You are here
Home > Review

Gurkha Movie Review

ஜி.வி.பிரகாஷ் நடித்த 'டார்லிங்' என்ற வெற்றி படத்தை இயக்கிய சாம் ஆண்டன் '4 Monkeys Studios' நிறுவனத்தின் மூலம் தயாரித்து இயக்கியுள்ள படம் கூர்கா. ராஜ் ஆர்யன் இசையமைத்து, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்தை 300 கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'லிப்ரா புரடக்ஷன்' சார்பாக ரவீந்தர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ளார். சின்ன, சின்ன காமெடி வேடங்களில் கலக்கி வந்த யோகி பாபு, இந்தபடத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், அவருடன் சார்லி, மனோபாலா, ஆனந்த்ராஜ் உள்ளிட்டோருடன் ஹாலிவுட் நடிகை எலிசா எர்கார்ட்(Elyssa Erhadt) நடித்துள்ளார். எப்படி இருக்கிறார் கூர்கா? நேபாளத்திலிருந்து வந்த கூர்கா ஒருவர் வடசென்னையில் பெர்மனன்ட்ட... டேரா போட்டதின் விளைவில் உருவானவர் தான் யோகி பாபு. தங்களது குலத்தொழிலை செய்ய விருப்பமில்லாமல் போலீஸ் ஆவதற்கு முயற்சி செய்கிறார். ஆனால் தகுதியில்லை என துரத்தி அடிக்கப்படுகிறார். லஞ்சம் கொடுத்தாவது போலீஸில் சேர துடிக்கும் அவருக்கு பணம் தேவைப் படுவதால் மனோபாலா நடத்தி வரும் செக்யூரிட்டி ஏஜென்சியில் சேரும் அவருக்கு அமெரிக்க எம்பெஸியின் உயரதிகாரி எலிசா எர்கார்ட்(Elyssa Erhadt) மேல் காதல்! இந்நிலையில் யோகிபாபு வேலை செய்யும் ஒரு ஷாப்பிங்க் மாலில் தீவிரவாதிகள் புகுந்து கொண்டு அதை

கொலைகாரன் விமர்சனம்

‘பிச்சைக்காரன்’ படத்திற்கு பின் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே தோல்வியைச் சந்தித்தன. எப்படியும் ஒரு வெற்றிப்படத்தை விஜய் ஆண்டனி கொடுத்தாக வேண்டிய நிலையில் வெளியாகியிருக்கும் படம் ‘கொலைகாரன்.’ வெற்றியை கொடுத்திருக்கிறதா?. ஆந்திராவின் முக்கியமான அமைச்சர் ஒருவரின் மகன் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். அந்தக் கொலை குற்றவாளியை கைது செய்யப்போகும் போலீஸ் அதிகாரி அர்ஜூனிடம் நான் தான் கொலை செய்தேன். என்று தானாக வந்து சரணடைகிறார் விஜய் ஆண்டனி. குழப்படமடையும் அர்ஜூன் என்ன முடிவெடுக்கிறார் என்பது தான் ‘கொலைகாரன்’ படத்தின் விறு விறுப்பான திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ். படம் ஆரம்பித்த முதல் சீன்ல இருந்து கடைசி சீன் வரைக்கும் கதை என்ன டிமாண்ட் பண்ணுதோ அதை மட்டுமே பண்ணியிருக்கிறார் இயக்குனர் ஆண்ட்ரூலூயிஸ். கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து காட்சிகள் நகர்வதால் ஒரு நல்ல ‘மிஸ்ட்ரி திரில்லர்’ பார்த்த சந்தோஷம் கிடைக்கிறது. சேஸிங், பில்டப் இல்லாமல் டைலாக் மூலமாகவும் அர்ஜூன், விஜய் ஆண்டனி ஃபேஸ் ரியாக்‌ஷன் மூலமாகவும் ரசிகர்களை நகம் கடிக்க வைப்பதற்கு தனி திறமை வேண்டும் அதை திறம்பட செய்திருக்கிறார்கள். தேவையில்லாமல் இடம் பெறும் இரண்டு பாடல்களால் சற்று மெதுவாக நகர்ந்தாலும் காட்சிகள்

‘காற்றின் மொழி’ விமர்சனம்

‘மொழி’ படத்திற்கு பிறகு ராதாமோகனும், ஜோதிகாவும் இணைந்துள்ள படம் ‘காற்றின் மொழி’. ‘போப்டா மீடியா ஒர்க்ஸ்’ இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ஜி.தனஞ்செயன், விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்செயன் ஆகியோர் தயாரித்துள்ளனர் எப்படி இருக்கிறது ராதாமோகன் இயக்கியுள்ள காற்றின் மொழி? கணவர் விதார்த், மகன் தேஜஸ் உள்ளிட்ட மகிழ்ச்சியான குடும்பத்தின் தலைவி ஜோதிகா. சுறுசுறுப்பான பெண்.எப்போதும் சிரித்த முகத்துடன், சந்தோஷமாக இருப்பவர். எல்லோரையும் போல் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது அவரது விருப்பம். அதற்கு பெரும் தடையாக இருப்பது ஜோதிகாவின் கல்வித்தகுதி. பிளஸ் 2 அளவிலேயே தோல்வியுற்றவர். இருந்தாலும் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற கனவு காரணமாக எப்போதும் தேடலிலேயே இருக்கிறார். ஜோதிகாவின் கனவு நிறைவேறும் வகையில் கை நிறைய சம்பளத்துடன் ஒரு வானொலியில் ரேடியோ ஜாக்கியாக வேலை கிடைக்கிறது. ரேடியோ ஜாக்கியாகும் அவர் அந்தரங்க விஷயங்களை பற்றி பேசும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அந்தரங்கங்களை அலசும் ஹெல்லோ… எனும் ஜோதிகாவின் செக்ஸி குரல் பலருக்கு தீர்வாகவும் எம்.எஸ்.பாஸ்கர் போன்றவர்களுக்கு அது ஒரு தெய்வீகக் குரலாகவும் ஒலிக்கிறது. நேயர்களின் அமோக ஆதராவால் சில நாட்களிலேயே அந்த நிகழ்ச்சி பெரும் வெற்றி பெறுகிறது. வானொலி நிலையத்திலிருக்கும் அனைவரும் அந்த

உத்தரவு மகாராஜா – விமர்சனம்

Utharavu Maharaja – Movie review ‘ஜேசன் ஸ்டுடியோ’ சார்பில் நடிகர் உதயா தயாரித்து நடித்துள்ள படம், ‘உத்தரவு மகாராஜா’. நகைச்சுவை கலந்த சைக்கோ த்ரில்லராக உருவாக்கியிருக்கிறாராம் இந்தப்படத்தை இயக்கிய ஆஸிப் குரைஷி. வித்தியாசமான மூன்று தோற்றங்களில் உதயா நடித்திருக்க, பிரபு கதையின் முக்கிய பாத்திரமாக நடித்துள்ளார். சிறுவயதில் Dissociative identity disorder நோயினால் பாதிக்கப்படும் உதயா அதை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு கோடி, கோடியாக கொள்ளையடிக்கிறார். பணத்திற்காக அவர் செய்யும் ஒரு கொலையினால் பிரபு பெரிதும் பாதிக்கப்படுகிறார். இதனால் வித்தியாசமான முறையில் உதயாவை பழிவாங்குகிறார் பிரபு. போலீஸூக்கு இது தெரியவர, உதயாவை அவர்கள் காப்பாற்றினார்களா? என்பது தான் க்ளைமாக்ஸ்! நடிப்பில் ஆர்வமிக்க உதயா இந்தப்படத்திற்காக கடுமையாக உழைத்திருந்தாலும் வலுவற்ற காட்சியமைப்பு, சுவாரஷ்யமில்லாத திரைக்கதையினால் எல்லாமே வீணாகிறது. கோவை சரளா, ஸ்ரீமன், மன்சூர் அலிகான், மனோ பாலா, அஜய் ரத்னம், குட்டி பத்மினி என பலர் நடித்திருந்தாலும் டாக்டர்களாக வரும் பிரபு, தயாரிப்பாளர் கோ.தனஞ்செயன், இருவரும் கவனம் ஈர்க்கின்றனர். ‘உத்தரவு மகாராஜா’ படத்தை இயக்கியுள்ள ஆஸிப் குரைஷி பெங்காலி படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவராம்! நகைச்சுவையும் இல்லை! த்ரில்லரும் இல்லை!

Top