You are here
Home > Latest News

திருநங்கைகளின் உலக சாதனை ஓவியத்தை துவக்கி வைத்த விஜய் சேதுபதி!

73 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நூறு திருநங்கைகள் ஒன்றிணைந்து உலக சாதனை ஓவியம் ஒன்றை உருவாக்கினர்.  இந்த மாபெரும் நிகழ்ச்சியை 'அனிமா வேர்ல்ட் ஆஃப் ஆர்ட்ஸ்' என்ற அமைப்பு நடத்தியது. 7000 சதுர அடியில் 100 திருநங்கைகள் ஒன்று சேர்ந்து இந்திய ஜனநாயக நாட்டின் அரசியல் சட்டத்தை இயற்றிய டாக்டர் அம்பேத்கர் அவர்களின் உருவப்படத்தை ஓவியமாக வரைந்து 'Wonder Book of' உலக சாதனை நிகழ்த்தினர். இந்த சாதனை ஓவியத்தை துவக்கி வைத்து நடிகர் விஜய் சேதுபதி திருநங்கைகளை ஊக்குவித்தார். இது குறித்து பேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனு ஶ்ரீ, ‘டாக்டர் அம்பேத்கர் அவர்களின் படத்தை வரைய காரணம், பாலின சமத்துவத்தை பற்றி பேசிய ஒரே சுதந்திர போராட்ட வீரர் அண்ணல் ஒருவரே ஆவார். ஆகவே, அவரின் உருவப்படத்தை வரைவதில் எங்களுக்கு பெருமையான தருணமாகவே எண்ணுகிறோம். https://youtu.be/EQ4m4EpFkHQ சமூக மக்களுக்கு திருநங்கைகள் குறித்த பாலின சமத்துவத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் திருநங்கைகளின் திறமையை வெளிக் கொண்டு வரும் விதத்தில் இந்த உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், இந்த சாதனை நிகழ்விற்கு

கைகளில் ஒட்டாத விஐபி ஹேர் ‘டை’ யின் கின்னஸ் சாதனை!

ஹேர் ‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக, அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக உருவாகியுள்ளது விஐபி ஹேர் கலர் ஷாம்பூ. இந்த புதிய தயாரிப்பை கண்டுபடித்தது சாட்சாத் ஒரு சினிமா நடிகர் என்றால் நம்ப முடிகிறதா..? ஆம்.. எல்லாம் அவன் செயல் படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் ஆர்கே தான் இதனைக் கண்டுபிடித்துள்ளார். வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இவருக்கு இருக்கிறது.  இவரது புதிய கண்டுபிடிப்பான விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை உலக மார்க்கெட்டில் சந்தைப்படுத்துவதற்காக இதன் நம்பகத்தன்மையை உலக அரங்கில் நிரூபிப்பதற்காக மிகப்பெரிய கின்னஸ் சாதனையை இந்த சுதந்திர தினத்தன்று (ஆக-15) சென்னை பூந்தமல்லி அருகில் உள்ள EVP பிலிம் சிட்டியில் நிகழ்த்தியுள்ளார். சரியாக 1014 நபர்களை ஒரே இடத்தில் ஒன்று கூட்டி ஒரே சமயத்தில் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை அவர்களைப் பயன்படுத்தச் செய்து, அதன்மூலம் இதன் தரத்தை உறுதி செய்வது என்பதுதான் இந்த சாதனையின் நோக்கம். இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை வெறும் கையால் தொட்டு பயன்படுத்திவரும் 1014 பயன்பாட்டாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த

‘திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை’ – வரலட்சுமி சரத்குமார்!

விமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில் இவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் ஷமீம் இப்ராகிம், இயக்குனர் எஸ்.முத்துக்குமரன், நடிகர் விமல், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் எஸ்.செல்வகுமார், பாடலாசிரியர் யுகபாரதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். பாடலாசிரியர் யுகபாரதி பேசும்போது, ‘கன்னிராசி படத்தை ஒரு தயாரிப்பாளர் தயாரித்த படம் என்பதை விட ஒரு பத்திரிகையாளர் தயாரித்த படம் என்றே சொல்லலாம். தயாரிப்பாளர் நிறைய பத்திரிகைகளில் வேலை செய்துள்ளார். இது போன்ற படங்களை இயக்குநர் முத்துக்குமரன் நிறைய தர வேண்டும். விருது வாங்கும் அளவிற்கு படங்கள் எல்லாம் தேவையில்லை. ஏன் என்றால் நாம் எப்படி எடுத்தாலும் விருது கிடைக்காது. 5 வருடம் இதுதான் நிலைமை. இப்படத்தில் இயக்குநர் ஒரு அற்புதமான கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். அதாவது காதலித்து தான் கல்யாணம் பண்ண வேண்டும்

ஏ.ஆர்.ரகுமானுக்கு கோரிக்கை விடுத்த தயாரிப்பாளர்கள் சங்கம்!

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளுக்குள் நடந்த பல்வேறு பிரச்சனைகள் காரணமாக, ஓய்வு பெற்ற நீதியரசர் சேகர் தலைமையில் தமிழக அரசால், நிர்வாக கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. அந்த கமிட்டியின் ஆலோசகர்களாக பாரதிராஜா, டி.சிவா, எஸ்.வி.சேகர், சத்யஜோதி.தியாகராஜன், கே.ராஜன், துரைராஜ், சிவசக்தி பாண்டியன், ராதாகிருஷ்ணன் மற்றும் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் ஆகியோர்களின் ஆலோசனைகள் மூலம் செயல்பட்டு வருகிறது. இந்த கமிட்டி இயங்கும் விதத்தால் தமிழ் திரையுலகில் பலராலும் உன்னிப்பாக கவனிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல நல்ல முடிவுகளையும் எடுத்து வருகிறது. சேலம் ஏரியாவில் திரைப்பட விநியோக முறையில் இருந்து வந்த சின்டிகேட் முறையை கலைத்தும் பல சின்னப்படங்களை விநியோகிக்க ஏதுவாக விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக உறவை தொடங்கியிருக்கிறது. மேலும் எஃப்.எம் ரேடியோக்களில் பாடல்களை ஒளிபரப்பும் முன்னர் படத்தின் பெயருடன் தயாரிப்பாளரின் பெயரையும் கூற  எஃப்.எம் ரேடியோக்களின் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அது நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் விருது விழாக்களில் பயன்படுத்தப்படும் திரைப்படம் சார்ந்த காட்சிகளுக்கு தயாரிப்பாளரின் அனுமதியுடன்; அவர்களையும் அழைத்து கௌரவப்படுத்த வேண்டும் என்ற தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனை குழுவினரின் கோரிக்கைக்கு சில நாட்களுக்கு முன்னர் ப்ரவோக் பத்திரிகை நடத்திய விருது வழங்கும் விழாவில்

நடிகை கீர்த்தி சுரேஷூக்கு தேசிய விருது

அகில இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் சினிமா துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள் இயக்குனர்கள் என  பலருக்கு மத்திய அரசின்  தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், 2018 ஆண்டிற்கான 66ஆவது தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கையை மைய்யப்படுத்தி வெளியான தெலுங்குப்படமான 'மகாநடி' படத்தில் சிறப்பாக நடித்த கீர்த்தி சுரேஷூக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. சிறந்த தெலுங்கு மொழிப் படமாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தப்படம் தமிழ் மொழியிலும் டப் செய்து வெளியானது குறிப்பிடதக்கது. குறைந்த வயதிலேயே சிலபடங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். தேசிய விருது பெற்ற பல்வேறு திரைப்படங்களும் அதன் விபரங்களும் சிறந்த இந்தி படம் - அந்தாதுன் சிறந்த மலையாளம் படம் - சுடானி ஃப்ரம் நைஜீரியா சிறந்த அசாமிய படம் - புல்புல் கேன் சிங் சிறந்த தெலுங்கு படம் - மகாநதி தேசிய விருது பெற்ற நடிகர்கள் 1. ஆயுஷ்மான் குரானா - அந்தாதுன் (இந்தி) 2. விக்கி கௌஷல் - உரி (இந்தி)   பிற விருதுகள் சிறந்த பின்னணி பாடகர் (ஆண்)

கதாநாயகன் யோகிபாபுவின் “காதல் மோதல் 50/50”

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியனாக இருப்பவர் யோகிபாபு. இவர் இல்லாத படங்களே இல்லை.. அந்த வகையில் யோகிபாபுவை மையமாக வைத்து தற்போதுஉருவாகிக் கொண்டு இருக்கும் “காதல் மோதல் 50/50” எனும் ஆக்ஷன் கலந்த பேய் படத்தில் நடித்து வருகிறார். யோகிபாபுவின் 'தர்மபிரபு' மற்றும் 'கூர்க்கா'வின் வெற்றியை தொடர்ந்து வெளிவரவிற்கும் படம்தான் “காதல் மோதல் 50 /50”. இப்படத்திற்கு தரண்குமார் இசை அமைத்துள்ளார். பிரதாப் ஒளிப்பதிவு செய்துள்ளார். அலெக்சாண்டர் கதை எழுத பிரபல கன்னட திரைப்படம் "த்ரயா" என்ற படத்தின் இயக்குனர் கிருஷ்ணா சாய் திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். இப்படத்தில் யோகிபாபுவிற்கென பிரத்யேக பிரம்மாண்டமான சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் பில்லா ஜெகன் அமைக்க உள்ளார். தற்போது மு.மாறன் அவர்களின் இயக்கத்தில் உதயநிதிஸ்டாலின் அவர்களை நாயகனாக வைத்து தயார் ஆகி கொண்டிருக்கும் "கண்ணை நம்பாதே " என்ற படத்தின் தயாரிப்பாளர் திரு.வி.என்.ஆர் அவர்கள் இப்படத்தினை தன் நிறுவனம் லிபிசினி கிராப்ட்ஸ் மூலம் தயாரித்து வருகிறார். படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டீஸர் வெளியாகும் நிலையில் உள்ளது .

பா.ரஞ்சித்தின் அடுத்த படம் ரெடி!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் புரொடக்‌ஷன்ஸ்”சார்பில் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட படம் 'பரியேறும் பெருமாள்'. அவரது உதவியாளர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் விருப்பு வெறுப்பு இல்லாமல் அனைவராலும் பாராட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது தயாரிப்பாக உருவாகியுள்ள படம் 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு'.. தினேஷ், ஆனந்தி, ரித்விகா, லிஜீஸ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தினை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்கி இருக்கிறார். 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' படத்தின் அறிமுக ஒளிப்பதிவாளராக கிஷோர் குமார் பணியாற்றி இருக்கிறார். இவர் “மெட்ராஸ்”, “கபாலி”, “காலா”ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த முரளியின் உதவியாளர். தன்னுடைய முதல் படத்திலேயே பல சவால்களை சந்தித்து, இயக்குநருக்கான ஒளிப்பதிவாளர் என்கிற நற்பெயரை பெற்றுள்ளார். திட்டமிட்டபடி 45 நாட்களில் 40 லொகேஷன்களின் ஷூட்டிங் நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இயக்குநரோடு தோளுக்கு தோளாக நின்று படத்தினை குறித்த நேரத்தில் முடித்து தயாரிப்பாளர், இயக்குநருக்கு  பக்கபலமாக இருந்திருக்கிறார். இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த இயக்குநர் அதியன் ஆதிரை, கிஷோர் குமாரை பாராட்டி தள்ளினார். மேலும் அவர் கூறும்போது.. “நிச்சயமாக இது ஒரு கடினமான பயணம்தான் எங்களுக்கு. 45 நாட்களில் 40 லொகேஷன் என திட்டமிடும்

சிறந்த நடிகருக்கான Provoke magazine விருதை பெற்ற ஜி.வி பிரகாஷ்!

ரஜினி, விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்ததுடன் 'நாச்சியார்' 'சர்வம் தாளமயம்' போன்ற வெரைட்டியான படங்களில் நடித்து கோலிவுட்டின் தவிர்க்க முடியாத ஹீரோவாகவும் வளர்ந்துள்ளார் ஜி.வி பிரகாஷ். 10க்கும் மேற்பட்ட படங்களில் நடிப்பதுடன் இசையமைப்பதிலும் பிஸியாக இருந்து வருகிறார். https://twitter.com/DirRajivMenon/status/1159304699851362304 ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்ற 'சர்வம் தாளமயம்' அந்த வகையில் பல்வேறு விருதுகளை அப்படம் பெற்றுவருகிறது. அதன் தொடர்ச்சியாக அவரின் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக Provoke magazine சிறந்த நடிகருக்கான விருதை வழங்கியுள்ளது. இவ்விருதை மகிழ்வோடு பெற்றுக்கொண்ட ஜி.வி பிரகாஷ், ட்விட்டரில் இயக்குநர் ராஜீவ்மேனனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். https://twitter.com/arrahman/status/1159137592396247040 சர்வம் தாளமயம் படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. ராஜீவ்மேனன் இயக்கிய இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். ஜி.வி பிரகாஷுடன் அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினித், குமரவேல் ஆகியோர் நடித்திருந்தனர். ஜி.வி பிரகாஷ் இவ்விருதைப் பெற்றுள்ளதை தெரிந்ததும் இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் ஜி.வி பிரகாஷுக்கு வாழ்த்துகள் என ட்விட்டரில் தெரிவிக்க உற்சாகமான ஜி.வி, ஏ.ஆர் ரகுமானுக்கு தனது நன்றியினை தெரிவித்துள்ளார். இந்த விருது வழங்கும் விழா நேற்று இரவு மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.      

Top