You are here
Home > Cinema News

மொட்டை ராஜேந்திரன் ஐஸ்வர்யா தத்தா  நடிக்கும் காமெடி த்ரில்லர் படம் ‘பப்ஜி’

'பொல்லாத உலகில் பயங்கர கேம்' (pubg) என்ற படத்தை 'தாதா87', ',பிட்ரூ' ஆகிய  படங்களின் இயக்குனர் .விஜய் ஸ்ரீ  இயக்கவுள்ளார். 'பொல்லாத உலகில் பயங்கர கேம்(' PUBG) என்ற இந்த காமெடி திரில்லர் படத்தில் ஐஸ்வர்யா தத்தா ஹீரோயினா நடிக்க, அவருடன் மேலும் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். பப்ஜிங்குற கதாபாத்திரத்தில் 'மொட்டை' ராஜேந்திரன் க்ரைம் ப்ரான்ச் ஆபிஸராக நடிக்கிறார். ஜூலியும் 'தாதா' கதிர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தோட கதையை பற்றி இயக்குனர் கூறுகையில், “பப்ஜி கேம் மாதிரி அஞ்சு பேரு ஒரு கேம் விளையாடுறாங்க அதுல ஜெயிச்சவங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கு. அதற்காக என்ன செய்கிறார்கள். அவர்களுக்கு என்ன நடக்கிறது, முழுக்க முழுக்க கமெடி த்ரில்லர்ரா உருவாகிக்கிட்டிருக்கிறது என்கிறார். இயக்குனர் விஜய்ஶ்ரீ.

திருநங்கைகளின் உலக சாதனை ஓவியத்தை துவக்கி வைத்த விஜய் சேதுபதி!

73 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நூறு திருநங்கைகள் ஒன்றிணைந்து உலக சாதனை ஓவியம் ஒன்றை உருவாக்கினர்.  இந்த மாபெரும் நிகழ்ச்சியை 'அனிமா வேர்ல்ட் ஆஃப் ஆர்ட்ஸ்' என்ற அமைப்பு நடத்தியது. 7000 சதுர அடியில் 100 திருநங்கைகள் ஒன்று சேர்ந்து இந்திய ஜனநாயக நாட்டின் அரசியல் சட்டத்தை இயற்றிய டாக்டர் அம்பேத்கர் அவர்களின் உருவப்படத்தை ஓவியமாக வரைந்து 'Wonder Book of' உலக சாதனை நிகழ்த்தினர். இந்த சாதனை ஓவியத்தை துவக்கி வைத்து நடிகர் விஜய் சேதுபதி திருநங்கைகளை ஊக்குவித்தார். இது குறித்து பேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனு ஶ்ரீ, ‘டாக்டர் அம்பேத்கர் அவர்களின் படத்தை வரைய காரணம், பாலின சமத்துவத்தை பற்றி பேசிய ஒரே சுதந்திர போராட்ட வீரர் அண்ணல் ஒருவரே ஆவார். ஆகவே, அவரின் உருவப்படத்தை வரைவதில் எங்களுக்கு பெருமையான தருணமாகவே எண்ணுகிறோம். https://youtu.be/EQ4m4EpFkHQ சமூக மக்களுக்கு திருநங்கைகள் குறித்த பாலின சமத்துவத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் திருநங்கைகளின் திறமையை வெளிக் கொண்டு வரும் விதத்தில் இந்த உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், இந்த சாதனை நிகழ்விற்கு

கைகளில் ஒட்டாத விஐபி ஹேர் ‘டை’ யின் கின்னஸ் சாதனை!

ஹேர் ‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக, அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக உருவாகியுள்ளது விஐபி ஹேர் கலர் ஷாம்பூ. இந்த புதிய தயாரிப்பை கண்டுபடித்தது சாட்சாத் ஒரு சினிமா நடிகர் என்றால் நம்ப முடிகிறதா..? ஆம்.. எல்லாம் அவன் செயல் படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் ஆர்கே தான் இதனைக் கண்டுபிடித்துள்ளார். வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இவருக்கு இருக்கிறது.  இவரது புதிய கண்டுபிடிப்பான விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை உலக மார்க்கெட்டில் சந்தைப்படுத்துவதற்காக இதன் நம்பகத்தன்மையை உலக அரங்கில் நிரூபிப்பதற்காக மிகப்பெரிய கின்னஸ் சாதனையை இந்த சுதந்திர தினத்தன்று (ஆக-15) சென்னை பூந்தமல்லி அருகில் உள்ள EVP பிலிம் சிட்டியில் நிகழ்த்தியுள்ளார். சரியாக 1014 நபர்களை ஒரே இடத்தில் ஒன்று கூட்டி ஒரே சமயத்தில் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை அவர்களைப் பயன்படுத்தச் செய்து, அதன்மூலம் இதன் தரத்தை உறுதி செய்வது என்பதுதான் இந்த சாதனையின் நோக்கம். இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை வெறும் கையால் தொட்டு பயன்படுத்திவரும் 1014 பயன்பாட்டாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த

‘திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை’ – வரலட்சுமி சரத்குமார்!

விமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில் இவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் ஷமீம் இப்ராகிம், இயக்குனர் எஸ்.முத்துக்குமரன், நடிகர் விமல், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் எஸ்.செல்வகுமார், பாடலாசிரியர் யுகபாரதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். பாடலாசிரியர் யுகபாரதி பேசும்போது, ‘கன்னிராசி படத்தை ஒரு தயாரிப்பாளர் தயாரித்த படம் என்பதை விட ஒரு பத்திரிகையாளர் தயாரித்த படம் என்றே சொல்லலாம். தயாரிப்பாளர் நிறைய பத்திரிகைகளில் வேலை செய்துள்ளார். இது போன்ற படங்களை இயக்குநர் முத்துக்குமரன் நிறைய தர வேண்டும். விருது வாங்கும் அளவிற்கு படங்கள் எல்லாம் தேவையில்லை. ஏன் என்றால் நாம் எப்படி எடுத்தாலும் விருது கிடைக்காது. 5 வருடம் இதுதான் நிலைமை. இப்படத்தில் இயக்குநர் ஒரு அற்புதமான கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். அதாவது காதலித்து தான் கல்யாணம் பண்ண வேண்டும்

“U” சான்றிதழ் பெற்றது வைபவ் நடிக்கும் ‘சிக்ஸர்”.

ஒரு சில படங்க்ள் மட்டுமே எல்லா தரப்பு ரசிகர்களும் பார்க்கும் வகையிலான "U"  சான்றிதழ் பெற்று அதற்கான ரசிகர்களையும் ஈர்க்கும் வல்லமையும் பெற்றதாக இருக்கும். இந்த வகை பெருமை பெற்று உள்ள  முற்றிலும் நகைச்சுவை நிரம்பிய "சிக்ஸர்"  இந்த மாதம் 30 ஆம் தேதி வெளிவர உள்ளது. படத்தை பார்த்து பாராட்டிய தணிக்கை அதிகாரிகள் படத்தின் இயக்குனர் சாச்சியை பாராட்டியதோடு , படத்துக்கு "U" சான்றிதழும் கொடுத்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. "கதையை கேட்டக் மாத்திரத்திலேயே இந்த கதை எல்லா தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படம் என்பதையும், அதற்கான தர சான்றிதழையும் பெறும் என்பதில் உறுதியாக இருந்தேன். குடும்பத்தோடு திரை அரங்குக்கு வரும் ரசிகர்களை கவரும் வண்ணம் உள்ள அறிமுக இயக்குனர் சாச்சியின் இந்த கதை ஜனரஞ்சகமான படமாக  இருக்கும் என்பதில் ஐயமில்லை.கதாநாயகன் வைபவுக்கு ஏற்ற கதாபாத்திரம். நகைச்சுவை மிளிர நடிப்பதற்கு ஒரு தனித்துவமான திறமை வேண்டும், அதில் வைபவ் மிக மிக திறமையானவர். தயாரிப்பாளராக நானும் எனது நண்பர் ஸ்ரீதரும் படத்தை பார்த்து மிக மிக மகிழ்ச்சி அடைந்தோம். அந்த மகிழ்ச்சி ரசிகர்களுக்கும் கிட்டும் என்பதில் ஐயமில்லை" என்கிறார் தயாரிப்பாளர்

“மிஷன் மங்கல்” படத்தினை இயக்க இஸ்ரோ  உதவியாக இருந்தது – .ஜெகன் சக்தி!!

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் ஹோப் புரொடக்ஷன்ஸ்  தயாரப்பில் அக்‌ஷய் குமார் மற்றும் வித்யா பாலன் முன்னனி பாத்திரங்களில் நடித்து திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் 'மிஷன் மங்கல்'. செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் பங்களித்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் விஞ்ஞானிகளின் கதையை அடிப்படையாகக் கொண்டது இந்த படம். இந்தியாவின் முதல் கிரக பயணத்தை குறிக்கும் மிஷன் பற்றியது. இந்தப் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக இந்தியாவின் விண்வெளி ஏஜென்சியுடன் இணைந்து பணியாற்றுயது குறித்து 'மிஷன் மங்கல்' இயக்குனர் ஜெகன் சக்தி விவரித்துள்ளார். அறிமுக இயக்குனர் செவ்வாய் கிரக ஆர்பிட்டர் மிஷனை, அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படத்தை இயற்றுவது எளிதல்ல, இது இன்றுவரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) மிகவும் முக்கியமான ஒரு திட்டமாகும்.  ஜெகன் சக்தி இந்தப் படத்திற்கு தகுதியான கலைஞர்களைக் கொண்டு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் இதில் அக்‌ஷய் குமார், வித்யா பாலன், டாப்ஸி பன்னு, சோனாக்ஷி சின்ஹா, நித்யா மேனன், கீர்த்தி குல்ஹாரி மற்றும் ஷர்மன் ஜோஷி என திறன் வாய்ந்த நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். மேலும் ஜெகன் சக்தி அவரது இந்த படத்தை இயக்க உதவியதற்காக

Top