குடிமகன்

ஜெய்குமார் கதாநாயகனாகவும், ஜெனிஃபர் கதாநாயகியாகவும் நடிக்க தயாரித்து இயக்கியிருக்கிறார் சத்தீஷ்வரன்.

அழகான சின்ன கிராமத்தில் ஜெய்குமாரும், ஜெனிஃபரும் தங்களுடைய மகன் ஆகாஷூடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் சந்தோஷமான வாழ்க்கையை நாசபடுத்த அந்த ஊருக்குள் வருகிறது டாஸ்மாக்.

குடிபழக்கம் இல்லாத ஜெய்குமார் பெரும் குடிகாரர் ஆகிறார். ஜெய்குமாரின் தொடர் குடியால் அவரது மனைவி ஜெனிஃபர் கடும் பாதிப்புக்குள்ளாகிறார். மேலும் அந்த கிராமத்தில் உள்ள பல ஆண்களும் , இளைஞர்களும் குடி பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள். இதன் பிறகு என்ன நடக்கிறது ஜெய்குமார் குடி பழக்கத்திலிருந்து மீண்டாரா, இல்லையா? என்பது தான் குடிமனின் மொத்த கதையும்.

மது இல்லாமல் இருக்கும் தமிழ்நாட்டின் மூலை முடுக்கில் உள்ள கிரமங்களுக்குள் சாமார்த்தியமாக மதுக்கடைகள் எப்படி நுழைகிறது, ஆண்கள் எப்படி அந்த மதுவுக்கு எப்படி அடிமையாகிறார்கள், இந்த பிரச்சனையில் அரசியல் எப்படி விளையாடுகிறது? என்பதை பட்டவர்த்தனமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

குடியை விட்டவர் சமூகத்தில் எப்படி மதிக்கப்படுகிறார்? சமூகத்தில் அந்தஸ்தாக இருந்த ஒருவர் குடியினால் எப்படி மதிப்பிழக்கிறார் என்பதை எந்தவிதமான ஜிகினாக்கள் இல்லாமல் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் சத்தீஸ்வரன். இருப்பினும் நேர்த்தியாக சொல்ல முடியவில்லை.

கதையின் நாயகனாக நடித்துள்ள ஜெய்குமார் பரவாயில்லாமல் நடித்துள்ளார். நீண்ட நாள் பிறகு திரைக்கு வந்துள்ள ஜெனிஃபர் குடிகாரனின் மனைவி படும் அவஸ்தைகள், கோபம், விரக்தி என தன்னுடைய நடிப்பால் மிகச்சரியாக வெளிப்படுத்தியுள்ளார். கருத்து பேசும் குடிகாரனாக நடித்துள்ள வீரசமர் சில இடங்களில் பாராட்டும் படி நடித்துள்ளார்.

விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்தக் குடிமகனுக்கு பாராட்டுக்கள்