தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் போது மாவட்ட ஆட்சியர் எங்கு இருந்தார்? – உயர்நீதி மன்றம் கேள்வி

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய  போராட்டத்தின் போது 13 பேர் போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டுக்கு பலியாகினர். இது தொடர்பாக நடைபெற்ற வழக்கின் விசாரணையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எங்கு சென்று இருந்தார்?

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்த போலீசார் பயன்படுத்திய துப்பாக்கி எந்த வகையை சேர்ந்தது?

மிகப்பெரிய போராட்டம் நடைபெற்ற நிலையில் அங்கு மாவட்ட ஆட்சியர் இருந்திருக்க வேண்டாமா?  என பல கேள்விகளை உயர்நீதி மன்றம் எழுப்பியுள்ளது.

மேலும் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 99 நாட்களாக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டங்களின் வீடியோ பதிவை தாக்கல் செய்வதுடன்  ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக உளவுப்பிரிவு போலீசார் சேகரித்த தினசரி தகவல்களையும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிதுள்ளது உயர்நீதி மன்றம்.