்மாவாக ரேகா சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். பண்ணையார் கதாபாத்திரத்தில் பூராமு மற்றும் அவரது மகளாக அபிநயா நடிக்க, ‘மாரி’ புகழ் வினோத் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஷ்யாம் மோகன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.. இவர் சமீபத்தில் வெளியான காவியன் படத்திற்கு இசையமைத்தவர். அருள்செல்வன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.. பார்த்திபனின் வித்தியாச முயற்சியான ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு படத்தொகுப்பு

Kaithi Movie Review

Kaithi Movie Review தொடர்ந்து வித்தியாசமான படங்களை தயாரித்து வரும், 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' மற்றும்  'விவேகானந்தா பிக்சர்ஸ்' இணைந்து தயாரித்துள்ள படம் 'கைதி'. இந்தப்படத்தில்  கார்த்தி, நரேன், ஜார்ஜ் மரியம், ரமணா, தீனா, அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன்  ஆகியோர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசைப்பதிவில் சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.  பிலோமின் ராஜ் எடிட் செய்ய, இரட்டையர்கள் அன்பறிவ்  சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள். 'கைதி'. படத்திற்கு கதை, திரைக்கதை, எழுதி இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், பொன். பார்த்திபனுடன் இணைந்து வசனமும் எழுதியுள்ளார். சுமார் 180 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட 'பிகில்' படத்துடன் 'கைதி' வெளியானதால் சினிமா ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியது.. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறார்களா பார்ப்போம். போதைப்பொருள் தடுப்புப் பிரிவு  ( Narcotics Control Bureau ) அதிகாரி நரேன் தலைமையிலான டீம் மிகப்பெரிய அளவிலான போதைப்பொருளை சீஸ் பண்ணி ஒரு பாதுகாப்பான இடத்தில் வைக்கின்றனர். அதனால் கடும்கோபத்திற்கு ஆளாகும் ட்ரக்ஸ் மாஃபியா  நரேன் டீமை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்ட திட்டமிடுகிறார்கள். இதில் எதிர்பாராத விதமாக ஆயுள் தண்டனை காலம் அனுபவித்து விட்டு மகளை பார்க்க வெளியே வரும் கார்த்தி சிக்கிக்கொள்கிறார். இதன் பிறகு அந்த ஒரு இரவில்

‘பாத்ரூமுக்குள்ளேயே படமாக்கப்பட்ட’  த்ரில்லிங்க் படம் ‘ரூம்’

Room Tamil Movie - Film shot inside the bathroom சுரேஷ் காமாட்சியின் 'வி ஹவுஸ் புரடக்சன்ஸ்' மற்றும் அஸ்வின் கே.வின் 'மார்ச் 30' நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ரூம்'. பார்த்திபன் நடித்த 'அம்முவாகிய நான்' மற்றும் 'நேற்று இன்று' ஆகிய படங்களை இயக்கிய பத்மாமகன் ‘ரூம்’   படத்தை இயக்குகி வருகிறார். தமிழ் தெலுங்கு கன்னடம் என மூன்று மொழிகளில் ‘ரூம்'  தயாராகிறது. தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த அபிஷேக் வர்மா  படத்தின் கதாநாயகனாகவும் ’நீர்ப்பறவை’, ’வீரம்’ ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்த மனோசித்ரா கதாநாயகியாக நடிக்கிறார். 'ரூம்' படத்தின் பெரும்பகுதி காட்சிகள் ஒரு பாத்ரூமுக்குள் நிகழ்கிறது. இது தமிழ்சினிமாவில் இதுவரை மேற்கொள்ளப்படாத ஒரு முயற்சி எனவும், இது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு ஆச்சர்யமான அனுபவமாக இருக்கும் என  படத்தின் இயக்குனர் பத்மாமகன் கூறுகிறார். எம்.எஸ்.பிரபு  ஒளிப்பதிவு செய்ய, தெலுங்கில் பல படங்களுக்கு பின்னணி இசை அமைத்த வினோத் யஜமான்யா இசையமைக்கிறார்.

Adithya Varma – Official Trailer

Adithya Varma - Official Trailer Adithya Varma is an upcoming Indian Tamil Romantic drama film directed by (in his directorial debut) Gireesaaya. Produced by Mukesh Mehta under 'E4 Entertainment' The film stars newcomer Dhruv Vikram and Banita Sandhu in the lead roles while Priya Anand appears in a supporting role. https://youtu.be/MQEuFT5DUeY

Bigil Movie Images

Bigil Movie Images 'Bigil' (Whistle) is an upcoming  Tamil language sports action film. written and directed by Atlee and produced by Kalpathi S. Aghoram under the banner AGS Entertainment The film stars Vijay and Nayanthara in leading roles  

*சென்சார் குழுவினரின் பாராட்டைப் பெற்ற  “கருத்துகளை பதிவு செய்”* படம்

Karuthukalai pathivu sei is an upcoming Woman awareness Tamil Thriller film டிஜிட்டல் நவீன உலகின் நிஜ சம்பவங்களை அடிப்படையாக வைத்து பல படங்கள் வந்துள்ளன. அந்த வரிசையில்  'ஃபேஸ்புக்' காதலை முன்வைத்து ஒரு படம் உருவாகி இருக்கிறது. ‘கருத்துகளை பதிவு செய்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தை ராகுல் பரஹம்சா இயக்கியிருக்கிறார்.  'ஆர்.பி.எச்'  சினிமாஸ் சார்பில் மும்தாஜ் இந்த படத்தை தயாரித்துள்ளார். இணை தயாரிப்பு JSK கோபி. சமீபத்தில் சென்சாருக்கு சென்ற ‘கருத்துகளை பதிவு செய்’படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். இதுகுறித்து ‘கருத்துகளை பதிவு செய்’படத்தின் இயக்குனர் கூறியதாவது.. கடந்த வாரம் "கருத்துகளை பதிவு செய்" என்ற திரைப்படம் சென்சாருக்காக அனுப்பப்பட்டது. சமூக வலைதளங்களில் உருவாகும் பொய்யான காதல் பற்றியும், அதன் மூலம் பெண்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதும் தான் கதை, அப்படி சமூக வலைதளங்களில் விரிக்கப்பட்ட வலையில் மாட்டிக்கொண்ட ஒரு அப்பாவி பெண் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார், அந்த நயவஞ்சக கும்பல்களை என்ன செய்கிறார், என்பதே இந்தப்படத்தின் திரைக்கதை. "கருத்துகளை பதிவு செய்"  படத்தை பார்த்த சென்சார் போர்டு தலைமை அதிகாரி இம்மாதிரியான படங்கள் இந்த கால '4G' தலைமுறைக்கு அவசியம் என பாராட்டினார். இந்தமாதிரியான படங்களை பார்த்தாவது

சந்தானம் படத்தில் நடிகரானார் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்!

Harbhajan Singh in Santhanam's next film 'Dikkiloona' இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்து வரும் படத்திற்கு 'டிக்கிலோனா' என பெயரிடப்பட்டுள்ளது. 'கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ்' சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும்,' சோல்ஜர் பேக்டரி' சார்பில் சினிஸும்  இப்படத்தை தயாரிக்கின்றனர் பல வெற்றிப் படங்களுக்கு திரைக்கதையில் உதவியாக இருந்த கார்த்திக் யோகி இயக்குகிறார். 'டிக்கிலோனா' படத்தில் நடிகர் சந்தானத்துடன் நடிகராக ஹர்பஜன் சிங்கும் இப்படத்தில் இணைகிறார். யுவங்சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற இருக்கிறது. நான்கு பாடல்களும் வெவ்வேறு கேட்டகிரியில் அசத்துவதுடன், இயக்குநர் கார்த்திக் யோகியின் திரைக்கதையும், அவரது  நேர்த்தியான இயக்கமும் ரசிகர்களின் கலகலப்பிற்கு பெரு விருந்து படைக்கும் என்கிறார்கள்.      

இயக்குனர் பாலாஜி சக்திவேலின் இந்தப்படமாவது வெளியாகுமா?

Actress Chandini signs consecutive projects with Balaji Sakthivel and Radha Mohan 'காதல்', 'கல்லூரி', 'வழக்கு எண் 18/9' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களையும், திரையுலகினரையும் ஆச்சர்யபடுத்தியவர் இயக்குனர் பாலாஜி சக்திவேல். தனுஷ் நடித்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'அசுரன்' படத்தில் நடித்து அனைவரின் பாராட்டினையும் பெற்றார். சித்து +2  படத்தில், இயக்குனர் கே. பாக்யராஜ் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை சாந்தினிக்கு இன்னும் வெற்றி என்பது எட்டாத இலக்காகவே இருந்து வருகிறது. இவரின் தாராள கவர்ச்சியால் கூட வெற்றியை எட்டிபிடிக்க முடியவில்லை. சமீபத்தில் வெளியான 'ராஜா ரங்குஸ்கி' படம் வரை தன்னுடைய திறமைகளை தளராமல் வெளிப்படுத்தி வருகிறார். 'ரா... ரா... ராஜசேகர்', 'யார் இவர்கள்' ஆகிய படங்களை இயக்கி முடித்த பாலாஜி சக்திவேல் அந்தப்படங்கள் இன்னும் வெளிவராத நிலையில் புதுமுக ஹீரோ, சாந்தினி நடித்த ஒரு படத்தையும் அவர் இயக்கி முடித்துள்ளார். பாலாஜி சக்திவேலின் இந்தப்படமாவது வெளிவருமா? இந்நிலையில் நடிகை சாந்தினி ராதாமோகன் இயக்கத்தில்  எஸ்.ஜே.சூர்யா - இணையும் திரைப்படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.    

புதிய சாதனை படைத்த விஜய்யின் ‘பிகில்’

Trailer of Vijay's Bigil has hit 10.5 million likes inn few hours அட்லீ இயக்கத்தில் விஜய், நயந்தாரா நடித்துள்ள படம் 'பிகில்'. திட்டமிடப்பட்டிருந்த பட்ஜெட்டிற்கு மேலாக இந்தப்படத்தை தயாரித்துள்ளனர் ஏஜிஎஸ் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம்,கல்பாத்தி எஸ். கனேஷ்,கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர். 'பிகில்' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ள ஸ்கிரீன் சீன் நிறுவனம் தீபாவளியன்று வெளியிடுகிறது. 'பிகில்' படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 12-ம் தேதி மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியிடப்பட்டது. https://twitter.com/vivekoberoi/status/1183313922113191941 இணையத்தில் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் சுமார் 10 மில்லியன் பார்வைகள் பெற்று புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. பாலிவுட் பிரபலங்கள், ஷாரூக் கான், வருண் தவான், கரண் ஜோஹர், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலரும் ட்ரெய்லரை பார்த்து 'பிகில்' படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். https://twitter.com/iamsrk/status/1183023879171690498 'பிகில்' படத்தின்  தணிக்கை செய்யும் பணிகள் முடிந்த நிலையில் படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 'பிகில்' படத்தை மிகப்பெரிய அளவில் சீனாவில் வெளியிட ஏஜிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Top
error: Content is protected !!