கொரோனா ‘ரேபிட் கிட்’ பரிசோதனை பயன்பாட்டிற்கு வந்தது.

கொரோனா ‘ரேபிட் கிட்’ பரிசோதனை பயன்பாட்டிற்கு வந்தது.

நேற்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1323. உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின் படி, ஊரடங்கு காலத்திலேயே சோதனையை விரைவு படுத்தும் விதத்தில் தமிழ்நாட்டில்  முதல்முறையாக ‘ரேபிட் கிட்’ பரிசோதனை நடைமுறைக்கு வந்துள்ளது.

நோய்தொற்று உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களை இதன் மூலம் குறைவான நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க முடியும். ஏற்கனவே நடைமுறையில் இருந்துவரும் பிசிஆர் சோதனை மூலம் முடிவுகளை தெரிந்துகொள்ள  சுமார் 5 மணி நேரம் பிடித்தது. ‘ரேபிட் கிட்’ பரிசோதனையில் சுமார் 30 நிமிடங்களில் தெரிந்து கொள்ளமுடியும். இன்று காலை முதல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த சோதனை நடை முறைக்கு வந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் ‘ ரேபிட் கிட்’ பரிசோதனையை  மாவட்ட ஆட்சியர்  ராமன்  அறிமுகப்படுத்தி வைத்தார்.