நடிகை கீர்த்தி சுரேஷூக்கு தேசிய விருது

அகில இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் சினிமா துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள் இயக்குனர்கள் என  பலருக்கு மத்திய அரசின்  தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், 2018 ஆண்டிற்கான 66ஆவது தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கையை மைய்யப்படுத்தி வெளியான தெலுங்குப்படமான ‘மகாநடி’ படத்தில் சிறப்பாக நடித்த கீர்த்தி சுரேஷூக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

சிறந்த தெலுங்கு மொழிப் படமாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தப்படம் தமிழ் மொழியிலும் டப் செய்து வெளியானது குறிப்பிடதக்கது. குறைந்த வயதிலேயே சிலபடங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

தேசிய விருது பெற்ற பல்வேறு திரைப்படங்களும் அதன் விபரங்களும்
சிறந்த இந்தி படம் – அந்தாதுன்
சிறந்த மலையாளம் படம் – சுடானி ஃப்ரம் நைஜீரியா
சிறந்த அசாமிய படம் – புல்புல் கேன் சிங்
சிறந்த தெலுங்கு படம் – மகாநதி

தேசிய விருது பெற்ற நடிகர்கள்

1. ஆயுஷ்மான் குரானா – அந்தாதுன் (இந்தி)
2. விக்கி கௌஷல் – உரி (இந்தி)

 

பிற விருதுகள்

சிறந்த பின்னணி பாடகர் (ஆண்) – அர்ஜித் சிங் – பத்மாவத் (இந்தி)
சிறந்த துணை நடிகை – சுரேகா சிக்ரி – பதாய் ஹோ (இந்தி)
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – பதாய் ஹோ (இந்தி)
சமூக பிரச்சனையை பேசும் சிறந்த திரைப்படம் – பேட்மேன் (இந்தி)
சிறந்த ஆடை அலங்காரம் – மகாநதி (தெலுங்கு)
சிறந்த இசை – சஞ்சை லீலா பன்சாலி, பத்மாவத் திரைப்படத்திற்காக (இந்தி)
சிறந்த நடனம் – கூமர் பாடல், பத்மாவத் திரைப்படம் (இந்தி)
சிறந்த ஒளிப்பதிவாளர் – எம் ஜி ராதாகிருஷ்ணன், ஒலு (மலையாளம்)
குடியரசுத்தலைவரால் வழங்கப்படும் இந்த தேசிய விருதுகள் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படவுள்ளது