You are here
Home > Posts tagged "dhanush"

முதல் 3 நாளில் 18 கோடி வசூல் செய்த ‘அசுரன்’

Asuran box office collection 'கலைப்புலி' தாணு  'V. Creation'  சார்பில் தயாரித்துள்ள படம் அசுரன். கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி வெளியான இப்படம் அனைத்து தரப்பினரின் ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சூர்யாவின் 'காப்பான்', சிவகார்த்திகேயன் நடிப்பில் ' நம்ம வீட்டுப் பிள்ளை', மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பில் வெளியான சிரஞ்சீவியின் 'சைரா நரசிம்ம ரெட்டி' ஆகிய படங்கள் தமிழகத்தில் பெரும்பான்மையான தியேட்டர்களை ஆக்கிரமித்திருந்தன. இந்நிலையில் வெற்றிமாறன் -  தனுஷ் காம்போவில் வெளியான 'அசுரன்' படத்திற்கு குறைவான தியேட்டர்களே கிடைத்தன. 'அசுரன்' வெளியான முதல் ஷோவிலிருந்தே படத்திற்கு பாஸிட்டிவான விமர்சனங்கள் மக்களிடமிருந்தும், விமர்சகர்களிடமிருந்தும் வெளியானது. சுமார் 18 கோடி ரூபாய்  வசூல் செய்து கடந்த மூன்று நாட்களில் 'அசுரன்' படத்தின் வசூல் அட்டகாசமாக இருந்து வருகிறது  என்கின்றனர் படத்தை திரையிட்ட தியேட்டர்  உரிமையாளர்கள்.  அதேபோல் இனிவரும் நாட்களிலும் அந்த வசூல் தொடருமாம். அதிக அளவு தியேட்டர்களில் படம் வெளியாகி வசூலிக்கும் தொகைக்கு இனையாக குறைந்த அளவிலான தியேட்டர்கள் மூலம் வசூலானது ஒரு சாதனை தான் என்கின்றனர் திரையிட்ட விநியோகஸ்தர்கள். MG ( Minimum Guarantee ) அடிப்படையில் திரையிட்ட இடங்களில் வசூலை வாரிகுவித்து வருகிறது. அசுரன்.

‘Asuran’ – Movie Review

'Asuran' - Movie Review இந்த வருடம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் தனுஷ் நடித்து, வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'அசுரன்', மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம். 'V. Creations' சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். சாகித்திய அகாடெமி விருதைப் பெற்ற பூ. மாணிக்கவாசகம் என்ற பூமணி எழுதிய 'வெக்கை' நாவலை, ஒரு சில மாற்றங்களோடு படமாக்கியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். 'வெக்கை' நாவலில் கிராமங்களில் புறையோடியிருக்கும் சாதிய பின்புலங்கள், அதை சார்ந்து நடக்கும் கொலை என படிக்கும்போதே பதை பதைக்கும். அதை எப்படி படமாக்கியிருக்கிறார்கள்? ரெண்டுங்கெட்டான் வயதான பதினைந்து பதினாறு வயதுடைய சிறுவன் கென், ஆடுகளம் நரேனை கொலை செய்கிறான். அதை தொடர்ந்து கொலை செய்யப்பட்ட நரேனின் உறவுகள் பலி தீர்த்துக்கொள்ள அவனையும் அவனது குடும்பத்தினரையும் துரத்துகிறது. காட்டுக்குள் ஓடி மறையும் அவர்களின் கதி என்ன? என்பது தான் படத்தின் படபடக்கும், திக்.. திக்.. திரைக்கதையும் க்ளைமாக்ஸும்!ஒரு படத்தின் வெற்றிக்கு பெரிய பலமாக இருப்பது நடிகர், நடிகைகளின் தேர்வு. அதை மிகச்சரியாக செய்து வெற்றியை வசமாக்கியிருக்கிறார்கள். திருநெல்வேலி வட்டாரத்தில் நடக்கும் கதைக்களமாக கொண்டுள்ள இந்தப்படத்திற்கு, மிகப்பெரிய பலமாக சுகாவின் வசனங்களும், கதாபாத்திரங்கள் அதை உச்சரிக்கும் விதமும் வெகு சிறப்பு. தனுஷ் படத்திற்கு படம்

‘மஞ்சுவாரியாரின் டேலண்ட் எனக்குப் பிடிக்கும்.’ – தனுஷ்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் 'அசுரன்' .இப்படத்தை 'வி கிரியேசன்ஸ்' சார்பில் கலைப்புலி S தாணு தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது . இவ்விழாவில் நடிகர் தனுஷ் பேசியதாவது,.. "அசுரன் படத்தைப் பொறுத்தவரைக்கும் நம்பிக்கை தான் முக்கியமா இருக்கு. வெற்றிமாறன் தான் இயக்குநர் என்று தாணு சாரிடம் சொன்னதும் அவர் கதையே கேட்காமல் ஓ.கே சொன்னார். அந்த நம்பிக்கை ரொம்ப முக்கியமானது. வெற்றிமாறன் நான் நடிப்பதற்கு நிறைய கண்டெண்ட் கொடுப்பார். இந்தக் கதாப்பாத்திரம் என் 36 வயதில் கிடைத்திருப்பது பெரிய கொடுப்பனை. வேற எந்த நடிகருக்கும் அது கிடைக்குமா என்று தெரியவில்லை. இந்தப்படம் ஒரு முக்கியமான படமாக கண்டிப்பாக  இருக்கும் மிகவும் மகிழ்ச்சியுடன் நான் நடித்த படம் இது . வெற்றிமாறனும் அவர் டீமும் எனக்கு நல்ல ப்ளாட்பார்ம் கொடுத்திருக்காங்க. மஞ்சுவாரியாரின் டேலண்ட் எனக்குப் பிடிக்கும். அவரோடு நடிக்க வேண்டும் என்று ரொம்ப ஆசையாக  இருந்தது. கென்னுக்கு கான்பிடண்ட் அதிகம். டி.ஜே பாடியே நம்மை கரெக்ட் பண்ணிருவான். இப்ப இருக்குற இளைஞர்களிடம் நிறைய திறமை இருக்கிறது. ஜிவி ,அவரோடு வொர்க் பண்றது ஜாலியா இருக்கும். மண்

‘என்னை பார்த்தவுடன் லவ் பண்ணினார் தனுஷ்’ – ஐஷ்வர்யா ராஜேஷ்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் வட சென்னை. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் தனுஷ் பேசும்போது.. வெற்றிமாறனுடன் திரும்பவும் இந்த படத்தில் சேர்ந்து நடிப்பதை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. வடசென்னை அடுத்து நானும் வெற்றிமாறனும் அடுத்த படத்தில் சேர இருக்கிறோம். ஷூட்டிங் விரைவில் ஆரம்பிக்க இருக்கிறது. வரும் 17ம் தேதி வடசென்னை படம் ரிலீஸ் ஆகிறது. உங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் வகையில் இருக்கும். படத்தில் அமீர் சார் வேற லெவல நடிச்சிருக்கார். என்னுடைய வாழ்த்துக்கள். மேலும் உடன் நடித்த ஆண்ட்ரியா ,ஐஸ்வர்யா ராஜேஷ் ,மற்றும் அனைவருமே சூப்பரா நடிச்சிருக்காங்க. சந்தோஷ் நாராயணன் பெரிய இசை படத்திற்கு பிளஸ். பாடல் அனைத்தும் அருமையாக உள்ளது .வேல்ராஜ் ராஜ் சார் அருமையாக ஒளிப்பதிவு செய்துள்ளார். இரவு பகல் பாராமல் படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.என்றார் இயக்குனர் வெற்றிமாறன் பேசியபோது… படத்திற்கு ஏ சர்ட்டிபிகேட் கிடைத்துள்ளது. எந்த ஒரு காட்சிகளும் நீக்கப்படவில்லை. முதல் பாகத்தின்  வெளியீட்டைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் மற்றும் அடுத்தடுத்த படங்கள் வெளிவரும்.. அந்தந்த காலகட்ட காட்சிகளுக்கு ஏற்ப தனுஷ் அவர்கள் அருமையாக நடித்துள்ளார். அவரின் பேச்சு.. நடிப்பு ஜடை.

Top
error: Content is protected !!