You are here
Home > Posts tagged "Indhuja"

நடிகை இந்துஜா வின் ‘ஜில்ஜில் ராணி’ பாடல்!

ACTRESS INDHUJA ITEM DANCE VIRAL VIDEO இணையவெளியில்  பதிவேற்றிய சில நிமிடங்களில் லட்சங்களைத் தொட்டிருக்கிறது 'சூப்பர் டூப்பர்' படத்தின் ' ஜில் ஜில் ராணி ' என்கிற பாடல். துருவா , இந்துஜா நடிப்பில் ஃப்ளக்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில், ஏ.கே இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'சூப்பர் டூப்பர்'. முழுநீள கமர்சியல் பேக்கேஜ் ஆக உருவாகி வணிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தப்படத்தில் நாயகி இந்துஜா ,'ஜில் ஜில் ராணி' பாடலுக்கு ஆடிப்பாடி நடித்திருக்கிறார். அண்மைக்காலங்களில் இந்துஜா நடித்த 'மேயாத மான்', '40 வயது மாநிறம்' ,'மகாமுனி' போன்ற  படங்களில்   குடும்பப் பாங்காகத் தோன்றினார். https://youtu.be/8gTpGsg4dbk இந்த  'சூப்பர் டூப்பர்' படத்தில் தைரியசாலிப்  பெண்ணாக நவீன புதுமைப் பெண்ணின் அவதாரமாக வருகிறார் . சுயவிருப்பமுள்ள  பெண்ணாக வருகிற அவர், தன் தோற்றத்திலும் கவர்ச்சியிலும் நடிப்பிலும் தனி முகம் காட்டுகிறார்.  .அதற்கான வரவேற்பு ரசிகர்களால்  இப்பாடலின் மூலம் கிடைத்திருக்கிறது. 'ஜில் ஜில்  ராணி 'பாடலுக்கு "லைக்"குகள் பெருகி வழிவதும் ஷேர்"கள் குவிவதும்  இந்தப் பாடல் பார்வையாளர்களால் ,ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டு வருகிறது என்று கூற வைக்கிறது.  'சூப்பர் டூப்பர்' படத்தின் எதிர்பார்ப்பிற்கு ஒரு  முன்னோட்டமாக இப்பாடலின் வரவேற்பு  அமைந்திருக்கிறது எனலாம்.

‘சூப்பர் டூப்பர்’ படம் பற்றி மனம் திறக்கும் நாயகன் துருவா

ஃப்ளக்ஸ் பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் ஏகே இயக்கத்தில் துருவா , இந்துஜா  நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சூப்பர் டூப்பர்'. வளர்ந்து வரும் நடிகர் துருவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ' சூப்பர் டூப்பர்' இப்படத்தைப் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் துருவா. 'சூப்பர் டூப்பர்' படம் பற்றிய தன் அனுபவங்களைக்  கூறும் போது . "சூப்பர் டூப்பர் படத்தை எடுத்துக்கொண்டால்  ஆக்ஷன், த்ரில்லர் , ரொமான்ஸ் ,  காமெடி அனைத்தும் இணைந்த ஒரு படமாக இருக்கும் .80, 90 களில் வந்த படங்களை எடுத்துக்கொண்டால் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த படங்களாகவும் பெரும்பாலானவை வெற்றிப் படங்களாகும் இருக்கும். ஏனென்றால் அதில் ஒவ்வொருவருக்கும் தான் எடுத்துக் கொள்ள வேண்டிய அம்சங்கள் இருக்கும். ஆக்ஷன் இருக்கும்; ரொமான்ஸ் இருக்கும்; காமெடி இருக்கும்; சென்டிமென்ட் இருக்கும். இப்படி ஏதாவது ஒரு விஷயத்தால் ஈர்க்கப்பட்டு ரசிகர்கள்  திரையரங்குகளுக்குச் சென்றார்கள். அதுபோல் 'சூப்பர் டூப்பர்' படமும் அனைத்து அம்சங்களும் இருக்கும்படியான படமாக உருவாகி இருக்கிறது. இப்படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயர் 'சத்யா'. ஆனால் நான் வாய் திறந்தால் பொய் தான் சொல்லுவேன் .பொய் சொல்வேனே தவிர  கெட்டவன் கிடையாது. இப்படிப் பொய் சொல்லிக்  கதாநாயகியிடம்

தீபாவளி விருந்தாக திரைக்கு வருகிறது ‘பில்லா பாண்டி’

அனைத்தலப்பட்டி எனும் ஊரில் பில்லா பாண்டி படத்தின் கதை நடப்பதாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஊரின் பெயரிலேயே "தல" இருப்பதாலோ என்னவோ, அந்த ஊரில் நடிகர் அஜித்திற்கு பல ரசிகர்கள். இப்படத்தின் தயாரிப்பாளரும், முக்கிய வேடத்தில் நடிப்பவருமான  K.C.பிரபாத் ஒரு தல அஜித் ரசிகர். நடிகர் அஜித்தின் அருமை பெருமைகளையும், அவரது ரசிகர்களின் பண்புகளையும், தன்னார்வ தொண்டுகளையும் கூறும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது என்றும், பில்லா பாண்டி படம் தீபாவளி அன்று திரைக்குவரவுள்ளதாகவும் தயாரிப்பாளர் K.C.பிரபாத்  கூறினார். பில்லா பாண்டி படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் K.C.பிரபாத், இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர் அஜித்தின் புகழ் பாடும்  "எங்க குல தங்கம்" என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. "பில்லா பாண்டி" படத்தில் நடிகர் R.K.சுரேஷ் தீவிர அஜித் ரசிகராக நடித்திருக்கிறார். மேயாதமான் இந்துஜா, சாந்தினி கதாநாயகிகளாக நடிக்கும் இப்படத்தில் K.C.பிரபாத் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். மேலும் தம்பி ராமையா, சரவண சக்தி, மாரிமுத்து,அமுதவாணன், சங்கிலி முருகன், சௌந்தர்,மாஸ்டர் K.C.P தர்மேஷ், மாஸ்டர் K.C.P மிதுன் சக்ரவர்த்தி உள்பட பலர் நடிக்கின்றனர். சூரி கெஸ்ட் ரோலிலும், சிறப்பு

ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்

கலைப்புலி S தாணு தயாரிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, இந்துஜா, பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்த 60 வயது மாநிறம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரை பாராட்டியது பெருமைக்குரியது.   60 வயது மாநிறம் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருப்பது கூடுதல் சிறப்பு. 

Top
error: Content is protected !!