You are here
Home > Reviews

Gurkha Movie Review

ஜி.வி.பிரகாஷ் நடித்த 'டார்லிங்' என்ற வெற்றி படத்தை இயக்கிய சாம் ஆண்டன் '4 Monkeys Studios' நிறுவனத்தின் மூலம் தயாரித்து இயக்கியுள்ள படம் கூர்கா. ராஜ் ஆர்யன் இசையமைத்து, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்தை 300 கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'லிப்ரா புரடக்ஷன்' சார்பாக ரவீந்தர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ளார். சின்ன, சின்ன காமெடி வேடங்களில் கலக்கி வந்த யோகி பாபு, இந்தபடத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், அவருடன் சார்லி, மனோபாலா, ஆனந்த்ராஜ் உள்ளிட்டோருடன் ஹாலிவுட் நடிகை எலிசா எர்கார்ட்(Elyssa Erhadt) நடித்துள்ளார். எப்படி இருக்கிறார் கூர்கா? நேபாளத்திலிருந்து வந்த கூர்கா ஒருவர் வடசென்னையில் பெர்மனன்ட்ட... டேரா போட்டதின் விளைவில் உருவானவர் தான் யோகி பாபு. தங்களது குலத்தொழிலை செய்ய விருப்பமில்லாமல் போலீஸ் ஆவதற்கு முயற்சி செய்கிறார். ஆனால் தகுதியில்லை என துரத்தி அடிக்கப்படுகிறார். லஞ்சம் கொடுத்தாவது போலீஸில் சேர துடிக்கும் அவருக்கு பணம் தேவைப் படுவதால் மனோபாலா நடத்தி வரும் செக்யூரிட்டி ஏஜென்சியில் சேரும் அவருக்கு அமெரிக்க எம்பெஸியின் உயரதிகாரி எலிசா எர்கார்ட்(Elyssa Erhadt) மேல் காதல்! இந்நிலையில் யோகிபாபு வேலை செய்யும் ஒரு ஷாப்பிங்க் மாலில் தீவிரவாதிகள் புகுந்து கொண்டு அதை

கொலைகாரன் விமர்சனம்

‘பிச்சைக்காரன்’ படத்திற்கு பின் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே தோல்வியைச் சந்தித்தன. எப்படியும் ஒரு வெற்றிப்படத்தை விஜய் ஆண்டனி கொடுத்தாக வேண்டிய நிலையில் வெளியாகியிருக்கும் படம் ‘கொலைகாரன்.’ வெற்றியை கொடுத்திருக்கிறதா?. ஆந்திராவின் முக்கியமான அமைச்சர் ஒருவரின் மகன் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். அந்தக் கொலை குற்றவாளியை கைது செய்யப்போகும் போலீஸ் அதிகாரி அர்ஜூனிடம் நான் தான் கொலை செய்தேன். என்று தானாக வந்து சரணடைகிறார் விஜய் ஆண்டனி. குழப்படமடையும் அர்ஜூன் என்ன முடிவெடுக்கிறார் என்பது தான் ‘கொலைகாரன்’ படத்தின் விறு விறுப்பான திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ். படம் ஆரம்பித்த முதல் சீன்ல இருந்து கடைசி சீன் வரைக்கும் கதை என்ன டிமாண்ட் பண்ணுதோ அதை மட்டுமே பண்ணியிருக்கிறார் இயக்குனர் ஆண்ட்ரூலூயிஸ். கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து காட்சிகள் நகர்வதால் ஒரு நல்ல ‘மிஸ்ட்ரி திரில்லர்’ பார்த்த சந்தோஷம் கிடைக்கிறது. சேஸிங், பில்டப் இல்லாமல் டைலாக் மூலமாகவும் அர்ஜூன், விஜய் ஆண்டனி ஃபேஸ் ரியாக்‌ஷன் மூலமாகவும் ரசிகர்களை நகம் கடிக்க வைப்பதற்கு தனி திறமை வேண்டும் அதை திறம்பட செய்திருக்கிறார்கள். தேவையில்லாமல் இடம் பெறும் இரண்டு பாடல்களால் சற்று மெதுவாக நகர்ந்தாலும் காட்சிகள்

மெஹந்தி சர்கஸ் – விமர்சனம்

ஸ்டுடியோ க்ரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம் மெஹந்தி சர்க்கஸ். ராஜுமுருகனின் கதை, வசனத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் சரவண ராஜேந்திரன். 'மாதம்பட்டி' ரங்கராஜ் ,ஸ்வேதா திரிபாதி இருவரும் இந்தப் படத்தின் மூலமாக அறிமுகமாகிறார்கள். பாதி ஹிந்தியிலும், பாதி ஆங்கிலமுமாக தலைப்பை கொண்டுள்ள 'மெஹந்தி சர்க்கஸ்' எப்படி இருக்கிறது? கொடைக்கானலின் அழகிய பூம்பாறை கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து சாதிய நம்பிக்கையில் அதிக ஈடுபாடுடையவர். அவரின் மகனான மாதம்பட்டி ரங்கராஜ் பாடல் பதிவு செய்து கொடுக்கும் மியுசிக்கல்ஸ் நடத்தி வருகிறார். அங்குள்ள இளைஞர்களின் காதல் வளர இவர் பதிவு செய்து கொடுக்கும் இளையராஜாவின் பாடல்கள் பெரும்பங்கு வகிக்கிறது. இப்படி காதல் வயப்பட்டு ஊரை விட்டு ஓடிப்போகும் ஜோடிகளுக்கு ஆதரவு அளிக்கிறார் ஃபாஸ்டர் வேல. ராமமூர்த்தி. ஊர் ஊராக சென்று சர்க்கஸ் கூடாரம் அமைத்து பிழைப்பு நடத்தும் ஒரு குழு பூம்பாறை கிராமத்திற்கு வருகிறது. ஊர் மக்கள் அனைவரும் அவர்கள் காட்டும் வித்தையில் அசர.. மாதம்பட்டி' ரங்கராஜ் மட்டும் சர்க்கஸ் முதலாளி சன்னி சார்லஸின் மகளான ஸ்வேதா திரிபாதியின் அழகில் மயங்கி காதல் கொள்கிறார். அவ்வப்போது பார்வைகள் மூலமாக வளர்ந்து வந்த இவர்களது

Watchman – Review

வடகிழக்கு இந்தியா, நேபாளம் ஒட்டியுள்ள பகுதிகளில் சிறிய சமூகக் குழுக்களாக வாழ்ந்து வருபவர்கள் போடோ மக்கள். அவர்களில் ஒரு குழு, சில கோரிக்கைகளை வலியுறுத்தி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அவர்களிடம் ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு சரணடைந்தால் பொது மன்னிப்பு வழங்குவதாகவும், கோரிக்கைகள் நிறை வேற்றி தருவதாகவும் கூறுகிறார்'டிஜிபி' சுமன். அவர் சொல்வதை கேட்டு சரணடைகிறது அந்தக் குழு. அப்படி சரணடைந்த அந்தக்குழுவின் தலைவனை கொன்றுவிட்டு மற்றவர்களை சிறையிலடைத்து விடுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த 5 தீவிரவாதிகள் சிறையிலிருந்து தப்பித்து 'டிஜிபி' சுமனை கொல்ல நள்ளிரவில் அவர் வீட்டிற்குள் அதிரடியாக நுழைகின்றனர். அதே சமயத்தில் கந்து வட்டிக்குப் பணம் வாங்கி அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ் சுமன் வீட்டிற்குள் பணத்தைக் கொள்ளையடிக்க நுழைகிறார். துரதிஷ்டமாக இவர்களுடன் சுமன் வளர்க்கும் நாயும் தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொள்கிறது அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் 'வாட்ச்மேன்' படத்தின் க்ளைமாக்ஸ். இயக்குனர் விஜய் படமென்றால் அதில் ஒரு எமோஷனல் இன்டலிஜன்ட் இருக்கும். இந்தப்படத்தில் அது டோட்டல் மிஸ்ஸிங். பார்த்து பயப்பட வேண்டிய போடோ தீவிரவாதிகளை முழு முட்டாள்களாக வடிவமைத்து சிரிக்கவைத்திருக்கிறார். திரைக்கதையில் எந்தவொரு பரபரப்பும்,

குடிமகன்

ஜெய்குமார் கதாநாயகனாகவும், ஜெனிஃபர் கதாநாயகியாகவும் நடிக்க தயாரித்து இயக்கியிருக்கிறார் சத்தீஷ்வரன். அழகான சின்ன கிராமத்தில் ஜெய்குமாரும், ஜெனிஃபரும் தங்களுடைய மகன் ஆகாஷூடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் சந்தோஷமான வாழ்க்கையை நாசபடுத்த அந்த ஊருக்குள் வருகிறது டாஸ்மாக். குடிபழக்கம் இல்லாத ஜெய்குமார் பெரும் குடிகாரர் ஆகிறார். ஜெய்குமாரின் தொடர் குடியால் அவரது மனைவி ஜெனிஃபர் கடும் பாதிப்புக்குள்ளாகிறார். மேலும் அந்த கிராமத்தில் உள்ள பல ஆண்களும் , இளைஞர்களும் குடி பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள். இதன் பிறகு என்ன நடக்கிறது ஜெய்குமார் குடி பழக்கத்திலிருந்து மீண்டாரா, இல்லையா? என்பது தான் குடிமனின் மொத்த கதையும். மது இல்லாமல் இருக்கும் தமிழ்நாட்டின் மூலை முடுக்கில் உள்ள கிரமங்களுக்குள் சாமார்த்தியமாக மதுக்கடைகள் எப்படி நுழைகிறது, ஆண்கள் எப்படி அந்த மதுவுக்கு எப்படி அடிமையாகிறார்கள், இந்த பிரச்சனையில் அரசியல் எப்படி விளையாடுகிறது? என்பதை பட்டவர்த்தனமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். குடியை விட்டவர் சமூகத்தில் எப்படி மதிக்கப்படுகிறார்? சமூகத்தில் அந்தஸ்தாக இருந்த ஒருவர் குடியினால் எப்படி மதிப்பிழக்கிறார் என்பதை எந்தவிதமான ஜிகினாக்கள் இல்லாமல் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் சத்தீஸ்வரன். இருப்பினும் நேர்த்தியாக சொல்ல முடியவில்லை. கதையின் நாயகனாக நடித்துள்ள ஜெய்குமார் பரவாயில்லாமல் நடித்துள்ளார். நீண்ட நாள்

Natpe Thunai – Review

காரைக்கால் கழிமுக பகுதியில் இருக்கும் இயற்கை எழில் சூழ்ந்த அழகான ஹாக்கி பிளேகிரவுண்டை ஆட்டைய போட நினைக்கிறார் ஆளுங்கட்சி அமைச்சர் கரு.பழனியப்பன். இந்த விஷயம் ஹாக்கி கோச் ஹரிஷ் உத்தமனுக்கு தெரிய வருகிறது. காலம் காலமாக காரைக்கால் மக்களின் உணர்வுகளில் ஒன்றிபோய்விட்ட அந்த கிரவுண்டை காப்பாற்ற முடிந்ததா இல்லையா? என்பது தான் 'நட்பே துணை'. தன்னுடைய முதல் படமான 'மீசையை முறுக்கு' படத்தின் மூலம் டீசன்ட்டான வெற்றியைக் கொடுத்த 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி நடிக்க அவருடன் இணைந்து நடித்திருக்கிறார் அனகா. பார்த்திபன் தேசிங்கு இயக்கியிருக்கிறார். பார்த்து பழக்கப்பட்ட விளையாட்டை சுற்றி நடக்கும் ஊழல் காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துகிறது. அதிலும் படம் துவங்கி முதல் பாதியின் கடைசி 20 நிமிஷம் வரையிலும் சுத்த போர். ஒரே இடத்திலேயே கதை நகராமல் நிற்கிறது. அதன் பிறகு தூங்கிய சில பேருக்கும் முழிப்பு வந்து விடுகிறது. இடை வேளைக்குப் பின்னர் அங்கங்கே தொய்வு ஏற்பட்டாலும் பரவாயில்லை. யூத்ஸோட பல்ஸை சரியா புரிஞ்சு வைத்திருக்கும் இயக்குனர் அவர்களை கவரும் வகையில் ஆதி , அனகா காட்சிகளை அமைத்திருப்பது ரசிக்க வைக்கிறது. மேலும் சோஷியல் மீடியா பிரபலங்களை மிகச்சரியாக

Uriyadi 2 Review

உறியடி படத்தின் மூலம் சாதி அரசியலை தோலுரித்தவர் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் விஜயகுமார். உறியடி 2 படத்தின் மூலம் போபாலில் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி நள்ளிரவில் யூனியன் கார்பைடு எனும் பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து கசிந்த 'மீத்தைல் ஐசோ சயனேட்' விஷ வாயு சம்பவத்தை நினைவுபடுத்தியுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட பல லட்சம் மக்களுக்கு இன்று வரை நியாயம் கிடைக்கவில்லை என்பது தான் பெரிய சோகம். கெமிக்கல் இஞ்சினியரிங் படித்த விஜயகுமாருக்கும் அவரது இரண்டு நண்பர்களுக்கும் அவர்களின் கிராமத்து அருகிலிருக்கும் எந்தவிதமான பாதுகாப்பு, விதிமுறைகளை பின்பற்றாமல் நடந்துவரும் கெமிக்கல் இன்டஸ்ட்ரியில் வேலைக்கிடைக்கிறது. ஒரு நாள் நடக்கும் விபத்தில் அவரது நண்பர் ஒருவர் இறக்கிறார். அதற்கு காரணம் அந்த கெமிக்கல் இன்டஸ்ட்ரியில் விருந்து வெளியான விஷவாயு தான் காரணம் தெரிய வருகிறது. இது குறித்து நிர்வாகிகளிடம் கூற அதை அலட்சியம் செய்கிறது நிர்வாகம். இந்நிலையில் திடிரென ஒரு நாள் நள்ளிரவில் அந்த கெமிக்கல் இன்டஸ்ட்ரியின் பாய்லர் வெடிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அந்த பாய்லர் வெடித்து சிதறினால் அருகிலிருக்கும் கிராமங்களில் வசிக்கும் உயிர்கள் அனைத்தும் உயிரிழக்கும் அபாயம் உருவாகிறது.

Pesudointelligent trash and sexually overcharged males – Super Deluxe

Super Deluxe - Movie Review There’s what you do, and what you don’t – nothing’s right or wrong says Thyagarajan Kumararaja in his second movie. He treads the line between the real and the surreal in bringing together multiple strands of narratives into an ending, well multiple endings! The connections are quite tangential, like they were brought together so that it could be one feature film, not an anthology of short stories. The stories themselves look like they were written by different writers (as they are) with almost no idea of what the other writer was up to. In spite of that, one wonders how almost every writer (save the guy who wrote the character played by Mysskin) paints at least

ஜூலை காற்றில் -விமர்சனம்

ஜூன் போனால் ஜூலை காற்றே” என்கிற பாடல் வரியில் இருந்து ‘ஜூலை காற்றில் ‘என்பதை டைட்டிலாக வரித்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் கே.சி.சுந்தரம். அமரர் ஜீவாவின் மாணவர். பொதுவாக ஜூலையில் அடிக்கிற காற்று அம்மி கல்லையே தூக்கி வீசும் என்பது! அந்தக் காலத்து மக்கள் சொலவடையாக ஆடிக்காத்திலே அம்மியே பறக்கும் என்பார்கள்.இங்கே பறக்கவிடுவது காதலை.! காதலும் டேட்டிங்கும் எதிர்காலத்தில் சகஜமாகிவிடும் .பெண்ணைப் பெத்தவனே ‘எப்படிம்மா அந்தாளு..தோதுப்பட்டு வர்றானா?”என மகளைப் பார்த்துக் கேட்டாலும் கேட்பான் என்பதற்கு முன்னோட்டம்தான் இந்தப்படம். ஆனந்த்நாக் முதலில் அஞ்சு குரியனை காதலிக்கிறார். டேட்டிங் போகிறார்கள். எங்கேஜ்மென்ட் வரை வந்து “ம்ஹூகும் செட் ஆக மாட்டா”என கழன்று கொள்கிறார். அதே மாதிரிதான் சம்யுக்தா மேனனையும் அவரது அடுத்த டேட்டிங் ஷெட்யூலில் சேர்த்துக் கொள்கிறார். இவர்களுக்கு படுக்கையை பகிர்ந்து கொள்வது என்பது பல் தேய்த்து கொப்பளிப்பது மாதிரி.!பிரஷ் ஒன்னு.பேஸ்ட் பல பிராண்ட் ! யோவ் எப்படிய்யா இப்படியெல்லாம் அந்தரங்க சோலிகளை அலசி பப்ளிக்கில் காயப்போடுறீங்க? ஆனந்த்நாக் பொறாமைக்குரிய ஆளு. பெருமூச்சு தான் விடமுடியிது.அனுபவிப்பதை எல்லாம் அனுபவித்து விட்டு எதனால் அஞ்சுவை செட் ஆகாது என்கிற முடிவுக்கு வந்தார் ,அவர் போட்டிருந்த கணக்கு என்ன? லவ்வர் பாய் என்கிற முகம்

நெடுநல்வாடை

தலைவனைப் பிரிந்து வாழும் தலைவிக்கு இது நீண்ட நெடிய வாடை.போரில் வெற்றி பெற்றவனுக்கோ நல்வாடை. இந்தக் கதையில் தலைவிக்கு ஒரு வகையில் வெற்றி. தலைவனுக்கு தோல்வி. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாக வைத்து நக்கீரர் பாடியதுதான் நெடுநல்வாடை. அந்த இலக்கியப் பெயரில் வந்திருக்கிற படம். பூ ராமு,இளங்கோ ,அஞ்சலி நாயர், பாடல்கள் வைரமுத்து, இயக்குநர் செல்வகண்ணன் எளிய கிராமம். வெல்லம் காய்ச்சும் கரும்பு விவசாயி பூ ராமு. ஆசைக்கொரு மகள் ,ஆஸ்திக்கொரு மகன் என அளவான குடும்பம். ஓடிப்போன மகள் கணவனால் கைவிடப்பட அப்பன் வீட்டுக்கு இரண்டு பிள்ளைகளுடன் அடைக்கலம் அடைகிறாள். அங்கு என்னென்ன நடக்கிறது என்பதை நெல்லையின் மண் வளம்,மன வலம் குறையாமல் ஆபாசமில்லாமல் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் செல்வகண்ணன். எத்தனையோ படங்கள் நெல்லையின் ஸ்லாங் என சொல்லி வந்திருக்கின்றன. ‘என்னவே,என்னலே’என்பதே வட்டார வழக்கு என இழுவையாக அறியப்பட்ட ஏனைய மாவட்ட மக்களுக்கு இதுவே அசல் மணம் என காட்டியிருக்கிறார்கள். பொன் வைக்கிற இடத்தில் பூ வைத்தால் போதும் என ராமுவை செல்லையாவாக நடிக்கச்சொன்னால் அந்த மனிதர் வாழ்ந்தே காட்டிவிட்டார். எளிமை இயல்பு, வெற்றுடம்பு ,வேட்டியில் இழைகிறது. மகள் வழிப் பிள்ளைகள் என்கிற மனப்பான்மை இல்லாமல்

Top