You are here
Home > Posts tagged "Kathir"

டிசம்பர் 6ல் வெளியாகிறது  ‘ஜடா’

"தி பொயட் ஸ்டுடியோஸ்" தயாரிப்பில் அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியிருக்கும் படம் "ஜடா". "பரியேறும் பெருமாள்", " பிகில்" என அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து,  ரசிகர்களின் பாராட்டைப்பெற்று வரும்  கதிர் இப்படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கிறார். யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்க, ஒளிப்பதிவை  ஏ.ஆர்.சூர்யாவும், எடிட்டிங்கை  ரிச்சர்ட் கெவினும் செய்துள்ளனர். வட சென்னையில் வசிக்கக் கூடிய இளைஞர்களின் பெருங்கனவுகளில் ஒன்றான கால்பந்தாட்டத்தினை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. விஜய் நடிப்பில் கால்பந்தாட்டத்தினை மையமாக வைத்து வெற்றிபெற்ற "பிகில்" படத்திலிருந்து முற்றிலும் இந்தப் படம் மாறுபட்டது என்கிறார் இயக்குநர் குமரன். மேலும் 'ஜடா' படம் குறித்து இயக்குநர் குமரன்  மேலும்   கூறுகையில், "தமிழ் இளைஞர்களுக்கு பிடித்த விளையாட்டுகளில் ஒன்றாக கால்பந்து மாறி வருகிறது. பலர் இந்திய அளவில் விளையாடக் கூடிய திறமை பெற்றவர்களாக இருந்தாலும், சில காரணங்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வருகிறார்கள். இந்த எதார்த்தமான உண்மையைக் கொண்டே இப்படத்தினை உருவாக்கியிருக்கிறோம். திறமையிருந்தும் புறக்கணிக்கப்படும் ஒரு இளைஞன், அதே விளையாட்டு சூதாட்டத்திற்குள் போய் அடுத்து என்னவாகிறான்? என்பதே கதை. இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிராத 7's கால்பந்தாட்டத்தை காட்ட இருக்கிறோம். நிச்சயமாக இந்தப்படம் ஒரு புதிய அனுபவமாக இருக்கும். கதிர், யோகிபாபு காம்பினேசனில்

Bigil Movie Images

Bigil Movie Images 'Bigil' (Whistle) is an upcoming  Tamil language sports action film. written and directed by Atlee and produced by Kalpathi S. Aghoram under the banner AGS Entertainment The film stars Vijay and Nayanthara in leading roles  

புதிய சாதனை படைத்த விஜய்யின் ‘பிகில்’

Trailer of Vijay's Bigil has hit 10.5 million likes inn few hours அட்லீ இயக்கத்தில் விஜய், நயந்தாரா நடித்துள்ள படம் 'பிகில்'. திட்டமிடப்பட்டிருந்த பட்ஜெட்டிற்கு மேலாக இந்தப்படத்தை தயாரித்துள்ளனர் ஏஜிஎஸ் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம்,கல்பாத்தி எஸ். கனேஷ்,கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர். 'பிகில்' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ள ஸ்கிரீன் சீன் நிறுவனம் தீபாவளியன்று வெளியிடுகிறது. 'பிகில்' படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 12-ம் தேதி மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியிடப்பட்டது. https://twitter.com/vivekoberoi/status/1183313922113191941 இணையத்தில் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் சுமார் 10 மில்லியன் பார்வைகள் பெற்று புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. பாலிவுட் பிரபலங்கள், ஷாரூக் கான், வருண் தவான், கரண் ஜோஹர், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலரும் ட்ரெய்லரை பார்த்து 'பிகில்' படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். https://twitter.com/iamsrk/status/1183023879171690498 'பிகில்' படத்தின்  தணிக்கை செய்யும் பணிகள் முடிந்த நிலையில் படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 'பிகில்' படத்தை மிகப்பெரிய அளவில் சீனாவில் வெளியிட ஏஜிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பிரபாசால் தள்ளிப்போகும் ‘காப்பான்’ ரிலீஸ்!

'லைகா புரொடக்ஷன்ஸ்' தயாரித்து கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, ஆர்யா, சயீஷா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி ஆகியோர் நடித்துள்ள அதிரடி ஆக்‌ஷன் படம் 'காப்பான்'. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'காப்பான்' தெலுங்கில் 'பந்தோபஸ்த்' என பெயரிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. https://youtu.be/p4JwLeGR6no பிரபாஸ், ஷ்ரத்தா நடிக்க சுஜித் இயக்கத்தில்  தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மிக பிரம்மான்டமாக  உருவாகியுள்ள 'சாஹோ'. படமும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாவதால் தெலுங்கு திரைப்பட விநியோகஸ்தர்கள் சூர்யாவின் 'காப்பான்' படத்தை வெளியிட தயக்கம் காட்டியுள்ளனர். https://youtu.be/r6pE_WZLY1Y இதனால் விநியோகஸ்தர்களின் விருப்பப்படி 'காப்பான்', 'பந்தோபஸ்த்' படங்களின் வெளியீட்டு தேதி தற்போது செப்டெம்பர் 20 ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கதிர் நடிக்கும் ” ஜடா” படத்தின் டப்பிங் துவங்கியது.

"பரியேறும் பெருமாள்" வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கதிர் நடித்திருக்கும் திரைப்படம் "ஜடா". அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தினை "பொயட் ஸ்டுடியோ" மற்றும் "சனா ஸ்டுடியோ" நிறுவனத்தினர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தில் நடிகர் கதிர் கால்பந்தாட்ட வீரராக நடித்திருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரன் ஒருவனின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளையும், சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளையும் பேசுகிற படமாக இதனை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர். படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்ட நிலையில், இப்போது படத்தின் டப்பிங் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஏ.ஆர்.சூர்யா பணியாற்றியுள்ளார். ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு செய்துள்ளார். சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை விரைவில் வெளியாக இருக்கிறது.

செல்லப்பிராணிகளால் வைரலாகும் “பரியேறும் பெருமாள்”.

பொதுவாக திரைப்படங்கள் வெளியாகும்போது அதை சினிமா ரசிகர்களிடமும் மக்களிடமும் கொண்டு சேர்க்க பலவகையான விளம்பர உத்திகளை செய்வார்கள். அதில் அந்தந்த படங்களில் நடித்த, நடிகர் நடிகையர் கலந்து கொள்வார்கள். அல்லது நடிகர் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து புதுமையான விளம்பரங்கள் செய்வார்கள். ஆனால் பலவகையான க்யூட்டான செல்லப்பிராணிகளால் வைரலாகிக்கொண்டிருக்கிறது, பரியேறும் பெருமாள் திரைப்படம். பரியேறும் பெருமாள் படத்தில் கருப்பி எனும் நாய், கதாநாயகன் கதிரின் நண்பன் என்று சொல்லும் அளவுக்கு முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கிறது. அதை வைத்து பரியேறும் பெருமாள் பெட் (#PariyerumPerumalPet) என்ற ஹேஷ்டேக்குடன் உங்கள் வீட்டு செல்லப்பிராணிகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுங்கள் என்று பரியேறும் பெருமாள் படக்குழுவினர் அழைத்தார்கள். அதனைத்தொடர்ந்து சினிமா பிரபலங்கள் உள்பட உலகமெங்கிலும் உள்ள பலர் தங்கள் வீட்டு செல்லப்பிராணிகளுடன் புகைப்படம் எடுத்து அந்த செல்லப்பிராணிகளுக்கும் அவர்களுக்கும் உள்ள சுவாரஸ்யமான உறவையும் பற்றி பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகும் பரியேறும் பெருமாள் திரைப்படம் செல்லப்பிராணிகளால் உலக அளவில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.

Pariyerum Perumal Making Video

Pariyerum Perumal 2018.is an Most Expected upcoming  Tamil language drama film. written and directed by Maari Selvaraj. Produced by Pa. Ranjith, the film stars Kathir and Anandhi in the leading roles, with Yogi babu in a supporting role. The film features music composed by Santhosh Narayanan. Pariyerum Perumal will Release on 28th September 2018. https://youtu.be/zhIFFEZun7o  

Top
error: Content is protected !!