You are here
Home > World

கடைசி நேரத்தில் சந்திராயன் – 2 விண்கலம் ஏவுவது நிறுத்தி வைப்பு!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து (ஜூலை 15) இன்று அதிகாலையில் 2.51 மணிக்கு சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட இருந்தது. ஆனால் சந்திராயன் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சந்திராயன் 2 விண்கலம் ஏவப்படுவதற்கு 55 நிமிடங்களுக்கு முன்னதாக இன்று திடீரென கவுன்ட் டவுன் நிறுத்தப்பட்டது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட ட்விட்டர் செய்தி குறிப்பில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சந்திராயன்2 விண்ணில் ஏவப்படும் புதிய தேதி, நேரம் பின்னர் அறிவிக்கப்படுவதாக அச்செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் ஜனநாயகப் படுகொலை! இந்தியா தலையிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

அண்டை நாடான இலங்கையில் அரசியல் குழப்பம் உச்சத்தை அடைந்து வருகிறது. பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவை அதிரடியாக நீக்கிவிட்டு, மஹிந்த ராஜபக்‌ஷேவை பிரதமராக்கினார், அதிபர் மைத்ரிபால சிறீசேனா. ஆனால் ரணில் விக்ரம சிங்கே நான் தான் பிரதமர் என கூறிவரும் நிலையில், இலங்கை அரசியலை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.   இது குறித்து இந்தியா தலையிட வலியுறுத்தி மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமாதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.. இலங்கை நாடாளுமன்றத்தை  நள்ளிரவில் கலைத்த அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா, புதிய நாடாளுமன்றத்தை அமைக்க அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார். 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை பதவிக்காலம் இருக்கும் நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் திடீரென கலைத்திருப்பது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலையாகும். இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது அந்நாட்டின் உள்விவகாரம் தான் என்றாலும் கூட, அதில் இந்தியாவின் பாதுகாப்பும், ஈழத்தமிழர் நலன்களும் அடங்கியிருப்பதால் இந்த விவகாரத்தில் எங்களுக்கு சம்பந்தமில்லை என்று கூறி இந்திய அரசு கடந்து செல்ல முடியாது. இலங்கையில் அரசியல் குழப்பங்கள் தொடங்கியதும், அதன் விளைவாக அந்நாட்டின் பிரதமர்

அதிபர் சிறிசேனாவின் அராஜகம் பேரதிர்ச்சியளிக்கிறது – மு.க.ஸ்டாலின்

அண்டை நாடான இலங்கையில் சமீப நாட்களாக நடந்துவரும் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும், திமுக வின் தலைவருமான மு.க.ஸ்டாலின் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.. “மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே, தேர்தல் நடைபெற்ற நான்கரை வருடங்களுக்குள் இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும்” என்று இலங்கை அரசியல் சட்டம் மிகத் தெளிவாக வரையறுத்துள்ளது. அதனைக் காலில் போட்டு மிதித்து, அதன் மீது ஏறி நின்று, சிறிதும் மனசாட்சியின்றி, நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ள அதிபர் சிறிசேனாவின் அராஜகம் பேரதிர்ச்சியளிக்கிறது. மிக மோசமான அரசியல் சட்ட நெருக்கடியை உருவாக்கி - அதன் மூலம் இலங்கையில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் தமிழர்களின் நலனுக்கும், பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியிருக்கிறார். கடந்த அக்டோபர் 26ஆம் தேதி தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக, இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை மாற்றி, வருகின்ற 14ஆம் தேதி புதிய பிரதமர் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்று தெரிந்ததும், தமிழ் மக்களின் குரல் ஒலிக்கும் நாடாளுமன்றத்தைக் கலைத்திருப்பது ஜனநாயகப் படுகொலை மட்டுமல்ல - அதிபரின் அரசியல் சட்ட அத்துமீறல்! தமிழர்களின்

அமெரிக்காவை பெரும் பீதிக்குள்ளாக்கிய ஃபுளோரன்ஸ் புயல்!

அமெரிக்காவை அண்மையில் பெரும் பீதிக்குள்ளாக்கியிருக்கும் புயல் ஃபுளோரன்ஸ் புயல்!. இப்புயலால் அமெரிக்காவின் கிழக்கு கடலோரப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும் என அந்நாட்டு வானிலை மய்யம் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன் காரணமாக . நேற்று இரவு முதல், அப்பகுதியிலிருந்த  ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஃபுளோரன்ஸ் புயல் அமெரிக்காவின் கிழக்கு கடலோரப் பகுதிகளை நோக்கித் தாக்க துவங்கியுள்ளது. இதனால் வடக்கு மற்றும் தெற்கு கரோலினா மாகாணங்களின் உட்புறங்களை நோக்கி மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஃபுளோரன்ஸ் புயல் காரணமாக ஒரு லட்சத்துக்கும் மேலான வீடுகளுக்கு செல்லும் மின் இணைப்புகள் பாதுகாப்பு காரணங்களுக்காக துண்டித்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கு கரோலினா மாகாணத்தில்  பலத்த காற்று மற்றும் மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஃபுளோரன்ஸ் புயல்  உள்ளூர் நேரப்படி வெள்ளி காலை எட்டு மணிக்கு, தெற்கு கரோலினாவின் மைர்ட்டில் கடற்கரைப் பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஸ்தானின் 22வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார்

அண்மையில் நடந்து முடிந்த பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் , முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான் கானின் 'தெஹ்ரிக் ஈ இன்சாப்' கட்சி 116 இடங்களை கைப்பற்றியது.  இருப்பினும் தனித்து ஆட்சி அமைக்க மேலும் சில இடங்கள் தேவைபட்டது. இதனால் உதிரி கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி அரசு அமைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நேற்று பாகிஸ்தானின் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக நாடாளுமன்ற  உறுப்பினர்களுக்கிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் , 176 வாக்குகள் பெற்று இம்ரான்கான் வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து,  குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று பிரதமர் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் பாஸ்தானின் 22வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் மம்னூன் உசேன், இம்ரான் கானுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ஐ.நா சபையின் முன்னாள் செயலாளர் கோஃபி அணன் காலமானார்

ஐ.நா சபையின் முன்னாள் செயலாளர் கோஃபி அணன் காலமானார். அவருக்கு வயது 80. கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த கோஃபி அணன் இன்று காலமானார். இவர் கானாவின் குமசியின் கோபேன்ட்ரோஸ் பகுதியில் பிறந்தவர். ஐக்கிய நாடுகள் அவையின் ஏழாவது செயலாளராக இருந்தவர். ஜனவரி 1, 1997 இல் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கோஃபி அணன் டிசம்பர் 31, 2006 அன்று ஓய்வு பெற்றார். கோஃபி அணனுக்கு அமைதிக்கான ‘நோபல் பரிசு’ விருது வழங்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மிகவும் கவலைக்கிடம்! – டெல்லி எய்ம்ஸ்

1924 டிசம்பர் மாதம் பிறந்த வாஜ்பாய். இந்திய விடுதலை போராட்ட வீரராக, பத்திரிகையாளர் முதல் பிரதமர் வரை பல்துறை  திறன் பெற்றவராக திகழ்ந்தவர்.அவர் உடல்நலிவுற்ற நிலையில் கடந்த 8 வாரங்களுக்கும் மேலாக  டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார்.நேற்று பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களும் மத்திய அமைச்சர்களும் வாஜ்பாயின் உடல்நிலை குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் வாஜ்பாய் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவருக்கு  உயிர் காக்கும் சாதனங்களின் துணையோடு  சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று  காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்ற பா.ஜ.க. தலைவர் அமித்ஷா மருத்துவர்களிடம் வாஜ்பாயின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். வாஜ்பாய் உடல்நலம் பெற வேண்டி பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். கட்சி பாகு பாடின்றி அனைத்து தரப்பினரிடமும் நல்ல நட்பு பாராட்டியவர் வாஜ்பாய் என்பது குறிப்பிடதக்கது.

சான்றிதழ் ஊழல்: சேவை உரிமைச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்! – பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சேவை உரிமைச் சட்டத்தைக் கொண்டு வர வலியுறுத்தி பாமக நிறுவனர் டாக்டர். ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது… நீதியரசர் எஸ்.எம்.சுப்பிரமணியம் வேதனை சென்னை பெரு மாநகராட்சியில் ஊழல் மலிந்து விட்டதாகவும், கட்டிட ஒப்புதல் உள்ளிட்ட எந்தவொரு சான்றிதழையும் கையூட்டுக் கொடுக்காமல் வாங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டிருப்பதாகவும் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.எம்.சுப்பிரமணியம் வேதனையுடன் கூறியிருக்கிறார். சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனை நீதிபதி நேரில் அழைத்து தனது கண்டனங்களையும் பதிவு செய்திருக்கிறார். சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் கூறியுள்ள கருத்துகள் உண்மையானவை; தமிழகத்தில் நிலவும் யதார்த்த நிலையை பிரதிபலிப்பவை. சென்னை மாநகராட்சியில் மட்டும் தான் என்றில்லை... தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதே நிலை தான். பிறப்புச் சான்றிதழ் முதல் இறப்புச் சான்றிதழ் வரை எது வாங்க வேண்டுமானாலும் கையூட்டுக் கொடுத்தாக வேண்டும் என்பது எழுதப் படாத சட்டமாகி விட்டது. மாணவர்களுக்குத் தேவையான சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், முதல் பட்டதாரிச் சான்றிதழ் ஆகியவற்றை கூட கையூட்டு வாங்காமல் தர முடியாத அளவுக்கு அரசு அதிகாரிகள் இரக்கமற்றவர்களாகி விட்டனர். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று எத்தனையோ போராட்டங்களை நடத்தியும் எந்த பயனும் ஏற்படவில்லை.

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் – நவாஸ் ஷெரிஃப் இம்ரான் கானிடையே கடும் போட்டி!

342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தானின் 16வது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. இதில் 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் சிறுபான்மையினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்கியதை அடுத்து மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். ஆட்சியைக் கைபற்ற ஆளும் முஸ்லிம் லீக், பாகிஸ்தான் மக்கள் கட்சி, தெஹ்ரிக் ஈ இன்சாப் ஆகியக் கட்சிகளுக்கிடையே  போட்டி நிலவி வருகிறது. இதில் நவாஸ் ஷெரீப்பின் ஆளும் முஸ்லிம் லீக் கட்சிக்கும் இம்ரான்கானின் தெஹ்ரிக் ஈ இன்சாப் உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே தான் கடும் போட்டி. தேர்தலுக்கு முன்பு வரை பாகிஸ்தானில் நடந்து வந்த தற்கொலை சம்பவங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் ராணுவத்தினர் உச்சக்கட்ட பாதுகாப்பு பணிக்காக சுமார் 3 லட்சம் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் பலுசிஸ்தான் மாகாணத்தில் வாக்குச்சாவடி ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பில் 32 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் வாக்குகள் எண்ணப்பட்டு 26 ஜூலை நாளை முடிவு அறிவிக்கப்படவுள்ளது குறிப்பிடதக்கது.

Honor launches the exquisitely beautiful Honor 9N – A Notch Above the Rest

Honor 9N comes with Notch display with 19:9 aspect ratio and 79% screen to body ratio for best viewing experience at the most affordable price Premium looks, exquisite design and 12 layers of glass coating gives the Honor 9N a mirror like effect Honor 9N will be available exclusively on Flipkart from 31 st July, 12 noon onwards Equipped with dual lens rear camera for professional “Bokeh effect” photography and a 16MP front camera for the perfect selfies Honor, the sub-brand of Huawei, today announced the launch of its exquisitely beautiful Honor 9N which comes with a stylish notch at an affordable price. With the launch of the Honor 9N, Honor aims to share the experience of the Full View Notch display with all

Top
error: Content is protected !!