மருத்துவக்கல்லூரி மாணவ மாணவிகளுக்கு காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவுரை

மதுரை மருத்துவக்கல்லூரி வெள்ளி விழா அரங்கத்தில் நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அடிப்படைப்பாட வகுப்பினை (Foundation Course) மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் துவக்கி வைத்து பேசியதாவது..

‘மாணவ மாணவிகளுக்கு சமூக ஊடகங்களின் பயன்பாடு மற்றும் அவற்றினால் ஏற்படும் நன்மை தீமைகள் மற்றும் அவற்றினால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும், Whatsapp மூலமாக தவறான செய்திகளை பரப்புவதினால் ஏற்படும் தீமைகள் அவற்றை தடுத்தல் மற்றும் Facebook பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிடுவதினால் ஏற்படும் தீமைகள் அந்நிய நபர்களை நண்பர்கள் ஆக்குவதினால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட இரகசியங்களை வெளியிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றியும், சமூக வலைதளங்களில் சமூக விரோதிகளின் தீமைவிளைவிக்கும் செயல்பாடுகள் மற்றும் இணையதளத்தை மாணவர்கள் எவ்வாறு பயனுள்ளதாக பயன்படுத்து என்பது குறித்தும் மாணவர்கள் தங்களது லட்சியத்தை நிறைவேற்றுவதிலும் பெற்றோர்களின் கனவுகளை நனவாக்குவதிலும் முழு முயற்சி எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் இணையதள குற்றங்கள் பற்றியும் மற்றும் அவற்றின் தண்டனைகள் பற்றியும் அவற்றின் பாதுகாப்பு பற்றியும் மற்றும் மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு தகுந்த விளக்கமளித்தார். இந்நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.