You are here
Home > India

பிரியாமணி – சந்தீப் கிஷன் இணைந்து நடிக்கும் திரில்லர் வெப் சீரிஸ் ‘தி ஃபேமிலி மேன்’

Amazon Original Series - "The Family Man' மனோஜ் பாஜ்பாய் - பிரியா மணி - சந்தீப் கிஷன் கூட்டணியில் பரபரப்பான திரில்லர் வலைத் தொடர் ‘தி ஃபேமிலி மேன்’. அமேசான் பிரைம் வீடியோவின் சமீபத்திய வெளியீடுகள் மற்றும் புதிய பரிமாண வலைத் தொடர்கள் பார்வையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக விளங்கி வருகிறது. இதன் மூலம் திருட்டு வீடியோக்களைக் கட்டுப்படுத்துவதற்கு இந்தியத் திரையுலகின் தயாரிப்பாளர்கள் இந்த தளத்தை ஒரு பெரிய தீர்வாக கண்டுபிடித்துள்ள நிலையில், இணையத் தொடர்கள் சர்வதேச தொடர்களுக்கு இணையாக உருவாக்கப்படுவதால் அமேசான் பிரைம் வீடியோ பார்வையாளர்களை கூடுதலாக கொண்டுள்ளது. அமேசான் பிரைம் வீடியோவின் அனைத்து வலைத் தொடர்களும் பிராந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. இதனால் மொழிகளுக்கிடைய ஏற்படும் தடைகளின் இடைவெளியைக் குறைத்து பார்வையாளர்கள் பல்வேறு அம்சங்களையும் கண்டு ரசிக்க முடியும். தற்போது பெரிய பொருட்செலவில் ‘தி ஃபேமிலி மேன்’ என்ற அடுத்த வலைத் தொடரை வெளியிடவுள்ளார்கள். இதில் தேசிய விருதுபெற்ற நடிகரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான மனோஜ் பாஜ்பாய், தேசிய விருது பெற்ற நடிகை பிரியா மணி, ‘மாநகரம்’ புகழ் சந்தீப் கிஷன், நீரஜ் மாதவ், ஷாரிப் ஹாஷ்மி, குல் பினாங்,

நடிகை கீர்த்தி சுரேஷூக்கு தேசிய விருது

அகில இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் சினிமா துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள் இயக்குனர்கள் என  பலருக்கு மத்திய அரசின்  தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், 2018 ஆண்டிற்கான 66ஆவது தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கையை மைய்யப்படுத்தி வெளியான தெலுங்குப்படமான 'மகாநடி' படத்தில் சிறப்பாக நடித்த கீர்த்தி சுரேஷூக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. சிறந்த தெலுங்கு மொழிப் படமாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தப்படம் தமிழ் மொழியிலும் டப் செய்து வெளியானது குறிப்பிடதக்கது. குறைந்த வயதிலேயே சிலபடங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். தேசிய விருது பெற்ற பல்வேறு திரைப்படங்களும் அதன் விபரங்களும் சிறந்த இந்தி படம் - அந்தாதுன் சிறந்த மலையாளம் படம் - சுடானி ஃப்ரம் நைஜீரியா சிறந்த அசாமிய படம் - புல்புல் கேன் சிங் சிறந்த தெலுங்கு படம் - மகாநதி தேசிய விருது பெற்ற நடிகர்கள் 1. ஆயுஷ்மான் குரானா - அந்தாதுன் (இந்தி) 2. விக்கி கௌஷல் - உரி (இந்தி)   பிற விருதுகள் சிறந்த பின்னணி பாடகர் (ஆண்)

மருத்துவக்கல்லூரி மாணவ மாணவிகளுக்கு காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவுரை

மதுரை மருத்துவக்கல்லூரி வெள்ளி விழா அரங்கத்தில் நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அடிப்படைப்பாட வகுப்பினை (Foundation Course) மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் துவக்கி வைத்து பேசியதாவது.. 'மாணவ மாணவிகளுக்கு சமூக ஊடகங்களின் பயன்பாடு மற்றும் அவற்றினால் ஏற்படும் நன்மை தீமைகள் மற்றும் அவற்றினால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும், Whatsapp மூலமாக தவறான செய்திகளை பரப்புவதினால் ஏற்படும் தீமைகள் அவற்றை தடுத்தல் மற்றும் Facebook பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிடுவதினால் ஏற்படும் தீமைகள் அந்நிய நபர்களை நண்பர்கள் ஆக்குவதினால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட இரகசியங்களை வெளியிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றியும், சமூக வலைதளங்களில் சமூக விரோதிகளின் தீமைவிளைவிக்கும் செயல்பாடுகள் மற்றும் இணையதளத்தை மாணவர்கள் எவ்வாறு பயனுள்ளதாக பயன்படுத்து என்பது குறித்தும் மாணவர்கள் தங்களது லட்சியத்தை நிறைவேற்றுவதிலும் பெற்றோர்களின் கனவுகளை நனவாக்குவதிலும் முழு முயற்சி எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் இணையதள குற்றங்கள் பற்றியும் மற்றும் அவற்றின் தண்டனைகள் பற்றியும் அவற்றின் பாதுகாப்பு பற்றியும் மற்றும் மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு தகுந்த விளக்கமளித்தார். இந்நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

ஏ.ஆர்.ரகுமானின் திறமை லிடியனிடம் உண்டு –  ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்

ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் இந்தியன் பப்ளிக் ஸ்கூல் குழந்தைகளுக்கென கிட்ஸ் நியூஸ் மற்றும் அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி என்ற இரு பயிற்சிகளை அறிமுகம் செய்தள்ளது. இதனை உலக அளவில்  புகழ் பெற்ற  லிடியன் நாதஸ்வரம் துவங்கி வைத்து பள்ளி மாணவர்களுடன்  உரையாடிய பின்னர்  அவர்களின் கேள்விக்கு  பதில் அளித்தார்.  இந்நிகழ்ச்சியில்  லிடியனின் சகோதரி அமுர்த வர்ஷினி பாட்டு பாடி அசத்தினார். அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி என்ற சர்வதேச தரத்திலான புதிய முயற்சியை பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர் வடிவமைத்திருக்கிறார். இந்நிகழ்ச்சியில், நக்கீரன் கோபால் உள்ளிட்ட புகழ்பெற்ற  புகைப்பட கலைஞர்கள், ஓவியர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர், நிகழ்ச்சியில் பேசிய நக்கீரன் கோபால்..  நான் ஒரு சாதாரண பள்ளி கல்லூரியில் படித்தேன். பின் பிழப்புக்காக சென்னை வந்தேன். கற்பனை பண்ணாத அளவிற்கு இப்பள்ளியின் சுற்றுப்புற சூழல் அழகாக  அமைந்திருப்பது  பாராட்டக்குறியது.  நான் பெரிய  பாக்கியமாக  நினைப்பது குட்டி புலி லிடியன் அருகில் இருப்பதுதான்.  ஏனென்றால் 12 வயதில் உலக சாதனையும் பாராட்டுகளையும் சேர்ப்பது சாதாரணம் அல்ல.  எதுவும்  நம்மால்  முடியும்  என்பதற்கு லிடியன் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார். இவர் பியானோ

‘நேர்கொண்ட பார்வை’ சட்ட விரோத ரிலிஸூக்கு தடை வாங்கிய போனிகபூர்

டிஜிட்டல் தொழிநுட்பம் அசூரத்தனமாக வளர்ந்து நிற்கும் இந்தக் காலக்கட்டத்தில் திரையுலகிற்கு பெரும் சவாலாக இருந்து வருவது பைரஸி எனும் அரக்கன் தான். இந்திய மொழிப்படங்களில் அதிகம் பாதிக்கப்படுவது ஹிந்தி மற்றும் தமிழ் மொழிப்படங்களே. தமிழ் மொழிப்படங்களில் விஜய், அஜித் படங்கள் என்றால் ரிலீஸான அன்றே வெளியிடும் அவலம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த விஷயத்தில் 'தமிழ்ராக்கர்ஸ்' உள்ளிட்ட பல இணைய தளங்கள் தொடர்ந்து சட்ட விரோதமாகவே நடந்து வருகின்றன. நடிகர் விஷால் 'தமிழ்ராக்கர்ஸை ஒழிப்பேன் அதுவே என் முதல் வேலை'. என சவால் விட்டு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கு வந்து பல கோடிகளை காவு கொடுத்தது தான் மிச்சம். விஷாலால் இந்த விஷயத்தில் ஒன்றுமே செய்ய முடியவில்லை. பெரிய முதலீட்டில் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் அவ்வப்போது நீதிமன்றத்தின் மூலம் பைரஸியை ஓரளவு கட்டுப்படுத்தி வருகின்றனர். அஜித் நடித்துள்ள 'நேர்கொண்ட பார்வை'  படம் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் இப்படத்தின் தயாரிப்பாளர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். 'போனிகபூரின் 'பே வியூ புராஜெக்ட்ஸ்'  நிறுவனம் தொடர்ந்த வழக்கு  இன்று சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி கிருஷ்ணன்

‘Fashion Garment Trade Fair’ 2019

Yellow Rider Events presents ‘Fashion Garment Trade Fair’ on 6 th , 7 th 8 th August  2019. The Fashion Garment Fair which is spread across 25,000 sft with 70 brands under one roof will see the best of the brands from all over India showcase the latest collection for men, women and kids. The inauguration for the Fashion Garment Trade Fair took place on 6 th August  2019 at Holiday Inn OMR IT Expressway.  Sri S. Pothiraj – Pothy’s Group, Sri Pachaiyappan Prabhu – Pachaiyappa’s Silks, Sri Venugopal – Cotton House, Sri Madhan Kumar – Maghalakshmi Plaazaa and Sri Rajendiran – Rajendira’s Puducherry lit the kuthuvilakku to inaugurate the Fair,

சேலம் அரசு பொருட்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி. பழனிசாமி தொடங்கி வைக்கிறார்

சேலம், பள்ளப்பட்டி புதிய பேருந்து நிலையத்தின் அருகில் தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சகம் சார்பாக சேலம் அரசு பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இப்பொருட்காட்சியில் 35க்கும் மேற்பட்ட அரசு, மற்றும் தனியார் துறை அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன சேலம் அரசு பொருட்காட்சியை இன்று மாலை 6 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி. பழனிசாமி தொடங்கி வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். இந்நிகழ்ச்சிக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை ஏற்கிறார்..

வேலூர் வாக்குச்சாவடியில் கொள்ளை..!

வேலூர் தொகுதிக்கு நாளை ஆகஸ்ட் 5-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் ஏசி சண்முகம், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகிய 3 பேர் போட்டியிடுகின்றனர்.   இந்நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்திலுள்ள அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி ஒன்றில் சிசிடிவி கேமரா, கணினிகள் திருடப்பட்டிருக்கும் சம்பவம் வேலூர் தொகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.   எண் 29,30,32 ஆகிய  எண்களைக் கொண்ட வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவுக்கான  அனைத்து ஏற்பாடுகளைச் செய்த பின் அந்த பள்ளி மூடப்பட்டது. இன்று காலையில் கிராம நிர்வாக அலுவலர்  பார்த்த போது, பள்ளிக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை அறிந்த அவர் போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். இது குறித்து பள்ளி வளாகத்தை ஆய்வு செய்த குடியாத்தம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.   மேற்படி விசாரணையில் 30ஆவது வாக்குச்சாவடியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவும், பள்ளியில் இருந்த 11 கணினிகளும் திருடு போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காரணமாக வேலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

100 ஆண்டுகளை கடந்த க.பரமத்தி காவல் நிலையம்!

கரூர் மாவட்டம் க.பரமத்தி காவல் நிலையம் கடந்த 01-01-1919 அன்று துவங்கப்பட்டது. இந்த ஆண்டுடன் அந்த காவல் நிலையம் நூறு ஆண்டுகளை கடந்ததை தொடர்ந்து அதனை பெருமைபடுத்தும் விதமாக 17.07.2019-ம் தேதியன்று காவல் துறை சார்பாக நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் க.பரமத்தி பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்¸ மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பள்ளி மாணவ – மாணவிகளுக்கு பாட உபகரணங்கள் மற்றும் விளையாட்டு போட்டிகள் காவல் துறை சார்பில் நடைப்பெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திருச்சி சரக காவல் துணை தலைவர் திரு. பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்கள் பரிசுகளை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. அன்பழகன் இ.ஆ.ப அவர்கள் மற்றும் கரூர் மாவட்ட காவல் கண்பாணிப்பாளர் திரு. பாண்டியராஜன் அவர்கள் கலந்து கொண்டனர்.

கடைசி நேரத்தில் சந்திராயன் – 2 விண்கலம் ஏவுவது நிறுத்தி வைப்பு!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து (ஜூலை 15) இன்று அதிகாலையில் 2.51 மணிக்கு சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட இருந்தது. ஆனால் சந்திராயன் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சந்திராயன் 2 விண்கலம் ஏவப்படுவதற்கு 55 நிமிடங்களுக்கு முன்னதாக இன்று திடீரென கவுன்ட் டவுன் நிறுத்தப்பட்டது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட ட்விட்டர் செய்தி குறிப்பில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சந்திராயன்2 விண்ணில் ஏவப்படும் புதிய தேதி, நேரம் பின்னர் அறிவிக்கப்படுவதாக அச்செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Top